ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் Phoenix, Arizona, USA 62-0121E 1சகோதரன் எட்வர்ட் அவர்களே உங்களுக்கு நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மாலை வணக்கம் நண்பர்களே. இன்றிரவு இங்கே மீண்டுமாக இந்த ஜக்கிய கூடாரத்தில் இருப்பது நிச்சயமாகவே ஒரு சிலாக்கியமாய் உள்ளது. நான் இந்தப் பிற்பகல் அந்தக் கூடாரம் எங்கே காணப்படுகிறது என்று காணும்படி சென்றபோது, நான் “ஐக்கியம்” என்ற இந்த வார்த்தையைக் கண்டேன், அது எனக்கு ஏற்புடையதாயிருந்தது. சகோதரன் எட்வர்ட், நான் அதை விரும்புகிறேன். ஐக்கியம், அதைத்தான் நாம் இங்கே உள்ளே விசுவாசிக்கிறோம். கர்த்தரோடிருக்கும்படியாகப் பரலோகம் சென்றுள்ள என்னுடைய பண்டைய நண்பர் பண்டிதர் F.F. பாஸ்வர்த் அவர்களை உங்களில் அநேகர் அறிந்திருப்பீர்கள். உங்களில் அநேகர் அவரை அறிந்திருப்பீர்கள். மிகவும் தீரமான ஆத்துமாவைக் கொண்ட அவர் இங்கே பீனிக்ஸில் என்னோடு ஒருமுறை இருந்தார் என்று நான் நினைக்கிறேன். அவர்...... ஒரு.... அவர் ஒரு பண்டையப் பரிசுத்தமான மனிதராய் இருந்தாலும், அவர் ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவராய் இருந்து வந்தார். ஒருமுறை அவர் என்னிடத்தில் சொன்னார், அவரே கூறினார்....... நான் ஐக்கியத்தைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாம், ஐக்கியம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான், “நல்லது, சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, நான் அதை இவ்வண்ணமாய் கருதுகிறேன்” என்றேன். அப்பொழுது அவர், “அது ஒரு பாய்மரக் கப்பலில் இரண்டு நபர்கள் இருப்பதாகும்” என்றார். ஆகவே அது ஏறக்குறைய சரிதான், அதாவது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாய்ப்பினை பகிர்ந்துகொள்ளுதல். 2உங்களில் அநேகர் சகோதரன் பாஸ்வர்த் அவர்களை அறிந்திருப்பதைக் குறித்து உங்களுடைய கரங்களை மேலே உயர்த்தினதை நான் கண்டேன். நீங்கள் அவரை அறிந்திருக்கின்றபடியால், அவர் இங்கே பூமியின் மேல் இருந்தபோது கூறின அவருடைய கடைசி வார்த்தையைக் குறித்துப் பேச விரும்புகிறேன். நான் பிறப்பதற்கு முன்பே, அவர் இங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டும், வியாதியஸ்தருக்காக ஜெபித்துக்கொண்டுமிருந்தார். எனவே அவருக்கு என்ன வயது இருந்திருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஏறக்குறைய எண்பத்தைந்து வயதிலும் கர்த்தர் அவரை ஜீவிக்கும்படி அனுமதித்தார், அவர் மரிக்கும்போது ஒரு தீரமான வயோதிப மனிதராகவே அப்பொழுதும் இருந்தார் என்றே நான் நினைக்கிறேன். 3அவருக்கு எழுபத்தைந்து வயதிருக்கும்போது, நானும் அவரும் மியாமி என்ற இடத்தில் உள்ள எட்ஜ்மன்ட் உணவு விடுதியில் இருந்தோம்..... என்று நான் நினைக்கிறேன். அப்பொழுது நாங்கள் எங்களுடைய - எங்களுடைய இரவு உணவினைப் புசித்துவிட்டு, சமுத்திர அலைகள் வருவதையும், சந்திரோதயத்தையும் கவனித்துப்பார்க்கும்படிக்கு கடற்கரைக்கு நடந்து சென்றோம். கிட்டத்தட்ட நாற்பது வயதுடையவனாய், என் தோள்பட்டைகள் தொங்கினவனாக, அந்தவிதமாக நடந்து சென்றேன். ஆனால் அவரோ ஏறக்குறைய எழுபத்தைந்து வயதிலும் அவரால் முடிந்தளவு அவ்வளவு நேராக நிமிர்ந்து நடந்து வந்தார். நான் அவரைப் பார்த்து வியப்புற்றேன். அப்பொழுது நான், “சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவர், “சரி, கேளுங்கள், சகோதரன் பிரான்ஹாம்” என்றார். அப்பொழுது நான், “நீங்கள் எப்பொழுது மிகச் சிறப்பாய் இருந்தீர்கள்?” என்று கேட்டேன். அப்பொழுது அவர், “இப்பொழுதுதான்'' என்றார். நல்லது, அப்பொழுது நான் என்னைக் குறித்து வெட்கமடைந்ததை உணர்ந்தேன். அவர், ”நான் ஒரு குழந்தையாய் பழைய வீட்டில் வசித்ததை நீங்கள் மறந்துவிட்டீர்கள்“ என்று கூறினார், இதை அவர் கூறினார். அது பாஸ்வர்த்தாய் இருந்தது. 4அவர் கர்த்தரை சந்திக்கும்படியாய் மரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நான் கேள்விப்பட்டபோது, நான் என்னுடைய காரிலிருந்த டயர்கள் ஏறக்குறைய தேய்வுற்று கிழிந்தேபோகுமளவிற்கு வேகமாக மியாமி என்ற இடத்திற்கு அவரைக் காணச் சென்றேன். நானும் என்னுடைய மனைவியும் அங்கு சென்றபோது...... பாஸ்வர்த் அவர்களின் குடும்பத்தினரும், எங்களுடைய குடும்பத்தினரும் மகத்தான நண்பர்களாய் இருந்து வந்திருந்தனர். நாங்கள் உள்ளே சென்றோம். பண்டையக் கோத்திரப் பிதாவோ ஒரு சிறு படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார். அவர் தன்னுடைய சிறிய வழுக்கைத் தலையை உயர்த்தி இந்தவிதமாக அவருடைய மெலிந்த கரங்களை என்னை நோக்கி நீட்டினார். அப்பொழுது என்னுடைய கன்னங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. நான் என்னுடையக் கரங்களில் அவரைப்பற்றிப் பிடித்துக் கொண்டேன். அப்பொழுது நான், “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே” என்று கதறியழுதேன். காரணம் பெந்தேகோஸ்தேக்களின் கால அசைவில் எப்போதுமே கனமான கௌரவத்தை செலுத்த வேண்டிய ஒரு வயோதிபர் இருந்திருப்பாரேயானால், அது சகோதரன் பாஸ்வர்த் அவர்களாகத்தான் இருந்தது. அவர் நிச்சயமாக அவ்வாறிருந்தார். அவர் ஒரு மகத்தான மலராய் இருந்தார். 5உங்களுக்குத் தெரியுமா? அதாவது அவர் என்னிடத்தில் முதலாவதாகக் கூற விரும்புகிற ஒரு சிறு கேலியானக் காரியத்தை நீங்கள் அறிவீர்களா? அதாவது நான், “சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, நீங்கள் சுகமடையப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இல்லை, சகோதரன் பிரான்ஹாம். நான் துவக்கத்திலிருந்தே சுகவீனமாய் இல்லையே” என்றார். மேலும் அவர், “நான் பரலோக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன்” என்றார். அப்பொழுது நான், “நல்லது, அது மிக அருமையாயுள்ளது'' என்றேன். அதற்கு சற்றுமுன்னர்தான் நானும் அவரும் ஆப்பிரிக்க ஊழியக்களத்திலிருந்து வந்திருந்தோம். அவர், “நான் இனியும் நீண்ட காலம் வாழ இயலாத அளவிற்கு மிகவும் வயோதிகனாய் இருக்கிறேன்” என்றார். மேலும் அவர், “நான் பரலோக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன்” என்றார். அப்பொழுது நான், “சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் எனக்கு கூற விரும்பும் அறிவுரை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “சுவிசேஷத்தோடு தரித்திரு” என்றார். மேலும் அவர், “உன்னால் முடிந்தளவு துரிதமாக ஊழியக்களத்திற்கு திரும்பிச் செல்” என்றார். பின்னர், “அதுவே என்னுடைய அறிவுரை” என்றார். 6நானோ தொடர்ந்து, “சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, நான் இன்னுமொரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவரோ, “சகோதரன் பிரான்ஹாம், அது என்ன?'' என்று கேட்டார். அப்பொழுது நான், “இப்பொழுது நீங்கள் கர்த்தருக்காக ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக அல்லது அதற்கு மேலாக ஊழியம் செய்திருக்கிறீர்கள்.'' என்றேன். எனவே நான், ”ஜீவியத்திலேயே உங்களுடைய மகிழ்ச்சியான நேரமாயிருந்தது எப்பொழுது?“ என்று கேட்டேன். அதற்கு அவரோ, “சரியாக இப்பொழுதே” என்றார். அப்பொழுது நான், “சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, நீர் மரித்துக்கொண்டிருக்கிறீர் என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டேன். அதற்கு உடனே அவர், “நான் மரிக்க முடியாதே. நான் அநேக ஆண்டுகளுக்கு முன்பே மரித்துவிட்டேனே'' என்றார். அதற்கு நான்........ அவர், ” சகோதரன் பிரான்ஹாம், கடந்த அறுபது வருடங்களாக நான் நேசித்திருக்கிற, அக்கறைகொண்டிருக்கிற யாவற்றிற்காகவும் எந்த நேரத்திலும் அவர் வந்து வாசலைத் திறந்து, என்னை அழைத்துக்கொண்டுபோக காத்துக்கொண்டிருக்கிறேன்“ என்றார். வாழ்க்கையின் சங்கீதத்தைக் (The Psalm of life) குறித்து நான் நினைத்துப் பார்க்கிறேன். நம்முடைய வாழ்க்கைகளை நாம் விழுமியதாக்க முடியும், மேலும் மாள்வுற்று, நமது அடிச்சுவடுகளைப் பின்னே, கால மணல்களின் மேல் விட்டுச் செல்கிறோம் என்பதை மாமனிதர்களின் வாழ்க்கைகள் அனைத்தும் நமக்கு நினைவூட்டுகின்றன. அவர் நிச்சயமாகவே அடிச்சுவடுகளை எனக்கு விட்டுச் சென்றார். 7அவர் மரிப்பதற்கு முன்னர் இல்லை மகிமைக்குள்ளாக செல்வதற்கு முன்னர், அவர் மரிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அல்லது அதற்கு இன்னும் அதிகமான நேரத்திற்கு முன்னர் இவ்வாறு நிகழ்ந்தது. அதாவது அவர் ஒரு சில மணி நேரங்களாக ஒருவிதமான உறக்கத்தில் இருந்து வந்தார். அப்பொழுது அவருடைய மனைவியும், அவருடைய குமாரர்களும், அவருக்கு அன்பானவர்களும் சூழ்ந்து நின்றுகொண்டிருக்க, இந்த வயோதிப மனிதர் சடுதியாய் எழும்பி, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, இறங்கி தரையிலே ஓடி, அநேக ஆண்டுகளுக்கு முன்பே மரித்துப் போயிருந்த தன்னுடையத் தாயாரோடும், தன்னுடையத் தகப்பனாரோடும் கரங்களைக் குலுக்கினார். அவர் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே ஜனங்களோடு கரங்களைக் குலுக்கி, “ இதுதான் சகோதரன் ஜான். ஆம். நீர் இல்லினாய்ஸ், ஜாலியட்டில் நடைபெற்ற என்னுடைய கூட்டத்தில் கிறிஸ்துவுக்குள்ளாக வந்தீர். இதோ சகோதரன்....” என்று கூறிக்கொண்டு, அநேக ஆண்டுகளுக்கு முன்னரே தன்னால் மனந்திரும்பி இரட்ச்சிக்கப்பட்டு மரித்துப்போயிருந்தவர்களோடு கரங்களைக் குலுக்கிக் கொண்டிருந்தார். 8நான் - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாம் இப்புவியிலிருந்து மற்றொன்றிற்குள்ளாக கடந்து செல்லும் அந்த வேளையில் என்றுதான் நான் நினைக்கிறேன், சில நேரத்தில் நான் நினைக்கிறேன்..... அப்பொழுது....... எப்படியாயினும் கடக்கப்போகிற ஆறு கடினமானதாயிருக்கப்போவதை நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது நம்முடைய கர்த்தர் ஒருக்கால் நம்முடைய அன்பார்ந்தவர்களிடத்தில், “ஆற்றண்டை போய், அவர்களை அங்கே கீழே சந்தியுங்கள்” என்று கூறுவார் என நான் நினைக்கிறேன். நாம் என்றோ ஒரு நாளில் நம்முடைய ஜனங்களோடு சேர்க்கப்படுவோம் என்று யாக்கோபு கூறினது போன்றேயாகும். நானும் கூட அந்த நாள் வருவதற்காகவே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். நான் இங்குள்ள இந்த ஜீவியத்தினூடான முடிவுவையடையும்போது, அல்லது தேவன் இங்கே என்னை முடிவுறச் செய்கிறபோது, ஒவ்வொரு புதர் நிலத்தினூடாகவும், ஒவ்வொரு குன்றினூடாகவும் ஏறிக்கடந்து சென்று என்னால் முடிந்தளவு நான் கைப்பற்றியுள்ள ஒவ்வொரு அரணையும் நான் கண்டு, நான் எங்கே இருந்து வந்திருக்கிறேன் என்பதை நான் திரும்பிப் பார்க்க விரும்புகிறேன். அப்பொழுது நான் ஆற்றண்டை வருவேன். நான் எப்பொழுதும் கூறியிருக்கிறது போன்றே, இங்குள்ள கருப்பு நிறத்தவர், அவர்கள் பாடுகிற ஒரு சிறு பாடல் ஒன்று உண்டு, அதாவது, “எனக்கு ஆற்றண்டையிலே எந்தத் தொல்லையும் இருக்க வேண்டாம்” என்பதாகும். எனவே நான் அவை எவ்வாவற்றையும் இப்பொழுதே சீர்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் பட்டயத்தை திரும்ப உறையிலேப் போட்டு, தலைச் சீராவைக் கழற்றி, அதை கடற்கரையிலே கீழே வைத்துவிட்டு, என்னுடையக் கரங்களை மேலே உயர்த்தி, “பிதாவே, ஜீவப் படகைக் கொண்டு வாரும். நான் இக்காலையில் பரம வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன்” என்று கூக்குரலிடுவேனாக. அப்பொழுது அவர் அங்கிருப்பார். கவலைப்படாதீர்கள். நான் அதை விசுவாசிக்கிறேன். நம் ஒவ்வொருவருடைய இருதயத்தின் வாஞ்சையும் அதுதான் என்றே நான் கருதுகிறேன். 9இப்பொழுது, இன்றிரவு இங்கே இந்த அருமையான மேய்ப்பனோடும், அவருடைய சபையோடும், இந்த அற்புதமான இந்த பீனிக்கிஸின் கடைமுனையில் கிறிஸ்துவுக்குள்ளான பரதேசிகளாயிருக்கிற இவர்களோடு இந்த அற்புதமான பணியில் இங்கிருப்பது உண்மையாகவே ஒரு மகத்தான சிலாக்கியமாயிருக்கிறது. உண்மையாகவே நாம் பரதேசிகளாயிருக்கிறோம். நாம் இங்கே அந்நியர்களும், பரதேசிகளுமாய் இருக்கிறோம். நாம் ஒரு நகரத்தை தேடிக்கொண்டிருக்கிறோம். 10நான் இந்தக் காலையில் இராஜரீக வித்து என்பதன் பேரில் சகோதரன் (Fuller) ஃபுல்லர் அவர்களுடையக் கூடாரத்தில் பேசிக்கொண்டிருந்தேன். இப்பொழுது, நீங்கள் ஒலிப்பதிவு கருவிகளை வைத்திருப்பீர்களேயானால், நான் அதை ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஆனால் இந்தக் காலையில் ஏதோ ஒரு காரியம் சம்பவித்திருந்தது, அதாவது நான்... நீங்கள் ஒரு ஒலிப்பதிவு கருவியை வைத்திருந்தால், அப்பொழுது அந்த ஒலிநாடாக்களில் ஒன்றை நீங்கள் வாங்கி கேட்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் அதை பராராட்டுவீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். சகோதரன் மெக்கொயர் ஆபிரகாமின் இராஜரீக வித்து என்ற அச்செய்தியின் ஒலிநாடாக்களை வைத்திருக்கிறார். புரிகிறதா? ஈசாக்கு மாம்சப்பிரகாரமான யூத வம்ச ஆபிரகாமினுடைய வித்தாய் இருந்தான். ஆனால் கிறிஸ்துவோ வாக்குத்தத்தத்தினூடாக இராஜரீக வித்தாய் இருந்தார். அந்த கிறிஸ்து தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்தலாயிருந்தார். அது இன்றைக்கு நம்முடைய இருதயங்களில் இருக்கிறபடியால் நாம்......... “நான்............. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்.” 11இப்பொழுது, நான் இங்கே அநேக முறை பீனிக்ஸில் இருந்து வந்துள்ள காரணத்தால், நான் இதைக் குறித்து வெளிப்படையாகக் கூறியிருக்கிறேன். இங்கே என்னுடைய முதல் வருகை முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பானதாய் இருந்தது. அப்பொழுது நான் ஷென்ஷா, 16-வது தெருவில் வசித்துக்கொண்டு, இங்கிருந்து விக்கின்பர்க் என்ற இடத்தில் இருந்து R என்ற மாட்டுப் பண்ணை வட்டாரத்தில் பணிபுரிந்தேன். அப்பொழுது நான் ஒரு சிறு பெண்ணோடு அங்கே 16-வது ஷென்ஹா என்ற இடத்திற்குச் சென்றுள்ளேன். அதன்பின்னர் அன்றொரு நாள் அந்த இடத்தைக்காண நான் சென்றிருந்தேன். ஆனால் இப்பொழுதோ ஷென்ஹா என்ற அந்த இடம் அப்பொழுது இருந்தவிதமாக சற்றேனும் காணப்படவில்லை. அது இப்பொழுது பளபளப்பான நகரமாய் உள்து. அது இங்கே பீனிக்ஸின் தலைநகர் பகுதியில் ஒரு பெரிய பட்டிணமாய் உள்ளது. ஒவ்வொரு காரியமும் அவ்வளவாய் மாற்றப்பட்டுள்ளது. 12நானும் மனைவியும் பீனிக்ஸை மீண்டும் பார்க்க தெற்குப்புற மலைக்குச் சென்றிருந்தோம். சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே அநேகமாக ஓநாய்கள், கற்றாழைகள் முதலியவைற்றைத் தவிர வேறோன்றுமே இருந்திருக்காது என்பதை நான் எண்ணிப்பார்த்தேன். இப்பொழுதோ அது ஒரு மகத்தான நம்பமுடியாத நகரமாய் உள்ளது. அப்பொழுது நான், “தேனே, இது மாற்றமடைந்துள்ளதா அல்லது தாறுமாறாக்கப்பட்டுள்ளதா? உன்னுடைய விருப்பத்தை நீயே தெரிவிக்கலாம். ஆனால் எனக்கோ இப்பொழுது இது தாறுமாறாக்கப்பட்டிருக்கிறது. காரணம் இங்கு மது அருந்துதல், சூதாடுதல், புகைபிடித்தல், பொய்யுரைத்தல், திருடுதல், மதுபானக்கடைகள் மற்றுமுள்ள ஒவ்வொரு பொல்லாத காரியத்திற்கும் பதிலாக ஸ்திரிகளும், புருஷர்களும் தங்களுடையக் கரங்களை தேவனண்டை உயர்த்தி, தேவனைத் துதித்துக் கொண்டே வீதிகளில் நடந்துகொண்டும், சகோதர சகோதரரிகளைப் போன்று வாழ்ந்துகொண்டிருந்தால், அப்பொழுது இந்த மகத்தான கட்டிடங்கள் மற்றும் அழகான கட்டிட அமைப்புகளும் அருமையாய் இருக்கும். அவை எல்லாவற்றிற்கு மத்தியிலும், இருந்தபோதிலும்......” என்று கூறினேன். அப்பொழுது மனைவியோ என்னிடத்தில், “அப்படியானால் பில்லி, நீர் இங்கே எதற்காக இருக்கிறீர்?” என்று கேட்டாள். அதற்கு நான், “தேனே, ஆனால் நாம் இங்கே பதினைந்து நிமிடங்களாக இருந்தது முதற்கொண்டு, அந்தப் பள்ளத்தாக்கினூடாக எத்தனை பொய்கள் கூறப்பட்டுள்ளன? எத்தனை ஆணையுறுதிகள் கர்த்தருடைய நாமத்தில் வீணாய் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை சிகெரெட்டுகள் புகைக்கப்பட்டு, எத்தனை மதுபானங்கள் அருந்தப்பட்டுள்ளன? நாம் இங்கே இருக்கிற இந்தக் கொஞ்ச நேத்திற்குள் எத்தனை விபச்சாரங்கள் செய்யப்பட்டுவிட்டன?” என்று கேட்டேன். அதற்கு அவளோ, “அது மட்டுமீறியதாயிருக்கிறதல்லவா?'' என்றாள். பின்னர் நான், “தேனே, இந்தச் சூழலில் நாம் இங்கே என்னத்திற்காக இருக்கிறோம். நாம் இங்கே இருந்தது முதற்கொண்டு எத்தனை உண்மையுள்ள ஜெபங்கள் ஏ றெடுக்கப்பட்டுள்ளன? 'நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்'. இங்குள்ள இந்தச் சிறு சபைகளோடு நம்முடைய தோள்களைக் கொடுத்து, நம்மால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்து, அவைகள் தொடர்ந்து செயல்பட உதவி செய்வதற்காகவே நாம் இங்கிருக்கிறோம். ஒரு ...... இருக்க.....” என்றேன். 13நீங்கள் எல்லோரும், பரிசுத்தவான்களாகிய நீங்கள் எனக்கு ஓர் ஆசீர்வாதமாயிருக்கிறீர்கள். நான் இங்கே விஜயம் செய்வதில் உங்களுக்கு ஓர் ஆசீர்வாதமாய் இருப்பேன் என்று நான் நம்புகிறேன். நான், நான் இங்குள்ள பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், ஸ்தாபன அமைப்புகளுக்கும், பல்வேறுபட்ட சபைகளுக்கும் விஜயம் செய்ய, இங்கே பீனிக்ஸில் உள்ள பள்ளத்தாக்கினூடாக சகோதரர்கள் மூலம் வழியினைக் கண்டறிந்தபோது, என் இருதயம் எழுச்சியடைந்தது. அது நான் பேச வேண்டிய சிறப்புக் கூட்டத்திற்கு முன்னரே வந்து விடுகிறது. நான் கிறிஸ்தவ வர்த்தக புருஷர்களுடைய சிறப்புக் கூட்டத்திலே சனிக்கிழமை காலை சிற்றுண்டி வேளையிலும், அதன் பின்னர் பிற்பகல் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமையும் பேச வேண்டியுள்ளது என்று நினைக்கிறேன். அது இந்தச் சகோதரர்களோடு சந்திக்கும்படியான ஒரு சிலாக்கியமாகவே எப்பொழுதும் உள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு இருக்கைகளை கைவசம் உடையவர்களாயிருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். நாம் எல்லோருக்குமே போதுமான இடவசதி தாராளமாயிருக்கும். நான் உங்களை அங்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன். 14அதன் பின்னர் இந்த ஐக்கிய நேரத்தில் ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்குச் சென்று பேச வேண்டியதாயிருக்கிறது. நான் இக்காலையில் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரமாக என்னுடைய தொண்டையே கரகரப்பாய் போய்விடுமளவிற்கு பிரசங்கித்தேன் என்று நான் நினைக்கிறேன். அது குறுகிய நேரங்கொண்ட ஒன்றாயிருந்தது. நான் வழக்கமாக வீட்டில் நடைபெறும் கூட்டங்களிலும், சபையிலும், மூன்று அல்லது நான்கு மணிநேரத்திற்கு முன்னால் நிறுத்தவேமாட்டேன். நான் வெறுமென....... நான் ஒரு பிரசங்கி அல்ல. எனவே நான் - நான் கர்த்தருக்கு ஆனந்த சத்தமிடுகிறேன். நான் அதை மிக நன்றாகச் செய்ய விரும்புகிறேன். நான் - நான் அதை விரும்புகிறேன் என்று யூகிக்கிறேன். எனவே நான் அதை தொடர்ந்து செய்கிறேன். நான் நான்கு அல்லது ஐந்து வித்தியாசமான விளக்கிக் கூறும் முறைகளை உடையவனாக இருந்து வருவதால், நான் ஜனங்களை மிகத் தாமதமாகப் பிடித்து வைத்துக்கொள்கிறேன், எனவே அது உண்மைதான் என்பதையும் நான் அறிவேன். ஆனால் இன்றிரவு உண்மையாகவே நாம் இங்கிருந்து ஒரு மணிக்கு முன்பே வெளியேறிவிடுவோம். நான், நான் அதைக் குறித்து உங்களுக்கு ஏறக்குறைய உறுதியளிப்பேன். நான் சற்று, ஏறக்குறைய..... குறிப்பிடத்தக்க ஓர் அருமையான உணர்வின் ஆவியையும், ஒவ்வொரு காரியமும் அவ்வளவு மகிழ்ச்சியாயிருப்பதையும் உணருகிறேன். பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக நமக்காக ஓர் ஆசீர்வாதத்தை வைத்திருப்பார் என்று நான் நம்புகிறேன். 15இப்பொழுது, இப்பொழுது கூட்டங்களில் நான் எந்த சுகமளிக்கும் ஆராதனைகளையும் நடத்தியிருக்கவில்லை. நான்..... ஓர் இரவு.... அங்குள்ள சகோதரன் ...... இயேசுவின் நாமம், அந்த சபையின் போதகர் யார்? சகோதரன் அவுட்லா, சகோதரன் அவுட்லாவினுடைய சபையில், அங்கே அநேகர் ஜெபித்துக்கொள்ளப்பட வேண்டுமென்றிருந்தனர். நான் என்னுடைய மகனை சில ஜெப அட்டைகளைக் கொடுக்கும்படிக்குக் கூறியிருந்தேன். அதன் பின்னர் இரண்டு இரவுகளுமே பரிசுத்த ஆவியானவர் அவ்வளவாய் கட்டிடத்திற்குள் விழுந்ததை.... நீங்கள் எல்லோருமே அறிவீர்கள். நீங்கள் என்னுடையக் கூட்டங்களில் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் யாவருமே இருந்திருக்கிறீர்கள். எனவே பகுத்தறிதல் முதலியன எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் இப்பொழுது ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக அநேகர் திரண்டு கொண்டிருப்பதை நான் கவனித்துள்ளேன். நான் முதலாவது புதன் கிழமை மற்றும் வியாழக் கிழமை துவக்கத்திலேயே அதை கவனித்தேன். நீங்கள் சுகமளிக்கும் ஆராதனைகளை சபையில் நடத்தப் போவதாயிருந்தால், அப்பொழுது நான் ஞாயிற்றுக் கிழமைக்குப் பின்னரும் காத்திருக்கலாம் என்று எண்ணினேன். நீங்கள், பாருங்கள், ஒவ்வொரு நபரும் ஞாயிற்றுக் கிழமையில் உங்களுடைய ஆராதனை ஸ்தலத்திலே தரித்திருக்கும்படி அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த விஷேஷித்தக் கூட்டங்கள் இந்த சகோதரர்களோடு விஜயம் செய்வதாயிருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய ஆராதனை ஸ்தலங்களிலேயே தொடர்ந்து ஆராதிக்க நாங்கள் - நாங்கள் விரும்புகிறோம், ஏனென்றால் உங்களுடைய மேய்ப்பன் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். எனவே அங்குதான் நீங்கள் இருக்க வேண்டும். 16ஆகையால் அதன்பின்னர் - அதன்பின்பு நாளை இரவு, கர்த்தருக்குச் சித்தமானால், நான்..... நான் நினைக்கிறேன்..... நாம் நாளை இரவு எங்கே இருக்க வேண்டும்? (ஒரு சகோதரன், “டெம்ப் என்ற இடத்தில் உள்ள சகோதரன் ஓ' டோனெல் அவர்களுடைய சபையில்” என்கிறார். - ஆசி.) அரிசோனாவில் உள்ள டெம்ப் என்ற இடத்தில் உள்ள சகோதரன் ஓ' டோனெல். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சபையில் எந்த விஷேஷித்த காரியத்தையும் நிகழ்த்தப் போவதாயில்லையென்றால், நீங்கள் சுகவீனமான ஜனங்களை உடையவர்களாயிருந்தால், ஏன், நாளை இரவு நான் வியாதியஸ்தருக்காகக் ஜெபிக்கப்போகிறேன். வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வழக்கமான ஒரு ஜெபவரிசையை அமைத்துள்ளோம். அது ஒருகால் திங்கள், செவ்வாய் கிழமைகளில் இருக்கலாம். நாம் பார்ப்போம்..... எனக்கு உத்தேசிக்கப் பட்டுள்ளது....... எனக்குத் தெரியாது. புதன் கிழமை இரவும் கூட நான் ஏதாவது சபையில் பேசவிருக்கிறேனா? [“ஆம்”) புதன் கிழமை இரவும் கூட. அதன் பின்னர் இதனை...... அந்தச் சிறப்புக் கூட்டம் வியாழக் கிழமை துவங்குகிறது, அது சரிதானே? (ஒரு சகோதரன், “நான் அந்தக் காரியங்களை..... வைத்துள்ளேன்...... சிறப்புக் கூட்டமோ.....” - என்கிறார். - ஆசி.) சரி, சகேதாதரனே. இப்பொழுது அவர் அந்த அறிவிப்பைச் செய்வார். [“பாருங்கள், நாங்கள் இன்றிரவு இங்கிருக்கிறோம். நாளை இரவோ நாங்கள் டெம்ப் என்ற இடத்தில் உள்ள அசெம்பளீஸ் ஆஃப் காட் சபையில் இருப்போம். அதன் பின்னர் இருபத்தி மூன்றாம் தேதியன்று மவுண்ட்டன் வியூ மற்றும் சனிஸ்ஸோலப் என்ற இடத்தில் இருப்போம். அதன்பின்னர் இருபத்தி நான்காம் தேதியன்று சென்ட்ரல் அசெம்பளி என்ற இடத்தில் இருப்போம்.”] சரி, அது அருமையாயிருக்கிறது. [“நானே இவைகைளை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. நான் அதனை ஒருவிதமாகக் குழப்பிக்கொண்டேன்.” அதைக் குறித்து யோசிக்காதீர்கள். அன்றொரு நாள் “ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாததைக்” குறித்து நான் பேசிக் கொண்டிருந்தேன். 17அப்பொழுது சகோதரன் ஜேக் மூர் என்னிடத்தில், “நீர் அதிக ஞாபக மறதிகொண்டவராயிருக்கிறீர் என்று கருதுகிறீரா?” என்று கேட்டார். அதற்கு நானோ, “சகோதரன் ஜேக் அவர்களே, நான் பேசப் போகிறேன், ஆனால் நான் சற்றுமுன்னர் எதைக் குறித்து பேசிகொண்டிருந்தேன் என்பதையுங்கூட என்னால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை” என்று கூறினேன். அப்பொழுது அவரோ, “அது மோசமான நிலைமை என்று கருதிவிடாதீர்கள்” என்றார். மேலும் அவர், “நான் தொலைபேசியில் யாரோ ஒருவரை அழைத்து, நானே அவர்களிடத்தில், உங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்டேன்” என்று கூறினார். அதுதான் மிக மோசமானதே.................! எனவே, என்னே , அது நல்ல ஒரு பரிகாசமாய் இருக்கலாம், அதை இங்கே பிரசங்க பீடத்திலிருந்து கூறுவது சரியல்லவென்றே நான் எண்ணுகிறேன். ஆனால் எப்படியாயினும் தேவனுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியான பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் - நாம் அவ்வாறிருக்க விரும்புகிறோம். அது ஒருவிதமான அழகாய் இருந்ததை நான் எண்ணிப்பார்த்தேன். 18உங்களில் அநேகர் சகோதரன் ஜேக் மூர் அவர்களை அறிவீர்கள். அவர் லூசியானாவிலுள்ள ஷீரிவர்போட்டிலிருந்து வருகிறார், அவர் லைஃப் கூடாரத்தைச் சார்ந்த மிக அருமையான சகோதரன். அவர்தான் அதை என்னிடத்தில் அந்தவிதமாகக் கூறிக்கொண்டிருந்தார். அவர் ஒரு கட்டிட ஒப்பந்தக்காரராயுங்கூட இருக்கிறார். அவர், “சகோதரன் பிரான் ஹாம் அவர்களே, உங்களுடைய ஞயாபக மறதியை மோசம் என்று எண்ணிவிடாதீர்” என்றார். மேலும் அவர், “அன்றொரு நாள் நான் யாரோ ஒருவரை அவர்களுடைய தொலைபேசி எண்ணில் அழைத்தேன்” என்று கூறினார். பின்னர் அவர், “அவர்கள் அந்த அழைப்பிற்கு 'ஹலோ' என்று பதிலளித்தனர்” என்றார். அதற்கு இவர் “அவர்களிடத்தில் உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டதாகக் கூறினார். அப்பொழுது நான், “சகோதரன் ஜேக் அவர்களே, அதுவோ ஞயாபகசத்தி குறைந்துகொண்டே போகிறதாய்தான் இருக்கிறது” என்று கருதினேன். எனவே இப்பொழுது ஜெபித்துக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிற இந்த நண்பர்கள் தங்களுடைய ஜனங்களை உள்ளேக் கொண்டுவந்தால் நலமாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன், அப்பொழுது நாங்கள் அவர்களுக்காக ஜெபிப்போம். 19இப்பொழுது இன்றிரவு, இந்த அருமையான சிறிய சபையில் நான் என்ன பேசலாம் என்ற எண்ணத்தை உடையவனாய் நான் இருந்து வருகிறேன். மேலும் நான், “என்ன பேசலாம் என்றே எனக்குத் தெரியவில்லையே” என்று நினைத்தேன். நான் எடுக்கப்போகும் ஒரு சிறு பாடப் பகுதியில், கர்த்தர்தாமே வசனங்களை ஒன்று சேர்த்து கலந்து, யாருக்காவது உதவியாய் இருக்கக் கூடிய இடத்தில் அதை விழச் செய்வார் என்று நம்பியிருக்கிறேன்...... நாம் ஒரு போதும் ஒரு வேதப்பகுதியை எடுக்க முயற்சிக்கிறதில்லை. நான் எப்பொழுதுமே ஆவியினால் வழி நடத்தப்படுவதை உணர முயற்சித்து, பின்னர் சில வேத வசனங்களை ஒன்றாக எழுத முயற்சிக்கிறேன். அதன்பின்னர் கர்த்தர் வேறுவிதமாக வழி நடத்துவாரேயானால், அப்பொழுது அவர் வழிநடத்துகிறவிதமாகவே நான் செல்கிறேன். அந்த விதமாகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். நீங்கள் அவ்வாறு எண்ணவில்லையா? அதே விதமாகவே செய்வோம். 20இப்பொழுது உள்ளூர் சபை அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் இந்த ஒரு காரியத்தை நான் அறிவிக்க விரும்புகிறேன். அதாவது....... நீங்கள் உங்களுடைய மேய்ப்பருக்காகவும், உங்களுடைய அன்பார்ந்தவர்களுக்காகவும் ஜெபிக்கும்போது என்னை மறந்துவிடாதீர்கள் என்பதேயாகும், ஏனென்றால் நாம் பாதையின் முடிவிற்கு வந்துகொண்டிருக்கிறோம் என்பதை எப்பொதும் அறிந்திருந்ததைக் காட்டிலும் இப்பொழுது அதிகமாக அனுதினமும் தெளிவாக உணருகிறேன். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் நான் என்னுடைய தாயாரை அடக்கம்பண்ணினேன். அவர்களுடைய சுவாசத்தையும், அவர்களுடைய ஆத்துமாவையும் தேவன் பரலோகத்திற்கு கொண்டு செல்லும் வரையில் என்னுடையக் கரங்களில் அவர்களைப் பிடித்திருந்தேன். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்த அந்த தீரமுள்ள பெண்மணியின் மரணத்தையும், அவள் பாதையின் முடிவிற்கு வந்ததையும் நான் கவனித்துப் பார்த்தேன். அப்பொழுது நான், “ஓ, ஒவ்வொரு தாயாரும் அந்தவிதமாகவே இருக்க வேண்டும். அது உண்மையாகவே எதைப் பொருட்படுத்துகிறது என்பதை ஜனங்கள் புரிந்துகொள்ளும்படியாக..... என்னால் செய்ய முடிந்த ஏதோ ஒரு காரியத்தை நான் செய்ய வேண்டும்” என்று எண்ணினேன். 21நண்பர்களே, அது சற்று ஆழமானதாயிருக்கலாம் என்று நான் நிச்சயித்திருக்கிறேன். அது உண்மையாகவே என்னவாயுள்ளது என்பதைக் காட்டிலும் நாம் அதை மிகவும் ஆழ்ந்து கவனியாமல் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறோம் என்று நான் கருதுகிறேன். நாம் அதை நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தேவதூதர்களும் தேவனுடைய பார்வையில் சுத்தமில்லாதவர்களாய் காணப்படுமளவிற்கு அவர் அவ்வளவு பரிசுத்தமுள்ளவராயிருப்பாரானால், அப்பொழுது நாம் எப்படி காணப்படுகிறோம்? புரிகிறதா? அது உண்மை . ஆகையால் நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். தேவனோ சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா சூரியன்களையும்விட விஞ்சி ஒளிர்கிறவராய் அங்கே நித்தியத்தில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும். தூதர்களோ தங்களுடைய முகங்களை செட்டைகளால் மூடிக்கொண்டு, தங்களுடைய கால்களையும் செட்டைகளால் மூடிக்கொண்டு, அவருடைய பிரசன்னத்தில் பறந்து, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நாம் என்ன செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம்? ஆகையால் நாம்........ அதைத்தான் நாமும் செய்ய முற்சிக்கிறோம். 22நான் இதை அந்தவிதமாக உணருகிறேன், அதாவது தேவனுடைய இராஜ்ஜியமானது ஒரு மனிதன் வலையை எடுத்துக்கொண்டு, கடலுக்குச் சென்று, அதை எறிவதற்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு கூறினார். அவன் அந்த வலையை இழுத்தபோது, அவன் அதில் பலவகையானவைகளை எடுத்தான். ஆனால் உண்மையாகவே நல்ல மீன்கள் பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டன. மற்ற அழுகியதை உண்டு வாழும் தோட்டி மீனும், நன்னீர் நண்டு வகை போன்றவைகளும், பாம்புகளும், பல்லிகளும், உணவு ஆமை வகைகள் போன்றவை தண்ணீருக்குள் திரும்பிச் சென்றுவிட்டன. ஆனால் அவைகள் எல்லாவற்றையுமே சுவிசேஷ வலையானது பிடிக்கிறது. நாம்..... சகோதரன் ஆடம்ஸ் அவர்களே என்றோ ஒருநாள் நாமும் நம்முடைய கடைசி வலையை வீசும் நேரம் இருக்கும். அது உண்மை . அதில் எது மீன் என்றும், எது மீனல்ல என்றும் நானோ அல்லது நீங்களோ கூறுவதற்கில்லை. நாம் அறியோம். நாம் வெறுமென வலையை வீசியெறிந்து, அதனை இழுக்கிறோம். அவ்வளவுதான். தேவன் தமக்குச் சொந்தமானவர்களை அறிந்திருக்கிறார். “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.'' ஆகையால் நாம் வலையை வீசுவதற்கு மாத்திரமே காத்துக்கொண்டிருக்கிறோம். தேவன் அவருடைய இராஜ்ஜியத்திற்காக ஏதாகிலும் மீனை வைத்திருக்கிறாரா என்று காணும்படியாக உதவி செய்ய இன்றிரவு இங்கே சகோதரன் எட்வர்ட் அவர்களுடைய சபையில் நின்று இந்த இடத்திலே வலையை வீசுவது என்னுடைய சிலாக்கியமாயிருக்கிறது. 23இப்பொழுது நாம் வார்த்தையை வாசிப்பதற்கு சற்று முன்னர், நம்முடையத் தலைகளை நாம் வணங்கியிருக்கையில், நாம் சற்று நேரம் அப்படியே வார்த்தையின் ஆக்கியோனிடத்தில் பேசுவோமாக. நம்முடையத் தலைகள் வணங்கியிருப்பதோடு, இந்தப் புனிதமான நேரத்தில், தேவனாயிருக்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை நாம் அணுகிக்கொண்டிருக்கையில், இங்குள்ள எவரேனும் இந்த ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டும் என்று விரும்பி, தங்கள் இருதயத்தில் ஏதேனும் வேண்டுகோள்களை உடையவர்களாயிருக்கிறார்களா என்று நான் வியப்புறுகிறேன். அதனை உயர்த்தப்பட்ட ஒரு கரத்தின் மூலம் தெரியப்படுத்துங்கள். கர்த்தராகிய இயேசுவே, ஒவ்வொரு இருதயத்தையும் அறிந்தவரே, இந்தக் கூட்டத்தாரை நோக்கிப் பாரும். உமக்கு நன்றி. 24மிகுந்த கிருபையும், பரிசுத்தமுமுள்ள தேவனே, சர்வல்லமையுள்ளவரே, “சர்வவல்லமையுள்ளவர், மார்பகங்கொண்ட தேவன், பெலனளிப்பவர், பலவீனரைப் போஷிப்பவர்” என்னும் நாமத்தில் ஆபிரகாமுக்கு பிரசன்னமானவரே, பிதாவே இன்றிரவு எங்களண்டை வாரும். நாங்கள் எங்கள் பலவீனங்களையும், எங்களுடையத் தவறுகளையும் தெளிவாக உணருகிறோம். நாங்கள் எங்களுடையப் பாவங்களை உமக்கு முன்பாக அறிக்கை செய்து, அவைகளை உம்முடைய நியாயத்தீர்ப்பின் வெண்கல பலிபீடத்தின் மேல் வைத்து, நாங்கள் படைக்கும் பலியில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவைகளை எடுத்துப்போட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். ஓ, தேவனே, அதை அருளும். நாங்கள் எங்களுடைய ஜீவியங்களையும், எங்களுக்குண்டான எல்லாவற்றையும், எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற சிறு தாலந்தையும் சமர்ப்பிக்கிறோம். கர்த்தாவே, தேவனுடைய மகிமைக்காக அதை உபயோகியும். இந்தச் சபையையும், இதனுடைய அருமையான மேய்ப்பரையும், உதவிக்காரர்களையும், தர்மகர்த்தாக்களையும், நிர்வாகக் குழுவினர் யாவரையும், “ஐக்கியம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த சபைக்குள்ளாக வருகிற ஒவ்வொரு அங்கத்தினரையும் ஆசீர்வதியும், தேவனே புருஷரும், ஸ்திரிகளும் இந்த ஸ்தலத்தின் வாசலுக்குள்ளே நடந்து வருகையில், கட்டிடத்தின் உட்புறத்திலுள்ள அருமையான பரிசுத்த ஆவியானவரின் ஒழுங்கினிமித்தமாக அவர்கள் திடநம்பிக்கைகளில் உறுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அதை அருளும். 25எங்களுடையப் பாவங்களையும், எங்களுடைய அக்கிரமங்களையும் மன்னிக்கும்படி நாங்கள் மீண்டும் வேண்டிக்கொள்கிறோம். தங்களுடையக் கரங்களை உயர்த்தினவர்களை நினைவுகூரும். கர்த்தாவே, அந்தக் கரத்தின் கீழே உம்மிடத்திலிருந்து ஏதோ ஒரு காரியத்தை பெற்றுக் கொள்ளும்படியான ஓர் இருதயப்பூர்வமான வேண்டுதல் இருந்தால், அதை ஒருகால் நீர் மாத்திரமே அளிக்க முடியும். பிதாவே நீர் அதை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்களுக்கு என்னவெல்லாம் தேவையாயிருக்கிறதோ அவைகளை அவர்களுக்கு ஏராளமாய்த்தாரும். கர்த்தாவே, எவரேனும் சுகவீனமாயிருந்தால், அவர்களை குணப்படுத்தும், எவரேனும் வழியருகே விழுந்து போயிருந்தால், அந்த தளர்ந்த முழங்காலை, அந்த ஒருவரை பலப்படுத்தும். “அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலுமிருப்பார்”. அவர் நெரிந்தநாணலை ஒருபோதும் புறக்கணிக்கமாட்டாரே; ஆனால் அதை சரிசெய்வாரே. பரலோகப் பிதாவே நொருங்குண்ட ஆவியையுடையவர்கள் அல்லது தன்னம்பிக்கையிழந்து போனவர்கள் அல்லது தொங்கிக் கொண்டிருக்கிற தளர்ந்த கரங்களையுடைவர்கள், வீங்கின முழங்கால்களையுடையவர்கள் எவரேனும் இருந்தால், அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே, அவர்கள் இன்றிரவே தூக்கியெடுக்கப்படுவார்களாக. பரிசுத்த ஆவியானவர் வந்து எங்களுடைய இருதயங்களையும், ஆவிகளையும், எங்களுடைய மாம்சப்பிரகாரமான சரீரங்களையும் குணப்படுத்துவாராக. நாங்கள் அதற்காக அவருக்கு எல்லாத் துதியையும் செலுத்துவோம். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 26நீங்கள் வேதவாக்கியத்திற்குத் திருப்ப விரும்பினால், சுமார் முப்பது நிமிடங்கள் பேசுவதற்காக, நீங்களும் என்னோடு சேர்ந்து வெளிப்படுத்தின விஷேச புத்தகம் 19-ம் அதிகாரத்திலிருந்து வாசிக்கும்படி நான் விரும்புகிறேன். நான் 7-வது வசனத்தையும் உள்ளடக்கியவாறே வாசிக்க விரும்புகிறேன். இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள் : அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத் தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். மறுபடியும் அவர்கள் : அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி , சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள். மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே; அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது. அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல் போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலுயா , சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். நாம் சந்தோஷப்படுட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் என்பதைக் குறித்த பொருளின் பேரில் இன்றிரவு பேச விரும்புகிறேன். நாம் இந்த வேதப் பகுதியை மிகவும் நன்கு அறிந்துள்ளோம். இங்குள்ள உங்களுடைய அருமையான போதகர் இந்தப் பொருளை அநேக முறை அணுகிப் பேசியிருக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை. 27அதாவது ஒரு மணவாட்டி இருக்கப் போகிறாள் என்பதையும், ஆகாயத்தில் ஒரு கலியாண விருந்து பரிமாறப்படப் போகிறதாயிருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். அது தேவனைப் போன்றே, அவ்வளவு நிச்சயமாய் இருக்கப்போகிறது, ஏனென்றால் அது அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. அந்த மணவாட்டியாய் ஒன்று கூடப் போகிறவர்களே அவருடைய சபையாயிருக்கப் போகிறார்களென்றும், அவர்களே அவருக்கு முன்பாக கரைதிறையற்றவர்களாய் பிரசன்னமாகப் போகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். அவர்கள் இப்பொழுது தங்களை ஆயத்தம் செய்து கொள்ளும்படியாகப் பூமியின் மேல் மூலப்பொருள்களை உடையவர்களைாயிருக்கிறார்கள். நீங்கள் கவனிப்பீர்களேயானால், “அவள் தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்றே கூறப்பட்டுள்ளது. அநேகர், “கர்த்தர் இந்தப் பொல்லாத ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடுவாரேயானால், குடிப்பழக்கத்தை அல்லது சூதாடுதலை அல்லது பொய்யுரைத்தலை அல்லது களவாடுதலை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடுவாரேயானல், நான் அவரைச் சேவிப்பேன்” என்கிறார்கள். 28ஆனால் அது உங்களைப் பொறுத்ததாயுள்ளது. நீங்களும்கூட ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். “ஜெயங்கொள்ளுகிறவர்கள் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்”. ஜெயங்கொள்ளுகிறவர்கள். அதைச் செய்ய உங்களுக்கு வல்லமை உண்டு, ஆனால் அதை நீங்கள் மனப்பூர்வமாய் விட்டுவிட வேண்டியவர்களாய் இருக்க வேண்டும். புரிகிறதா? “அவள் தன்னை ஆயத்தம்பண்ணினாள்.'' எனக்கு அந்த வசனம் பிடிக்கும். நீங்கள் பாருங்கள், தேவன் நம்மை ஒரு சிறு குழாயினூடாக ஒரு முனையில் நுழைத்துத் தள்ளி, மறுமுனையில் நம்மை வெளியே இழுத்துவிட்டு, பின்னர், “ஜெயங்கொள்ளுகிறவன் பாக்கியவான்'' என்று கூற முடியாது. உங்களிடம் ஜெயங் கொள்ளுவதற்கு ஒன்றுமேயில்லாதிருந்தது; அவரோ ஒரு முனையிலிருந்து மறுமுனையினூடாகத் தள்ளினார். ஆனால் நீங்களே உங்களுக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். நானே எனக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதைச் செய்வதில் நாம் நம்முடைய விசுவாசத்தையும், மரியாதையையும் தேவனண்டைக் காண்பிக்கிறோம். 29ஆபிரகாமிற்கு ஒரு குழந்தை வாக்களிக்கப்பட்டது, ஆனால் அவன் இந்த வாக்குத்தத்தத்தை இருபத்தைந்து ஆண்டுகளாக விடாமல் பற்றிக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று, அந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவனுக்கு நன்மைத் தீமைகளைக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளும், சோதனைகளும் உண்டாயிருந்தன. ஆனால் அவனோ வாக்குத்தத்தத்தின் வார்த்தையைப் பற்றிக்கொண்டிருந்தான். ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த தேசம் இஸ்ரவேலுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் அதனுடைய ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராட வேண்டியதாயிருந்தது. தேவன் யோசுவாவினிடத்தில் “உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் நான் உங்களுக்கு கொடுத்திருக்கிறேன்” என்றார். அவையாவும் அங்கே இருந்தன. தேசமோ அங்கே இருந்தது, தேவனோ அதை அவர்களுக்கு கொடுத்துவிட்டிருந்தார். ஆனாலும் அவர்கள் அதற்காகப் போராட வேண்டியதாயிருந்தது. 30தெய்வீக சுகமளித்தலைக் குறித்ததும் அதே விதமாகவே உள்ளது. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள தைரியத்தைப் பெற்றிருந்தால், உங்களைக் குணப்படுத்த தேவன் வல்லமையை உடையவராயிருக்கிறார். ஆனால் நீங்கள் அந்த வழியின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் போராட வேண்டும். உங்களை இரட்சிக்க தேவன் வியத்தகு கிருபையை உடையவராயிருக்கிறார், அவர் அதைச் செய்வார். ஆனால் நீங்கள் உங்களுடைய வழியின் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராட வேண்டும். நான் முப்பத்தியொரு ஆண்டுகளாக இந்தப் பிரசங்கப் பீடத்திற்கு பின்னாக நின்று வருகிறேன். தொடர்ந்து அதனுடைய ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராடிக்கொண்டே வந்திருக்கிறேன். அது நிச்சயமாக அவ்வாறே இருக்கிறது. “நாம் ஆளுகை செய்ய வேண்டுமானால், நாம் போராட வேண்டும்.'' ஆகையால் மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணிக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது என்பதை நாம் கண்டறிகிறோம். ”நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடும்படிக்கு, நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாரமான யாவற்றையும் தள்ளிவிட சித்தமுள்ளவர்களாயிருப்போம்.“ நாமே அவைகளை நமக்காகத் தள்ளிவிட வேண்டும். எனவே நாம், ”தேவனே, நீர் வந்து அவைகளை எங்களுக்காகத் தள்ளிவிடும்“ என்று கூற முடியாது. நாம்தான் அதை நமக்காகச் செய்ய வேண்டும். 31இப்பொழுது, நான் விவாகங்களைக் குறித்து எண்ணிப்பார்க்க விரும்புகிறேன். ஒரு சில ஜனங்களுக்கு விவாகங்களை செய்து வைக்கும் சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது. நான் ஒரு வாலிபனையும், ஒரு வாலிபப் பெண்ணையும் பீடத்தண்டை கொண்டு வரும்போது, சபையினூடாக அவர்கள் வருவதைக் காண்பதைக் குறித்து நான் எண்ணிப்பார்க்கிறேன். அவள் தன்னுடைய கலியாண வஸ்திரத்தோடு, அழகாக, அவளுடைய முகத்தின்மேல் முக மறைப்பு மென்திரை தொங்கிக்கொண்டிருக்க, மணவாளனோ ஒழுங்கான ஆடை அணிந்து வாலிபமாக முழு வீரியங்கொண்டவனாயிருக்க, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் மிகச் சிறப்பான நேரத்தில் அங்கே நடந்து வந்து அந்த விவாக உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறார்கள். அப்பொழுது அதைக் குறித்த இனிமையான ஏதோ ஒரு காரியம் உண்டு என்றே நான் எண்ணுகிறேன். அது புனிதமான ஒரு காரியமாயிருக்கிறது, ஏனென்றால் அதுவோ கிறிஸ்துவினுடைய மணவாட்டி மகிமையின் தாழ்வாரங்களில் நடந்து செல்லும்போது, என்றோ ஒரு நாள் மற்றொரு மகத்தான விவாகம் உண்டாயிருக்கும் என்பதையே எனக்கு நினைவூட்டுகிறது. மணவாளன் ஒவ்வொரு காரியத்தையும் ஆயத்தம் செய்திருப்பார். அப்பொழுது ஒரு கலியாணமும், கலியாண விருந்தும் இருக்கும். அப்பொழுது நாம் மேஜையின் அருகே அமர்ந்து, ஒருவரோடு ஒருவர் கரங்களைக் குலுக்க, கண்ணீர் நம்முடைய கன்னங்களிலிருந்து வழிந்தோடுவதைக் குறித்து எண்ணிப்பார்க்க எப்படியாய் நாம் பற்றார்வங்கொள்கிறோம். அப்பொழுது அவர் வந்து, நம்முடைய கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துவிட்டு “அழ வேண்டாம். இப்பொழுது யாவும் முற்றுபெற்றாயிற்று. உலகத்தோற்ற முதற்கொண்டே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள்'' என்று கூறப்போவதை எண்ணிப்பாருங்கள். ஓ, சகோதரனே, அது நம்மை ஒருவருக் கொருவர் அதிகமாக அன்புகூரச் செய்யும். 32சபையோடு உள்ள காரியம், அதாவது இன்றைய மணவாட்டியோ, கிறிஸ்துவுக்குள் விசுவாசமாயிருக்கிற எல்லா சபைகளிலுமிருந்து உருவாக்கப்படுகிறாள் என்று நான் நினைக்கிறேன். அது சபைக் கட்டிடமல்ல, அல்லது அது ஸ்தாபன அமைப்போ அல்லது ஸ்தாபனமோ அல்லாமல் அது சபையிலிருக்கிற தனிப்பட்ட நபர்களே மணவாட்டியாக உருவாகிறார்கள். 33எனக்கு கென்டக்கியில் உள்ள லூயிவில்லில் டாக்டர் வால்ஸ் காபெல் என்ற ஒரு நல்ல நண்பர் உண்டு. அவர் கிறிஸ்துவின் சபை என்ற பெயரிடப்பட்ட சபையின் ஊழியக்காரராயிருந்து, இங்கு வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார். மகத்தான மேய்ப்பர்களில் ஒருவராயிருந்து லூயிவில்லில் உள்ள சபைகளிலேயே மிகப்பெரிய சபையை திறந்த வாசல் என்னும் பெயரில் வைத்திருந்தார். அவர் எனக்கு மிக அருமையான ஒரு நண்பராய் இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் நான் வீதியில் நின்றுகொண்டிருந்தபோது, அவரும் வீதியில் வந்து கொண்டிருந்ததை நான் கண்டேன். நான் எப்பொழுதுமே அவரை நேசிப்பதுண்டு. அவரும் என்னை நேசித்து வந்தார். ஆனால் ஒரு நாள் அவருக்கு தொண்டையில் நாவின் அடியில் வளர்ந்திருந்த சதைவீக்க அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அப்பொழுது அவருக்கு மரணத்திற்கேதுவாக இரத்தம் கசிந்து வந்து கொண்டேயிருந்தது. அவர்கள் அவரை அங்கிருந்த செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் சேர்த்துவைத்திருந்தனர். ஆனால் அவர் மரித்துகொண்டிருக்கிறார் என்றே அவர்கள் கூறிவிட்டனர். அப்பொழுது திருமதி. மக்ஸ்பேடன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து, “டாக்டர். வால்ஸ் காபெல் என்பவரை எனக்கு இதுவரையிலும் தெரியாது. ஆனால் திறந்த வாசல் என்னும் பெரிய சபை ஒன்று அங்குள்ளது என்பதை நான் அறிவேன்” என்று கூறினார். மேலும், “அவர் மரித்துக்கொண்டிருக்கிறார். மருத்துவர்களோ சில ஊசிகளை அவருக்குப் போட்டு மற்ற எல்லாக் காரியங்களையும் செய்திருக்கிறார்கள். அவர்கள் அவருக்கு தையல் போட்டிருக்கிறார்கள். அவருக்கோ தொடர்ந்து இரத்தப்பெருக்கு இருந்துவருகிறபடியால், அவர்களால் அந்த இரத்தத்தை தடுத்து நிறுத்த முடியவில்லையாம். அவருடைய இரத்தமோ உறையவில்லையாம், எனவே இரத்தத்தை நிறுத்துவதைக் குறித்ததை நீங்கள்தான் அறிவீர்களே” என்றாள். மேலும் தொடர்ந்து, “அங்கே அவர்கள் மிஷினெரிமார்களை அழைத்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் வந்து அவருக்காக ஜெபிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்” என்று கூறினாள். 34நான் டாக்டர். வால்ஸ் காபெல் அவர்களைக் குறித்து கேள்விப்பட்டிருந்தேன். ஆயினும் நான் ஒருவிதமாக சற்று விருப்பமில்லாதவனாயிருந்தேன். ஆனாலும் நான் அங்கு சென்றேன். நான் மருத்துவமனை அறையின் உள்ளே நோக்கிப் பார்த்தபோது, அங்கே மிஷினெரிமார்களும், மகத்தான ஊழியக்காரர்கள் யாவரும் அங்கே அழுது ஜெபித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது நானோ, “ஓ, என்னே! மிகச் சிறிய பரிசுத்த உருளையான நான் அங்கே உள்ளே போகலாமா? நான் இங்கே வெளியிலேயே தரித்திருப்பது மேலானது'' என்று எண்ணிக்கொண்டேன். எனவே வெளியே இருந்த விசாலமான அறையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பான இயந்திரத்திற்கு பின்னே அமர்ந்து கொண்டேன். அப்பொழுது இரத்தத்தை நிறுத்தும்படியாக நான் தேவனிடத்தில் சகோதரன் காபெல் அவர்களுக்காக ஜெபித்தேன். பின்னர் நான் கீழே திரும்பி வந்து, புறப்பட்டு வந்துவிட்டேன். நான் வீட்டிற்கு சென்று சுமார் பதினைந்து நிமிடங்களில் தொலைபேசி மணி ஒலித்தது, அதாவது நான் அங்கு இல்லாதிருந்தபடியால் என்னுடைய தாமதத்திற்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பினர். அப்பொழுது நானோ “நான்தான் - நான் அங்கு வந்திருந்தேனே. ஆனால் அங்கு உள்ளேயோ அநேகர் இருந்தனர். எனவே நான் உள்ளே வருவதற்கு வழிநடத்தப்பட்டதை நான் உணரவில்லை, பாருங்கள், அங்கேயோ அநேக பெரிய ஊழியக்காரர்கள் இருந்தனரே” என்றேன். அதற்கு அவரோ, “இப்பொழுதே வாருங்கள்” என்றார். மேலும், “இந்த மனிதரால் இன்னும் கொஞ்ச நேரம் கூட உயிரோடு இருக்க முடியாது” என்று கூறினார். 35ஆகையால் நான் மீண்டும் அங்கே சென்றேன். நான் அங்கே உள்ளே சென்றபோது, அவரோ ஒரு கத்தோலிக்க சகோதரி கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படிக்குச் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆயினும் அவருக்கு இரத்தமோ வடிந்துகொண்டேயிருந்தது, இரத்தமானது அவருடய வாயிலிருந்தும் வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்பொழுது நான் உள்ளே சென்றேன். அப்பொழுது அவரோ, “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நானோ, “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அப்பொழுது அவர் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு, இந்தவிதமாய் இருமல்வர, அப்பொழுது இரத்தமும் வெளியே வந்தது. அப்பொழுது அவர், “உங்களுடைய பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு நானோ, “நான்தான் சகோதரன் பிரான்ஹாம்” என்றேன். அப்பொழுது அவரோ, அழத்துவங்கி அவருடையக் கரங்களை என்மேல் போட்டுக்கொண்டார். நான் அங்கேயே முழங்காற்படியிட்டேன். இப்பொழுது, அதுவே லூயிவில்லிலுள்ள திறந்த வாசலின் சபையினுடைய டாக்டர். வால்ஸ் காபெல் என்பவராவார். அவருக்கு ஒரு கடிதம் எழுதி கேட்டறிந்து கொள்ளுங்கள். “இரத்தமோ அந்த வினாடியே நின்று போய்விட்டது.'' அது முதற்கொண்டு ஒரு போதும் இரத்தம் கசிய வேயில்லை. பார்த்தீர்களா? அப்பொழுதிலிருந்து நாங்கள் மிக, மிக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். அன்றொரு நாள் நான் அவரை சந்தித்தேன். அப்பொழுது அவர்...... கூறினார்...... 36ஆஸ்வால்டு ஜெ. ஸ்மித், உங்களில் அநேகர் சகோதரன் ஸ்மித் அவர்களை அறிவீர்கள். அவர் ஒரு மகத்தான மிஷினெரி. அவர் சகோதரன் காபெல் அவர்களிடத்திற்கு வருகிறார், ஏனென்றால் இவருக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர், “சகோதரன் காபெல், உங்களுக்குத் தெரியுமே” என்றார். அவர், “நான்.....” என்றார். அவருடைய மனைவியைக் குறித்து ஒரு காரியம். அவர், “நான் முதலில் திருமணம் செய்துகொண்டபோது” என்று கூறி, “நான் ஒரு தவறு செய்வேனேயானால், நான் செய்தால், ஓ, அப்பொழுது என்னால் இன்னொருவரை விவாகம் செய்துகொள்ள முடியும் என்பதைப் போன்று நான் உணர்ந்தேன் என்றும், காரணம் அப்பொழுது அவர் வாலிபமாயிருந்தார்” என்றும் கூறினார். “ஆனால் அடுத்தபடியாக, ”பிள்ளைகள் தொடர்ந்து உண்டான பிறகோ“ என்றார். அதன் பின்னர் அவர், ”பிள்ளைகள் உண்டான பிறகு மனைவியின்றி எந்த வேலையும் செய்வது ஒருவிதமான கடினமாயுள்ளது. அதன் பின்னர் உங்களுக்கு சுமார் ஐம்பது வயதாகும்போது, உங்களால் அவளில்லாமல் ஒன்றுமே செய்துகொள்ள முடியாது. நீங்கள் வயோதிகராகும்போது, ஏன், நீங்கள் - நீங்கள் அந்த விதமாகவே உணருகிறீர்கள்“ என்றார். அதற்கு நான், “அது ஏறக்குறைய சரியாகத்தான் உள்ளது என்றே நான் யூகிக்கிறேன்” என்றேன். நான்....... இருந்த..... ஏறக்குறைய எடுத்துக்கொண்ட பொருளுக்கு வருகிறோம், பெண்கள் எப்படி பொருட்களை வாங்க கடைக்குச் செல்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். என் மனைவியும் அங்கே இருந்தாள். அவள் அவை எல்லாவற்றிலுமே இராணியாக இருக்கிறாள். அவள் எல்லா நேரத்திலும் இருந்த இடத்திலேயே இருக்கிறாள். வீதியிலே நான் அவளோடு நடந்து செல்லும்போது, என்னுடைய வெறுக்கத்தக்க ஏழ்மையான பாதம் கிட்டத்தட்ட அவளைக் கொன்றுவிடுகிறது. அவர் என்னிடத்தில், “நீங்கள் அவளில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது” என்றார். அந்தவிதமாகத்தான் கருத்து எழும்புகிறது. 37நான் வீட்டிற்கு சென்றபோது, நான் அங்கே அறையில் அமர்ந்து, “அது உண்மைதான்” என்பதை சிந்தித்துப் பார்த்தேன். அப்பொழுது நான் அதை மற்றொரு காரியத்திற்கு பொருத்திப் பார்த்தேன். உங்களுக்குத் தெரியுமா, நான் முதலில் மனமாறி இரட்சிக்கப்பட்டு....... ஒரு பாப்டிஸ்டு மிஷினெரி பிரசங்கியாராக மாறினபோது, நான், “ஒரு நபர் பாப்டிஸ்டாக இல்லையென்றால், அவன் இரட்சிக்கப்படவேயில்லை. அதற்குரியதாயிருந்ததெல்லாம் அவ்வளவுதான்” என்று எண்ணிக்கொண்டேன். அப்பொழுது நான் ஒரு வேதாகமத்தை என்னுடைய அக்குளில் வைத்துக்கொண்டு, எல்லோரையுமே பாப்டிஸ்டாக்கும்படிக்கே கர்த்தர் என்னை அழைத்தார் என்று எண்ணினேன். “பாப்டிஸ்டுகள் விசுவாசித்தது போன்று விசுவாசிக்காத எவரும் காட்சியில் கிடையவே கிடையாது” என்றவாறு எண்ணியிருந்தேன். நாட்கள் கடந்து சென்றபோது, நானே எனக்காக முழு பணியும் செய்ய வேண்டியதாயிருந்ததை நான் எண்ணிப்பார்த்தேன். பின்னரே எனக்குத் தெரிய வந்தது, ஒரு சபை வைத்திருந்த மற்றொரு சகோதரனை, ஒரு மேய்ப்பனையும் நான் கவனித்துப் பார்த்தேன். நான் கடினமாக செயல்பட்டது போன்றே அவரும் கூட முழுமனதுடன் பாடுபட்டார். மொத்தத்தில் போர்வையானது அவர் பக்கமாகவும் கூட சற்று விரிவடைகிறதை நீங்கள் அறிவீர்கள். அப்படியானால் நாம் ஒருவருக்கொருவர் தேவையாயிருக்கிறோம் என்பதை நாம் கண்டறிகிறோம். இப்பொழுது இந்த அளவிற்கு நாம் வரத்துவங்கின பிறகே, நாம் ஒருவரில்லாமல் ஒருவர் காரியத்தைச் செய்வது ஒருவிதமான கடினமாயுள்ளது. அவ்வளவுதான். எனவே நாம் ஒருவருக்கொருவர் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும். அது இந்த மகத்தான பெந்தேகோஸ்தே அசைவில் உள்ளது என்று நான் நம்புகிறேன். அந்த வேண்டாவெறுப்பின் வேலிகள் தகர்த்தெறியப்படுவதையும், தேவனுடைய மகத்தான சபைதாமே ஐக்கியத்தில் ஒன்றுசேரத் துவங்குவதையும் காண நான் மகிழ்ச்சியடைகிறேன். கலியாணமானது இப்பொழுது இன்னும் கிட்ட நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பதையே அது பொருட்படுத்துகிறது. கற்கள், அவைகள் ஒருகால் சொந்தமான கற்களாக வெட்டப்பட்டு, அவைகள் கர்த்தருடைய கற்களாயிருக்குமாயின், அவைகள் அந்தக் கட்டிடத்தில் எங்கேயாவது ஓர் இடத்தில் பொருத்தப்பட வேண்டும். 38இப்பொழுது விவாகம் என்பதை ஒரு மனப்பாங்கில் உற்று நோக்கினால், அது ஒரு மாதிரியாயுள்ளது. இங்கே இந்த பூமிக்குரிய விவாகமானது பரலோக விவாகத்திற்கு ஒரு மாதிரியாகவே உள்ளது. இப்பொழுது நாம் அதை சற்று நேரம் ஒத்திகைப் பார்க்கும்படி ஒரு சில நிமிடங்கள் அதை நுனுக்கமான விவரங்களோடு காண்போம். முதலாவது காரியம் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியதாயுள்ளது. இயற்கையான விவாகத்தில் நிகழும் முதல் காரியம் ஒரு தீர்மானம் செய்யப்பட வேண்டியதாயுள்ளது. அந்த வாலிபப் பெண்மணி இந்த வாலிப மனிதனை விரும்புகிறாளா என்ற அவளுடையத் தீர்மானத்தை அவள் செய்ய வேண்டும்; அதேபோல் இந்த வாலிப மனிதன் அந்த வாலிபப் பெண்மணியை விரும்புகிறானா என்ற தன்னுடையத் தீர்மானத்தை அவன் செய்ய வேண்டும். ஒரு தீர்மானம் செய்யப்பட வேண்டியதாயுள்ளது. நீங்கள் அதைச் செய்ய வேண்டும். உலத்திலேயே நீங்கள் நேசிக்கிற ஒரே பெண்மணியாய் அவள் இருக்க வேண்டும். அதேபோல் அவள் நேசிக்கிற ஒரே மனிதனாய் இவன் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், அப்பொழுது நீங்கள் ஒரு தவறான தீர்மானம் செய்து விட்டதாகிறது. அதேவிதமாகவே கிறிஸ்துவுக்காக செய்கிற தீர்மானமும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் என்னவெனில், நீங்கள் தேவனை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை சேவிக்கப் போகிறீர்களா அல்லது நீங்கள் அதைச் செய்யப்போகிறதில்லையா என்று உங்களுடைய சிந்தையில் நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டும். நீங்கள் உலகத்தை சேவிக்கப் போகிறீர்களா? நீங்கள் கிறிஸ்துவை சேவிக்கப் போகிறீர்களா? நீங்கள் அதை உங்களுடைய சிந்தையில் தீர்மானிக்க வேண்டும். ஒரு தீர்மானம் செய்யப்பட வேண்டியதாயுள்ளது. நீங்கள் தேவனை சேவிக்கப் போகிறீர்களா அல்லது உலகப் பொருள்களுக்கு ஊழியம் செய்யப் போகிறீர்களா என்று உங்களுடைய சிந்தையில் நீங்கள் தீர்மானம் செய்யும்போது, நீங்கள் உங்களுடையத் தெரிந்து கொள்ளுதலை அப்பொழுது தெரிந்தெடுக்கிறீர்கள். ஆனால் தீர்மானமோ செய்யப்பட வேண்டியதாயிருக்கிறது. 39அதன் பின்னர், தீர்மானம் செய்யப்பட்ட பிறகு, அதன்பின்னரே உங்களுக்கு விவாக நிச்சயம் நிகழுகிறது. அதாவது நீங்கள் அதைப் பீடத்தண்டை கண்டறிகிறீர்கள். இந்த இணைப்பு உண்டாயிருப்பதற்கு முன்பே நீங்கள் விவாக நிச்சயத்தை செய்திருக்க வேண்டும். அந்தவிதமாகத் தான் இது கிறிஸ்துவினுடைய சபையோடு உள்ளது. அது கிறிஸ்துவோடு நிச்சயத்தை, ஒரு - ஒரு வாக்குறுதியை, மண உறுதியை, ஒரு அன்பின் செய்கையை உடையதாய் இருக்க வேண்டும். அதன் பின்னர் அடுத்தக் காரியம் உறுதிமொழி கூற வேண்டியதாயுள்ளது. நீங்கள் வாக்குறுதி செய்கிறது போல ஒருவருக்கொருவர் உறுதிமொழி எடுக்க வேண்டியதாயுள்ளது. அதாவது, “இனிய இருதயமே, நீ என்னை விவாகம் செய்வாயானால், அப்பொழுது நான் விசுவாசமும் உண்மையுமுள்ளவனாயிருப்பேன். நான் வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பாரேன்” என்று கூற, அதேபோல அவள், “நானும் மற்றெந்த மனிதனையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன். ஒரு மனைவியாக இருந்து, நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்வேன். நமக்கு பிள்ளைகள் உண்டாகும்போது, ஒரு தாயாக இருந்து அதற்குரிய கடமையைச் செய்வேன். நான், நான் ஒரு வீட்டு நிர்வாகியாய் இருப்பேன்” என்று கூற வேண்டும். ஒரு சரியான விவாகத்தில் இந்த வாக்குறுதிகள் யாவுமே கூறப்பட வேண்டும், அதாவது இருக்க வேண்டும். 40நீங்கள் கிறிஸ்துவினிடத்திற்கு வரும்போதும் காரியமானது அந்தவிதமாகத்தான் உள்ளது. “கர்த்தாவே, நீர் உம்முடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக என்னை ஏற்றுக் கொள்வீரேயானால், நான் உமக்கு வாக்களிக்கிறேன்.'' அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. நீங்கள், ”நான் உம்மை நேசிப்பேன். நான் உம்மிடத்தில் உண்மையாயிருப்பேன். நான் உம்மை இரவும் பகலும் சேவிப்பேன். நான் உபவாசிப்பேன். நான் ஜெபிப்பேன். நான் உம்மண்டை விசுவாசமுள்ளவனாயிருப்பேன். நான் என்னுடைய தசமபாகத்தைப் பண்டக சாலைக்குள் கொண்டு வருவேன். நான், நான்- நான் ஒரு நாளில் அநேக முறை ஜெபிப்பேன். நான் - நான் எல்லாவற்றையும் செய்வேன். நான் என் நேசம் யாவையையும் உமக்கே பிணையமாக வைப்பேன்“ என்று கூற வேண்டும். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். அது முற்றிலும் சரியே, நீங்கள் அதை எங்கே வாக்களித்தாலும், அது உங்களுடைய இருதயத்திலிருந்து வர வேண்டும். நீங்கள் அதை உங்களுடைய கணவருக்கு வாக்களித்தாலும், உங்களுடைய இருதயத்திலிருந்து அதை அளிக்கவில்லையென்றால், நீங்கள் அதை மனதுக்குட்பட்டு கூறவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் அவரோடு முற்றிலும் சரியாக வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. அது ஒருவிதமான உறுதியாக்கப்பட்ட விவகாரமாயுள்ளது. 41இங்கேப் பாருங்கள். நீங்கள் பற்களை உடையவராயில்லையென்றால், அப்பொழுது நீங்கள் போலியான செயற்கை பற்களைப் பயன்படுத்துவீர்கள், இப்பொழுது, அது பரவாயில்லை. அது நீங்கள் ஏற்கெனவே கொண்டிருந்த பற்களுக்குப் பதிலாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் உண்மையாகவே அந்த பற்களோ உங்களோடு சம்மந்தப்பட்டிருக்கவில்லை. அது உங்களுடைய பாகமாயிருக்கவில்லை. நீங்கள் வெட்டப்பட்ட ஒரு கரத்தை உடையவராயிருந்தால், அப்பொழுது நீங்கள் செயற்கையான ஒரு போலிக் கரத்தினை பொருத்திக் கொள்வீர்கள், நல்லதுதான் ஆனாலும் அந்தக் கரமானது உண்மையாகவே உங்களோடு சம்மந்தப்பட்ருக்கவில்லை. அது உங்கள் மேல் ஒட்டியுள்ளது. புரிகிறதா? அது உங்களோடு சம்மந்தப்பட்டிருக்கவில்லை. நாம் நம்முடைய வாக்குறுதியை கிறிஸ்துவுக்கென்று எடுக்கும்போது, ஒரு ஸ்திரீ ஒரு மனிதனின் பாகமாகவும், ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயின் பாகமாகவும் இருக்க வேண்டியதுபோல, நாம் அவருடைய பாகமாகவில்லையென்றால், அப்பொழுது நாம் செயற்கையான கிறிஸ்தவர்களாய் இருக்கிறோம். நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கவில்லை. நீங்கள் உண்மையாகவே அந்த ஸ்திரீக்கு விவாகம்பண்ணப்பட்டிருக்கவில்லை. நீங்கள் நம்பிக்கைக்குரியவராயிருந்திருக்கலாம். நீங்கள் உங்களுடைய கணவரை நேசிக்கவில்லையென்றால், அறுபது அல்லது எழுபது வயதில் அவரை நேசிக்கவில்லையென்றால், நீங்கள் துவக்கத்தில் அவரிடத்தில் அன்புகூர்ந்தது போன்று அவ்வளவு நன்றாக இப்பொழுது அன்புகூறவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் உண்மையாகவே அவருடையப் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கவில்லை. 42அந்தவிதமாகவேத்தான் இன்றைக்கும்கூட அநேக சபைகள் இருக்கின்றன. நாம் வெறுமென “கிறிஸ்தவ சபை” என்ற பெயரை வைத்துக்கொண்டு, மணவாட்டியாயிருப்பது போன்று பாவனை செய்துகொண்டிருக்கிறோம். அது செய்கையானதாய் உள்ளது. நாம் எந்த விதத்திலேயுமே கிறிஸ்துவோடு சம்மந்தப்பட்டிருக்கவில்லை. நாம் ஒரு போலியான பல்லைப் போன்றும், செயற்கையான கரத்தைப் போன்றும், செயற்கையான கண்ணைப் போன்றுமே இருக்கிறோம். புரிகிறதா? நாம் அதை வெறுமென மேலே பொருத்திக் கொண்டிருப்போமேயானால், அப்பொழுது அது செயற்கையான ஏதோ ஒரு காரியமாய் இருக்கிறது. உங்களால் கிறிஸ்தவ மார்க்கத்தை மேலே பொருத்திக்கொள்ள முடியாது. நீங்கள் அதனோடு இணைக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படியானால் செயற்கையான ஒரு சபை கிறிஸ்துவின் சபையென்று அழைக்கப்பட்டாலும், அந்த பிள்ளைகள் அப்பொழுதும் அங்கே உள்ளே இருக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் ஏதோ ஒரு ஸ்தாபனத்தினால் பிறந்திருக்கிறார்கள்...... அவர்கள் கிறிஸ்துவினுடைய பிள்ளைகள் அல்ல. அவர்கள் கிறிஸ்துவின் பிள்ளைகளாயிராமல் ஸ்தாபன பிள்ளைகளாயிருக்கிறார்கள். 43ஸ்திரியானவள் உண்மையாயுள்ள புருஷனோடு இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றால், அப்பொழுது அது அவளுடைய கணவன் அல்ல. அது அவள் அந்த மனிதனோடு வாழும்படியாக உறுதிமொழியெடுத்திருந்தாலும், அவள் ஒரு தவறான உறுதிமொழியை எடுத்தாள். அவனை நேசிப்பதாக அவள் வாக்குறுதிப் பண்ணினாள். அவள் நேசிப்பதாகக் கூறினாள், ஆனாலும் அவள் அதைச் செய்யவில்லை. எல்லா நேரமும் அந்த மனிதன் வஞ்சிக்கப்டுகிறான். ஆனால் நண்பர்களே, நிச்சயமான ஒரு காரியம் உண்டு, அதாவது நாம் கிறிஸ்துவை வஞ்சிக்கப் போகிறதில்லை. அவர் தமக்குச் சொந்தமானவர்களை அறிந்திருக்கிறார். ஆனால் நீங்கள் பாருங்கள், முதலில் தீர்மானங்கள் செய்யப்படுதல். அடுத்தது நிச்சயம். அதன் பின்னர் வாக்குறுதி. 44அதன்பின்னரே மணவிழா. அப்பொழுதுதான் மணவாட்டி - மணவாட்டி மணவாளனுடையப் பெயரைத் தரித்துக்கொள்கிறாள். அதன்பின்னர் இனி அவளுக்கு அவளுடைய சொந்தப் பெயரே இல்லை. அவள் மணவாளனுடையப் பெயரை தரித்துக்கொள்ளுகிறாள். சபை விவாக நிகழ்ச்சியின்போது, அவர்களுடைய வாக்குறுதிகளைக் கூறின பிறகே, அவள் மணவாளனுடைய பெயரைச் சூடிக்கொள்கிறான். அதன்பின்னர் அவள் ஒருபோதும் ஒரு உலகப்பிரகாரமான சபையாயிருப்பதில்லை. அவள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையாய் இருக்கிறாள். ஆமென். இல்லை..... நான் அதனைப் பெயர் மூலம் பொருட்படுத்திக் கூறவில்லை . நான் அதனைப் பிறப்பின் மூலம், சுபவாத்தின் மூலம்.....? தேவனுடைய வல்லமையின் மூலம் பொருட்படுத்திக் கூறுகிறேன். தேவனுடைய சத்தியம் இருதயத்தில் வெளிப்படுத்தப்பட்டதனால், அப்பொழுது அவள் ஒரு கிறிஸ்தவ சபையாக, மகத்தான உலகளாவிய அப்போஸ்தல கிறிஸ்தவ சபையாக மாறுகிறாள். அவள் ஒரு கிறிஸ்துவின் பாகமாகிறாள். அவள் அந்த பாகமாகும்போது, அவள்...... கிறிஸ்துவானவர் அவளுக்குள்ளாகத் தன்னுடைய சொந்த ஆவியையும், தன்னுடையச் சொந்த ஜீவனையும் அனுப்புகிறார். வேதமோ அங்கே ஆதாமையும், ஏவாளையும், “நீங்கள் இனி இருவராயிராமல் ஒருவராயிருக்கிறீர்கள்.'' என்று கூறினதே. ஸ்திரீயானவள், சபையானது கிறிஸ்துவை மணந்து கொள்ளும்போது, அவர்கள் இனி இருவரல்ல. அவர்களிருவரும் ஒருவர். கிறிஸ்து உங்களுக்குக் இருக்கிறாரே! ஆமென். அதுதான் அது. அவருடைய ஜீவன் உங்களுக்குள்ளாக கொண்டுவரப்பட்டுள்ளது, ஆகையால் நீங்கள் மணவாட்டியாகிறீர்கள். 45அது விவாக நிகழ்ச்சியில் கூறப்படுகின்ற இந்த எல்லா உறுதிமொழிகள் முதலானவைகைளை அவள் எடுத்துக்கொண்டிதற்கு பின்னர் உண்டாகும் மற்றொரு காரியமாகும். அதாவது என் மனைவியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் அவளுடைய பெயர் பிராய் என்பதாகும். இப்பொழுது, அவள் இனிமேல் ஒரு பிராய் என்னும் பெயர் கொண்டவளல்ல. அவள் பிரான்ஹாமாக இருக்கிறாள். இப்பொழுதோ, அவள் இனி ஒருபோதும் பிராய் என்னும் பெயருடையவளல்ல. அவள் பிரான்ஹாமாக இருக்கிறாள். நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக வரும்போது, நீங்கள் இனி ஒருபோதும் உலகத்தாரல்ல. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாய் இருக்கிறீர்கள். புரிகிறதா? அதன் பின்னர் நீங்கள் உலகத்தின் காரியங்களுக்காகக் கவலைக் கொள்வதில்லை. அவைகள் உங்களுக்கு மரித்துவிடுகின்றன. “ஒருவன் உலகத்திலும், உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், அவனிடத்தில் தேவனுடைய அன்பு இல்லை.'' ஆகையால் நீங்கள் பாருங்கள், நீங்கள் ஒரு செயற்கையான கிறிஸ்தவனாக இருக்க முடியாது. நீங்கள் அவ்வாறு உலகத்தில் அன்பு கூர்ந்தால், அப்பொழுது நீங்கள் புறபகட்டுகொண்ட செயற்கையான ஒரு கிறிஸ்தவராகத்தான் இருக்க முடியும். ஆனால் கிறிஸ்துவானவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் உங்களுக்குள்ளாக வரும்வரைக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியாது. அப்பொழுதே நீங்கள் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இனி ஒருபோதும் இருவரல்ல. நீங்கள் ஒருவரே. பிதாவானவர் கிறிஸ்துவுக்குள் இருந்ததுபோல, கிறிஸ்து நமக்குள்ளாக இருப்பதாக வாக்களித்தார். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். நீங்களும் நானும் ஒன்றாயிருக்கிறோம்.” புரிகிறதா? கிறிஸ்துவானவர் நமக்குள் இருக்கிறாரே! தேவனாயிருந்த எல்லாவற்றையும் அவர் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார். கிறிஸ்துவாயிருந்த எல்லாவற்றையும், சுவிசேஷத்தின் பணி தொடரும்படிக்கு அவர் சபைக்குள்ளாக ஊற்றினார். 46அதன் பின்னர் நாம் செயற்கையான பெயரின் மூலமாக அல்ல, கிறிஸ்துவுக்குள் நம்மை இணைக்கும் பரிசுத்த ஆவியின் ஜீவனின் மெய்மையின் மூலமாகவே மாறுகிறோம். அப்பொழுதுன நாம் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினூடாக, நாம் மரித்த உலகத்தின் காரியங்களிலிருந்து எழுப்பப்பட்டு, உன்னதங்களிலே அவரோடுகூட உட்கார்ந்திருக்கிறோம். ஆமென். எனக்கு அது பிடிக்கும். இன்றிரவு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே உட்கார்ந்திருக்கிறோம், பாருங்கள், அவரோடு உயிர்த்தெழுப்பப்பட்டோம்; உலகத்தின் காரியங்களுக்கு மரித்து, கிறிஸ்துவை தரித்துக்கொண்டோம். நாம் கிறிஸ்துவை தரித்துக் கொள்ளும்போது, உலகமோ மரித்துவிடுகிறது. அதன்பின்னர் நாம் ஒருபோதும் உலகத்திற்காகக் கவலை கொள்வதில்லை. உலகமோ நமக்கு மரித்துவிடுகிறது. எனவே நாம்..... அது நமக்கு மரித்துவிடுகிறது, நாம் அதற்கு மரித்துவிடுகிறோம். நீங்கள் ஒரு வித்தியாசமான நபராய், வித்தியாசமான தனிப்பண்பு கொண்டவராயிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள். சிருஷ்டியாயிற்றே! அதே சிருஷ்டியாகவோ, மெருகேற்றப்பட்டதாகவோ அல்ல; ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிற ஒரு - ஒரு மனிதனாய் அல்ல. ஆனால் மரித்துப்போன ஒரு மனிதன் மீண்டும் பிறந்திருந்து, கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக மாற, அந்த நபருக்குள் ஜீவனுள்ள தேவனுடைய ஆவி ஜீவிக்கிறது. இப்பொழுது, அந்த ஸ்திரீ இனி ஒருபோதும் பிராய் என்ற பெயர் கொண்டவளாயிருப்பதில்லை என்பது போலேயாகும். அவள் ஒரு பிரான்ஹாம் என்ற பெயருடையவளாய் இருக்கிறாள். அவள் அந்த பெயரைக் கொண்டே எங்கும் பேசப்படுகிறாள். சபையானது இனி ஒருபோதும் உலகத்திற்குரியதல்ல, ஆனால் அது கிறிஸ்துவின் நாமத்தில் உள்ளது, அவள் கிறிஸ்துவின் நாமத்தை சூடியிருக்கிறாள். அவள் அவருடைய சொந்த ஜீவனின் மூலம் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறாள். 47தேவன் முதலாவது உண்டாக்கின மனிதன் எப்படியாய் இரட்டைத் தன்மை கொண்ட ஒரு நபராய் இருந்தான் என்பதை நீங்கள் எப்போதாவது வேதத்தில் வாசித்திருக்கிறீர்களா? “அவர் முதல் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டாக்கின போது, ஆவிக்குரிய பிரகாரமாய் பேசுகிறேன், அப்பொழுது ஆதாமோ ஆதாமாகவும், ஏவாளகவும் இருந்தான்.'' ”தேவன் ஆவியாய் இருக்கிறார்.“ ஆனால் அவர் அவர்களை மாம்சத்தில் உண்டுபண்ணி வைத்தபோது, அவர் அவர்களைப் பிரித்தார். அவர் ஆண்மை வாய்ந்த ஆவியை எடுத்து அது மனிதனுக்குள்ளாக வைத்தார், அதேபோல பெண்மைவாய்ந்த ஆவியை எடுத்து, அதை ஸ்திரீக்குள்ளாக வைத்தார். இப்பொழுது, ஒரு ஸ்திரீ மனிதனைப் போல காணும்படிக்கு நடந்துகொள்ள விரும்புவதை நீங்கள் காணும்போது, ஏதோக்காரியம் தவறாயுள்ளது. ஆகையால் அதுவோ இன்றைக்கு உலகமே முற்றிலும் தவறாயிருப்பது போன்றே காணப்படுகிறதே. புருஷர்கள் ஸ்திரீகளைப் போன்றே காணும்படி நடந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவ்வாறே ஸ்திரீகளும் புருஷர்களைப் போன்றேக் காணும்படி நடத்து கொள்ள முயற்சிக்கின்றனர் அது உண்மையே. அது உண்மையாயிருக்கிறது. 48இப்பொழுது பாருங்கள். அதாவது தேவன் ஒரு மனிதனை உண்டாக்கியபோது, அது மிகவும் பரிபூரணமாயிருந்தது. அவர் அதிலிருந்து வித்தியாசமான எந்தக் காரியத்தையும் காண்பிக்க விரும்பவில்லை, ஆனால் ஸ்திரீயானவளோ மூல சிருஷ்டிப்பில் இருக்கவில்லை. ஆகையால் அவள் சிருஷ்டிப்பில் இருக்கவில்லை, ஆனால் அவள் ஆதாமின் ஒரு பாகமாயிருந்தாள். அவள் ஒரு உபசிருஷ்டியாயிருக்கிறாள். மற்றொரு சிருஷ்டிப்பை உண்டுபண்ணாமல், அவர் சிருஷ்டிப்பின் ஒரு பாகத்தை எடுத்து, அதிலிருந்து மற்றொரு சிருஷ்டியை உண்டுபண்ணினார். அவர் ஆதாமிற்குள்ளிருந்த ஆண்பாலுக்குரிய ஆவியை எடுத்து....... ஆதாமிற்குள்ளிருந்த பெண்பாலுக்குரிய ஆவியை எடுத்து, சரியாகக் கூறினால், அதை ஸ்திரீக்குள்ளாக வைத்தார். ஆகையால் ஆவியும், சரீரமுமாக, அவர்கள் ஒன்றாயிருந்தனர். தேவன் கல்வாரியில் என்ன செய்தார் என்பதற்கு ஓர் அழகான மாதிரியாயிருந்தது. அவர் கிறிஸ்துவை எடுத்து, சபையோடு இணைத்தார், ஈட்டியினால் குத்தப்பட்ட விலாவினூடாக, அவர் கொண்டு வந்த இரத்தம் தனிப்பட்ட நபரை சுத்திகரித்தது, அதுவே சபையாகிய மாம்ச சரீரத்தை பரிசுத்தப்படுத்தி, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியை அதனுள் வைக்கிறது. அவர் அதை அங்கே சிலுவையிலிருந்து, கிறிஸ்துவிலிருந்து எடுத்து, அதை தனிப்பட்ட நபருக்குள் வைக்கிறார். அப்பொழுது அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாகிறார்கள். கிறிஸ்துவும் நீங்களும் ஒன்றாயிருக்கிறீர்கள். 49நீங்களும் உங்களுடைய கணவனும் ஒன்றாயிருக்க வேண்டும். ஏதாகிலும் முரண்பாடு இருக்குமாயின், அப்பொழுது உங்களுடைய இணைப்போடு ஏதோக்காரியம் தவறாயுள்ளது. கிறிஸ்துவண்டையிருக்க நம்மோடு ஏதோக்காரியம் முரண்பாடாயிருக்குமாயின், நாம் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கவில்லையென்றால், “ஓ, அது மற்றொரு நாளுக்கானதாயிருந்தது' என்று கூறுவோமேயானால், அப்பொழுது அவரோடு உள்ள நம்முடைய இணைப்பில் ஏதோக்காரியம் தவறாயிருக்கிறது. நீங்கள், ”அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன; தெய்வீக சுகமளித்தல் என்பதே கிடையாது; பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதே கிடையாது,'' என்று கூறி, அதை எங்கோ முன்காலத்திற்கு பொருத்துவீர்களேயானால், அப்பொழுது கிறிஸ்துவினுடைய ஆவி உங்களுக்குள்ளாக இல்லை என்பதையே அது காண்பிக்கிறது. காரணம், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமானது.” அதன்பின்னர் அவருடைய வார்த்தை உங்களுக்குள் முதன்மைவாய்ந்ததாக மாறும்போது, அப்பொழுது நீங்கள் பாருங்கள்........ அப்பொழுது நீங்களும் கிறிஸ்துவும் ஒன்றாயிருக்கிறீர்கள் என்பதாகவே அது உள்ளது. “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” அது இனி ஒருபோதும் நீங்களல்ல, அது தேவனுடைய வார்த்தையாய், கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதாய் இருக்கிறது. நீங்கள் ஒன்றாகிறீர்கள். சரி. 50அதன்பின்னர் மற்றொரு காரியம், அவள் அதை செய்த பிறகு, அவள் தன்னுடைய உறுமொழிகளை நிறைவேற்றின பிறகு, தன்னுடைய விவாகத்தை நிகழ்த்தி, தன்னுடையக் கணவருடைய பெயரையுடையவளாயிருக்கும்படிக்கு மணவாளனுடைய பெயரைச் சூடிக்கொள்கிறாள். அதன்பின்னர் அவன் உடைமையாகப் பெற்றிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் அவள் சுதந்தரவாளியாயிருக்கிறாள். அவள் எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளியாயிருக்கிறாள். நீங்கள் உடைமையாகப் பெற்றிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் உங்களுடைய மனைவி சுதந்தரவாளியாயிருக்கிறாள். சபையும் அந்தக் காரியத்தையே உடையதாயிருக்கிறது, அவளுக்குள் இருக்கிற அவருடைய ஆவியினால் அவருடைய பாகமாயிருப்பதை மாத்திரம் அறிந்திருப்பாளேயானால் நலமாயிருக்கும். அவர், “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். இன்னும் கொஞ்சகாலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்” என்றார். அப்பொழுது அது கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதாகும். நீங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் அவரோடு சுதந்தரவாளிகளாயிருக்கிறீர்கள். 51அவர் இங்கே பூமியின்மேல் இருப்பாரேயானால், அப்பொழுது அவர் என்ன செய்துகொண்டிருப்பார்? அவர் அங்கே இருந்தபோது செய்த அதேக்காரியத்தையே செய்வார், ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் பிதாவுக்கடுத்தவைகளைக் குறித்து கவனமுள்ளவராயிருந்து கொண்டிருப்பார். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்திக் கொண்டிருப்பார். அவர் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பார். அவர் இங்கே பூமியின்மேல் இருந்தபோது, சரியாக அவர் என்ன செய்தாரோ அதையே இப்பொழுதும் செய்து கொண்டிருப்பார். ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் நிலைத்திருக்கிறார். அது பரிபூரணமாயிருக்கிறது. அதுதான் விவாகமாயுள்ளது. 52ஆனால் இப்பொழுது இந்த ஸ்திரீ விவாகம் செய்து கொள்ளும்போது, இந்த எல்லா உறுதிமொழிகளையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்றுவாளேயானால், அப்பொழுது அவள் இந்தக் கணவனாகிய மனிதனுக்குரியவளாகி, அவன் பெற்றுள்ள எல்லாவற்றிற்கும் அவள் சுதந்தரவாளியாகி, அதன்பின்னர் அவள் ஒழுக்கக்கேடாய்ச் செல்வாளேயானால் எப்படியிருக்கும்? அவள் மனஸ்தாபங்கொண்டு கோபப்பட துவங்குகிறாள். அவள் மற்றொரு மனிதன் பின்னே ஓடத்துவங்குகிறாள். அது மாத்திரமல்ல, அவள் தன்னுடைய அன்பை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறாள். ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடிருக்க, அவர்கள் எடுத்துக்கொண்ட எல்லா வாக்குறுதிகளுமிருக்க, அதன் பின்னர் அவள் வெளியே போய், தன்னுடைய வாழ்க்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறாள், தன்னுடைய அன்பையும், தன்னுடைய பிரியத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளத் துவங்குகிறாள். அந்தவிதமாகத்தான் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படுகின்ற அநேகருங்கூட செய்கிறார்கள், உங்களுடைய அன்பை உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறீர்கள்; விளையாடுதல், நடனமாடுதல், சூதாடுதல், ஜெபக்கூட்டத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே தரித்திருத்தல், தொலைக்காட்சியை கவனித்துப்பார்த்தல், சபையினுடைய இருதயத்தில் இருக்க வேண்டிய தேவனுடைய அன்பை எல்லாவிதமான உலகப்பிரகாரமான காரியங்களும் கைப்பற்றிவிட்டன. அவள் வெறியெழுச்சியின் பேரில் போய்விட்டாள். அவள் ஒழுக்கக்கேடாய் போய்விட்டாள். அவள் மற்ற மனிதர்களின் பின்னே சென்றுவிட்டிருக்கிறாள். அவள் தன்னுடைய அன்பை பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அவள் சபைக்குத்தர வேண்டிய தன்னுடைய தசமபாகத்தை எடுத்துக்கொள்வாள்; அவள் அதை அங்கே உலகத்தில் உள்ள மற்றக் காரியங்களுக்கு செலவிடுவாள். அவள் தேவனை நேசிப்பதற்குப் பதிலாக, தேவனுக்காக ஜீவிப்பதற்குப் பதிலாக, சபைக்கு வரும்படியான பற்றுதல் கொள்வதற்குப் பதிலாக....... அவள்.., நீங்கள் அவளை சபைக்கு வரும்படிச் செய்ய கிட்டத்தட்ட போதித்து இணங்க வைக்க வேண்டியதாயுள்ளது. 53ஏன், எனக்குத் தெரியும், இங்கு அண்மையில் ஓர்- ஓர் ஊழியக்காரர் ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தது ஆறு மாதமாவது ஜனங்கள் ஞாயிறு வேதபாடப் பள்ளிக்கு வருவதாக உறுதியளித்து கையொப்பமிட வைத்து ஜனங்களை வரவழைக்கும்படிக்கு அநேக ஜெ............ அநேக அட்டைகளை அனுப்பியிருந்ததாக என்னிடம் கூறினார். நான் அங்கிருந்த அந்த குன்றின் கீழே ஒரு சிறிய பெண்ணைப் பார்த்திருந்தேன், அப்பொழுது அந்த இடத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அவள் அந்த இடத்திலிருந்து வெளியே வந்தாள். நானோ அங்கு நின்றுகொண்டு, வாசலின் கதவைத் தட்டினபோது, அவள் வாசலண்டை வந்தாள். அவள் இப்பொழுது இங்குள்ளதுபோன்ற சில தவறான தகாத முறையில் நடனமாடும் சிலரோடு அப்பொழுது இருந்தாள், அவர்களை நீங்கள் அறிவீர்கள். கடந்த இரவு இது போன்ற கூட்டத்தினரை இங்கே பீனிக்ஸில் அவர்கள் கைது செய்ய வேண்டியதாயிருந்தது. அவர்கள்தான் இந்த புதிய தாறுமாறான ராக் அன்ட் ரோல் அல்லது நெளிந்து வளைந்து தாறுமாறாக ஆடுபவர்கள் என்று நான் நினைக்கிறேன். அது என்னவாயிருந்தபோதிலும் இவர்களை கைதுசெய்து அழைத்துச் செல்ல அவர்கள் காவல்துறையினரை வரவழைக்க வேண்டியதாயிருந்தது. வாலிப ஜனங்களே, அது ஒரு பிசாசின் ஆவியாயிருக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவர்கள் வீதிகளில் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதையே அறியாத அளவிற்கு அந்த பாதிப்பின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தனர். 54இந்த கோமாளிகளைப் போன்றுள்ள சிலர் அல்லது இந்த இசைக்கேற்ப நடனமாடுபவர்கள், குதிரை சவாரி செய்பவர்கள் நான் இருந்த அந்த பட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு வாலிப பெண்கள் தங்களுடைய உள்ளாடைகளைக் கழற்றி இந்த பையன்களுக்கு அடையாளமாக தற்கையெழுத்திடுவது போன்றவற்றிற்காக (Autograph) மேடையின் மேல் அதை எறிகின்றனர். அது பிசாசாயிருக்கிறது என்று நீங்கள் அறிந்து கொள்ளுகிறதில்லையா? அது கடைசி நாட்களின் ஓர் ஆவியாய் இருக்கிறது. நிச்சயமாக, அது அப்பேர்ப்பட்ட ஒரு அவமானமாய் இருக்கிறது. அங்குதான் காரியம், ஒழுக்கக்கேடாகிவிட்டது. 55இந்த வாலிபப் பெண்மணி வெளியே வந்தாள், தொடர்ந்து பார்ப்போம். நான் நின்றுகொண்டிருந்ததைக் கூட..... அவள் அறியாமல்........ வாசலண்டை நின்றுகொண்டிருந்த என்னையே அவள் மறந்து விட்டாள். அப்பொழுது அவள், “ஓ, என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் அங்கே நின்று கொண்டிருந்ததைக் குறித்து நான் மறந்தே போய்விட்டேன்” என்றாள். மேலும் அவள் வானொலியில் பாடிக்கொண்டிருந்த அந்த நபருக்கு தன் கையில் முத்தமிட்டு கையை வீசிக்காட்டி, “நான் உன்னை கீரீன் பிரையர் பேட்ச் என்ற இடத்தில் அல்லது அதுபோன்ற ஏதோ ஓர் இடத்தில் உன்னை சந்திப்பேன்” என்று கூறினாள். அவர்கள் அந்த இரவு அந்தவிமான ஏதோ ஒரு நடனத்தை நடத்தப் போவதாயிருந்தனர். நான் எனக்கு நண்பனாயிருந்த டாக்டர். பிரௌன் என்பவரிடம் இதைக் கூறினேன். அவர், “பில்லி, நீர் எப்படித்தான் உங்களுடைய சபையோரை கட்டுப்பாடோடு பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார். மேலும், “அருமை” என்றார். அப்பொழுது நான், “நாங்கள் அவர்களுக்கு மாத்திரைகளைத் (Pills) தந்து கொண்டிருக்கிறோம்.” என்று கூறினேன். அதற்கு அவரோ, “எந்தவிதமான மாத்திரைகள்?” என்று கேட்டார், அப்பொழுது நான், “சுவிசேஷங்கள். அதுவே எல்லா நேரத்திலும் அவர்கள் வரும்படியாக நிச்சயமாக கட்டுப்படித்தி வைத்துள்ளது” என்றேன். பார்த்தீர்களா? 56அவரோ என்னிடத்தில் அந்த உறுதிமொழி கையொப்பங்களைக் குறித்துக் கூறினார். அப்பொழுது நான், “டாக்டர். பிரௌன் அவர்களே, வானொலியில் பாடின அந்த தாறுமாறான நடனக் கலைஞன் அன்றிரவு அந்த நடனத்திற்கு அவள் அங்கே வரும்படி ஒரு உறுதிமொழி கையொப்பத்தை அவளிடமிருந்து அவன் வாங்கியிருந்திருக்க வேண்டும் என்று நீர் நினைக்கிறீரா? இல்லவேயில்லை. அவளோ அங்கு செல்வதற்கு தனக்கிருந்த உடைகளை அடகு வைத்திருந்திருப்பாள்'' என்று கூறினேன். ஏன்? அது அந்த உலகப்பிரகாரமான பொழுதுபோக்கு கொண்டாட்டத்திற்கு அவளுக்குள்ளிருந்து அவளைத் தொடர்பு படுத்தியிருந்த ஓர் ஆவியாயிருக்கிறது. கிறிஸ்துவின் மணவாட்டி என்றைழைக்கப்படுகின்ற ஜீவனுள்ள தேவனுடைய சபையானது அந்தவிதமாகத் தன்னை தேவனோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் வரைக்கும், அவள் தேவனோடு அப்படிப்பட்டதோர் வழியில் தொடர்புகொண்டுள்ள வரைக்கும், அவளுடைய இருதயம் அவ்வளவாய் மகிமையினாலும், தேவனுடைய வல்லமையினாலும் நிறையப்பட்டிருக்கும் வரைக்கும், அவள் கிறிஸ்துவைத் தவிர வேறொன்றையும் காண முடியாதிருக்கும் வரைக்கும். அவள் வழக்கம்போல உலகத்திலுள்ள உளையான பாவ சேற்றிலேயே உழலுவாள். அது உண்மையே. 57அதைத்தான் நாம் செய்ய வேண்டும். அது மாத்திரமே திட்டமாய், அந்தவிதமாகச் செய்யக்கூடிய ஒரு காரியம் மட்டுமே தேவன் வைத்திருக்கிற ஒரே நிகழ்ச்சி நிரலாயிருக்கிறது. நீங்கள் செயற்கையான முறையில் உள்ளே கொண்டு செயல்லப்பட முடியாது. நீங்கள் உள்ளேயே பிறக்க வேண்டுமேயன்றி, கைகுலுக்கினதோ அல்லது சபைக்கு ஒரு கடிதத்தைக் கொண்டு வருவதாலோ அல்ல. ஆனால் நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையில் மறுபிறப்பின் மூலம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் பிறந்திருக்க வேண்டும், அதுவே உங்களை அவருக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக்குகிறது. ஆமென். அது இதனை ஒழுங்காக்குகிறது. அதுவே இதனைச் செய்கிறது. சரி. அவள் ஒழுக்கக்கேடாக செல்கிறாள். அவள் தன்னுடைய அன்பை மற்றவர்களோடு உலகப்பிரகாரமான காரியங்களோடு பகிர்ந்துகொள்ளத் துவங்கி, உலகப்பிரகாரமான பொழுதுபோக்கு கொண்டாட்டங்களுக்கும், அவள் செல்லக்கூடாத இடங்களுக்கும் சென்று, அவள் கூறக்கூடாத காரியங்களைக் கூறுகிறாள். இங்கே ஒரு சமயம் நான்... அவர்கள் ஒரு விதமான சபை விருந்து நிகழ்ச்சி ஒன்றை மேல்தளத்தில்....... பெண்களைக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வீட்டின் அடித்தளத்தில் நான் ஏதோ ஒரு காரியத்தை செய்ய நேர்ந்தது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் பாவியாய் இருந்த போதே, நான் பயபக்தியுண்டாக்கும் சில காரியங்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதுவோ பெண்களுடையக் கூட்டமாயிருந்தது. அப்பொழுது நான் அதில் என் வாழ் நாளிலேயே ஒருபோதும் கேட்டிராத மிக மோசமான பரிகாசங்களைக் கேட்டேன். ஒரு கிறிஸ்தவன் என்றழைக்கப்படுகின்ற ஒரு நபர் அப்பேர்ப்பட்ட அசுத்தமானவை அவர்களிடத்திலிருந்து பாய்ந்து ஓடும்படி அனுமதிப்பானா என்று உங்களால் யூகித்துப் பார்க்க முடிகிறதா? 58உங்களால் ஒரேத் தொட்டியிலிருந்து தித்திப்பும், நல்லதுமான தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் ஒரு வாளியை கிணற்றிற்குள் விட்டால், அதில் வால்கொண்டு நெளியும் புழுக்களே முழுவதும் வருகிறது. நாம் அவைகளை அவ்வாறே அழைக்கிறோம். நீங்கள் மீண்டும் வாளியை தண்ணீர் எடுக்க விடும்போது, அது அதேக்காரியத்தையேக் கொண்டு வரும். அந்தத் தொட்டியை நல்லத் தண்ணீரினால் நிரப்பத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டியதாயிருக்கிறது. இன்றைக்கு சபையோடுள்ள காரியமும் அதுவாகத்தான் உள்ளது. பரலோகத்திலிருந்து வருகிற தேவனுடைய பரிசுத்த தண்ணீரினால் நிரம்ப, ஒரு தேய்த்து சுத்தப்படுத்துதலே சபைக்குத் தேவையாயிருக்கிறது என்று எங்குமுள்ளவர்களுக்குக் கூறுகிறேன். அவளுடைய இருதயம் உடனுடனாக வருகிற எந்தக் காரியத்தினாலாவது சாக்கடைக் குழியாக மாறியுள்ளது. அவள் எல்லாவிதமான பிரியர்களையும் உடையவறாயிருக்கிறாள். அவள் அவ்வாறு உடையவளாயிருப்பாள் என்று வேதம் கூறியுள்ளது. “தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாவதர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாய் இருப்பார்கள்.'' 59சரியாக ஜீவிக்க முயற்சிக்கிற ஒரு ஸ்திரீயையும், சரியாக ஜீவிக்க முயற்சிக்கிற ஒரு மனிதனையும் பாருங்கள், அவன் ஒரு “பரிசுத்த - உருளை” என்றாகிவிடுகிறான். அவள் ஒரு “மதவெறியர்” அல்லது ஏதோ ஒரு பண்டைய நாகரீகமான ஒரு காரியம் போன்றாகிவிடுகிறாள். அவள் தள்ளிவைக்கப்படுகிறார். அவள் இப்பிரபஞ்சத்து ஜனங்களால் இகழப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறாள். அது உண்மை . ஆனால் உண்மையான சபை என்ன செய்ய வேண்டியதாய் கருதப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது கவனித்துள்ளீர்களா? பழைய ஏற்பாட்டில் அவர்கள் பலி செலுத்தினபோது, அவர்கள் ஒரு பறவையைக் கொன்று, இந்த இறந்தத் துணையினுடைய இரத்தத்தை மற்றொன்றின் மேல் பூசிவிட்டனர்; அப்பொழுது இந்தப் பறவை இறந்த துணையினுடைய இரத்தத்தை சிந்திக்கொண்டே பூமியினூடாகப் பறந்து சென்றது. சபையும் உண்மையான இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாகிறபோது, அவள் தன்னோடுள்ள இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை, பூமியின் மேல் தெளித்துக்கொண்டே, “பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர்” என்றே கூறிக்கொண்டே தொடர்ந்து செல்லும். அவளுடைய சூழ்நிலையும், அவளுடைய ஒவ்வொரு துணுக்கும் தேவனுடையதாயிருக்கும். அவளுடைய முழு அலங்காரமும் தேவனுடையதாயிருக்கும். உங்களால் அதைத்தவிர வேறொன்றையுமே எதிர்ப்பார்க்க முடியாது. 60அந்தக் காரணத்திற்காகவே ஜனங்களும் கூட சபைக்கு வருகிறார்கள். சீட்டு விளையாடுவதற்கு அல்ல, பந்தயம் வைத்து சீட்டாடுவதற்கல்ல, அடித்தளத்தில் நடனமாடுவதற்கல்ல, இரவு ஆகார விருந்துகள் மற்றும் அதைப் போன்ற காரியங்களை நிகழ்த்துவதற்கல்ல. அது உலகத்திற்கானதாயுள்ளது. நாம் அவர்களோடு ஒருபோதும் ஒப்பிட்டுப்பார்க்கக் கூடாதவர்களாய் இருப்போம், அதைச் செய்ய முயற்சிக்கும் நமக்கு அவமானமே உண்டாகும். நாம் பரிசுத்த ஆவியை, வல்லமையை, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்க வேண்டும். அவர்கள் பெற்றிராத ஒரு காரியத்தை நாம் பெற்றிருக்கிறோம். எனவே அவர்களை மாதிரியாக பின்பற்ற முயற்சிக்காமல், இதற்காக நாம் ஜீவிப்போமாக. நாம் உண்மையென்று அறிந்துள்ளதற்காக ஜீவிப்போமாக. கிறிஸ்துவுக்குள் ஜீவிப்போமாக. இயேசுவோ, “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” என்றார். நம்முடைய சாட்சியாயிற்றே! 61நம்முடைய பெந்தேகோஸ்தேக் குழுக்களும் கூட, நான் இதைக் கூற அவ்வளவு மோசமாக வெறுக்கிறேன். நம்முடைய பெந்தேகோஸ்தேக் குழுக்கள் அதேக் காரியத்திற்குள்ளாக, சரியாக அதேப் போக்கிற்குள்ளாகவே வீழ்ச்சியுற்றுக் கொண்டிருக்கின்றன என்பதில் வியப்பொன்றுமில்லையே. அவர்கள் எதைப் பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்கிறார்களோ அதை அவர்கள் பெற்றிருக்கவில்லையென்று ஜனங்கள் கூறுவதில் வியப்பொன்றுமில்லையே. இந்தப் பெந்தேகோஸ்தே சபைக்குள்ளாக இயேசு கிறிஸ்துவின் அதே ஜீவன் பிரதிபலிக்கப்படுமளவிற்கு இதனுடைய அசைவு சர்வல்லமையுள்ளத் தேவனுடைய வல்லமையினால் ஒன்று சேர்ந்து கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாமோ உலகத்தின் மாதிரியைப் பின்பற்ற விரும்புகிறோம். “நாம் எப்படியும் அதைச் செய்யத்தான் போகிறோம்.” பார்த்தீர்களா? “நாம் அதைக் குறித்து நம்முடைய சொந்த வழியை உடையவர்களாயிருக்க விரும்புகிறோம்.” ஆனால் நாம் அதைச் செய்யக் கூடாது. அதைச் செய்வது தவறாயுள்ளது. சபைகளோ ஸ்திரீயானவள் ஒழுக்கக்கேடாக சென்றுவிட்டதைப் போன்றே உள்ளன. நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முதலாவது காரியமென்னவெனில், துவக்கத்தில் சுமார் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தேவன் இந்தப் பெந்தேகோஸ்தே சபையைப் பிறப்பித்தபோது அவள் சரியாகத்தான் இருந்தாள். அவள் பரிசுத்தமாக ஜீவித்தாள். அவள் பரிசுத்தமாயிருந்தாள். தேவனுடைய வல்லமை அவளோடிருந்தது. ஆனால் நாம் தொடர்ந்து செல்லச் செல்ல, நாம் உலகத்தோடு பொருந்திப்போகத் துவங்கிவிட்டோம். 62நீங்கள் அறிந்துள்ள முதல் காரியமானது, நாமோ மிகப்பெரிய ஒரு கட்டிடத்தை உடையவர்களாயிருக்க வேண்டும் என்றும், அது அந்த மூலையில் உள்ள மெத்தோடிஸ்களின் கட்டிடத்தைக் காட்டிலும் விஞ்சி ஒளிர்கின்றதாய் காணப்பட வேண்டுமென்றே விரும்புகிறோம். நாம் மிகப்பெரிய ஏதோ ஒரு காரியத்தை, மிகப்பெரிய காரியத்தை, மிகப்பெரிய காரியத்தை, மிகப்பெரிய காரியத்தை உடையவர்களாயிருக்க வேண்டுமென்றே விரும்புகிறோம். அதுவே ஒரு அவமானமாயிருக்கிறது. நம்மில் அநேகர்தாமே இறுமாப்படைந்துள்ளோம். நாம்...... பெந்தேகோஸ்தே சகோதரன் யாரோ ஒருவரை அங்கே கீழே காணும்போது, சிறு ஊழியத்தை அல்லது மிகச் சிறிய சபையைக் காணும்போது, அவர்களோ ஒரு பெரிய சபைக்கு செல்வதாகக் கூறுகிறார்கள். மேலும், “நாங்கள் ஆதி சபையைச் சார்ந்திருக்கிறோம் அல்லது பெரிய சபையைச் சார்ந்திருக்கிறோம்,” அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றைக் கூறி ஏளனமாய்ப் பார்க்கிறார்கள். உங்களுடைய இறுமாப்பை தளர்வுற்று அடக்க உங்களுக்குத் தேவையென்னவென்றால் பரிசுத்த ஆவியேயாகும், அது உண்மையே. உண்மையான அசலான பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது ஒரு விலையுயர்ந்த சூட் துணி அணிந்திருப்பவர் தன்னுடையக் கரங்களை மிக எளிய ஆடை அணிந்திருப்போர் மீது போட்டு, அவரை “சகோதரனே ” என்று கூறச் செய்யும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படிக்குச் செய்யும். உண்மை. உண்மையான பண்டையகால இரட்சிப்பு, சர்வல்லமையுள்ள தேவனின் வல்லமையானது பட்டாடை உடுத்தியிருப்போர் தங்களுடையக் கரங்களை சாதாரண பருத்தியாடை உடுத்தியிருப்போர் மீது போட்டு, “சகோதரியே, நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறச்செய்யும், ஆம் ஐயா. நிச்சயமாகவே அவ்வாறு செய்யும். 63ஆனால் நாமோ உலகத்தோடு செல்லத் துவங்கி, அதன் அலைகளோடு அடித்துச் செல்லப்படுகிறோம். நம்முடைய சபை அவ்வாறு உள்ளது. நாம் மெத்தோடிஸ்டுகளைக் குறித்தோ, பாப்டிஸ்டுகளைக் குறித்தோ இனிமேல் பேச வேண்டியதில்லை. இது நம்மைக் குறித்ததாயுள்ளது. இது நம்முடைய சொந்த நிலைமையாயுள்ளது. அந்தக்காரணத்தினால்தான் பரிசுத்த ஆவியானவரால் அசைவாட முடியவில்லை. அந்தக் காரணத்தினால்தான் தேவன் தம்முடைய உறுதியீட்டை இன்றிரவு எந்த ஸ்தாபனத்தின் மேலும் வைக்க முடியவில்லை. காரணம் புறஜாதிகளோ ஒரு தேசமாக தெரிந்துகொள்ளப்படவில்லை. அவர்கள் அவருடைய நாமத்தினிமித்தமாக புறஜாதிகளிலிருந்து ஒரு ஜனமாக தெரிந்துகொள்ளப்பட்டனர். தேவன் தனிப்பட்ட நபர்களைத் தெரிந்துகொள்வார். இப்பொழுது நம்முடைய ஸ்தாபனங்கள் ஒரு நல்ல பணியைச் செய்கின்றன என நான் கருதுகிறேன். அது சரிதான். ஆனால் நீங்களோ, “நான் பெந்தேகோஸ்தேக்காரன், ஏனென்றால் நான் ஒரு பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தைச் சார்ந்தவன்” என்று கூறி, அதன்பேரில் சார்ந்திருக்க முடியாது. நீங்கள் ஒரு பெந்தேகோஸ்தே அனுபவத்தை பெற்றுக்கொள்ளும்போதே நீங்கள் பெந்தேகோஸ்தேக்காரராயிருக்கிறீர்கள். நீங்கள் கத்தோலிக்க சபையை சார்ந்திருந்தாலும் எனக்கு கவலையில்லை, அவ்வனுபவத்தைப் பெற்றிருந்தால் நீங்கள் பெந்தேகோஸ்தே காரராயிருக்கிறீர்கள். உங்களால் பெந்தேகோஸ்தேவை ஸ்தாபனமாக்க முடியாது. பெந்தேகோஸ்தே என்பது ஒரு அனுபவமாயிருக்கிறதேயன்றி ஒரு ஸ்தாபனமல்ல. அது உண்மையே. 64ஆனால் பெந்தேகோஸ்தே ஜனங்களாகிய நாமோ, நாம் பெந்தேகோஸ்தே என்னும் பெயரை உடையவர்களாய் இருக்கிறபடியால், 'நாம் துணிந்து சென்று, உலகப்பிகாரமாக வாழ்ந்து, நாம் விரும்புகிற எந்தக் காரியத்தையும் செய்யலாம்' என்று எண்ணத் துவங்கியுள்ளோம். நாம் நிம்ரோத்தைப் போல கோபுரத்தில் ஏற விரும்புகிறோம்; அது சாம்பலாய் போகும். ஆதாமினுடைய அத்தி - இலை ஆடையைப் போன்றேயாகும்; அவள் திரும்பிச் செல்வாள். பிரான்ஸில் உள்ள சீக்ஃபிரீட் எல்லைக்கோடு போன்றும், ஜெர்மனியில் உள்ள மாகினாட் எல்லைக்கோடு போன்றுமாகும்; அவள் அழிந்துபோனாள். காரணம், வேறெந்த துருகமும் இல்லை, வேறெந்த நிலையான நிற்குமிடமும் கிடையாது. “ஆனால் கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” நீங்கள் அதற்குள் ஓடும்போது, நீங்கள் அந்த நாமத்தை, நாமத்தையே சூடிக்கொள்ளுகிறீர்கள்; வெறுமென ஒரு பெயரை அழைப்பது அல்ல, ஆனால் நீங்கள் அந்த பெயரும், நபருமாய் இருக்கிறீர்கள், ஜீவியத்தில் கிறிஸ்துவைப் போல இருக்கிறீர்கள். ஆமென். அவர் அற்புதமானவராய் இருக்கிறார். ஆம். 65ஒரு ஸ்திரீயானவள் தன்னுடையக் கணவனிடத்தில் கொண்டிருந்த நேசத்தை மற்றொரு மனிதனிடத்தில் பகிர்ந்துகொள்வது போன்று சபையும் அதேக் காரியத்தை, ஆவிக்குரிய வேசித்தனத்தைப் புரிந்துள்ளது. அந்த ஸ்திரீ கணவனோடு வாழத் தகுதியற்றவள். நீங்கள் அதை அறிவீர்கள். சபையானது தன்னுடைய ஐக்கிய உறவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ளத் துவங்கும்போது, தேவன் எரிச்சலுள்ள ஒரு தேவனாயிருக்கிறார். அவர் இஸ்ரவேலை அந்தக் காரணத்திற்காகவே தள்ளிவிட்டார், எனவே அவருடைய குமாரனும் அதேவிதமாகத் தள்ளிவிடுவார். அவளுக்குள் கரைதிரையற்றதாயிருக்கிற ஒரு மணவாட்டியை அவர் பெற்றுக்கொள்ளப் போகிறார். ஆமென். அவருடைய சொந்த இரத்தத்தினால் அவள் முழுமையாய் கழுவப்பட்டிருக்கிறாள். அது உண்மை. ஆகையால் நாம் எங்கே நிற்கிறோம் என்பதை நாம் பார்ப்போம், கலியாணம் வருவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. 66இப்பொழுது அவள் ஆவிக்குரிய வேசித்தனம் செய்கிறதையும், உலகத்தோடு புறம்பே செல்லுவதையும், ஏதோ ஒரு காரியத்தைக் கூறி, வித்தியாசமான ஏதோ ஒன்றாக வாழுவதையும் நாம் கண்டறிகிறோம். அது ஒருபோதும் கிரியை செய்யாது. எஸ்தர் செய்ததைப் போன்று சபையானது செய்ய வேண்டியதாயுள்ளது. எஸ்தரோ உலகத்தின் அலங்கரிப்பைப் புறக்கணித்தாள். நாம் அதை சிறு புஸ்தகமாகிய எஸ்தரில் அறிந்துள்ளோம்; அந்த மொர்தெகாய் எப்படி ....... அவருடைய சிறிய தகப்பனுக்கு ஒரு குமாரத்தி இருந்தாள். அது மேதிய பெர்சியர்களின் ஆளுகையின் காலமாயிருந்தது. இது அங்கே ஒரு மிக அழகான மாதிரியாயிருக்கிறது. அந்த நாளில் உலகத்தில் இருந்த மகத்தான இராஜாக்களில் ஒருவரான அந்த இராஜா, அவர் ஒரு பெரிய விருந்து பண்ணியிருந்தார். அப்பொழுது அவர் இராணியைத் தன் அருகில் வந்து அமரும்படிக்கு அழைத்தார். ஆனால் அவளோ அதைச் செய்ய மனதில்லாதிருந்தாள். எனவே அவள் அதைச் செய்ய மறுத்துவிட்டாள். ஆகவே அப்பொழுது அவன் என்ன செய்தான்? தன்னுடைய சொந்த மனைவி வர மறுத்துவிட்டபடியால் என்ன செய்வதென்றேத் தெரியாமல், அவன் மிகவும் அவனமானமடைந்தான். 67அந்த முழு சம்பவமுமே இன்றைக்கு கிறிஸ்துவிற்கு மாதிரியாக உள்ளதென்று நான் கருதுகிறேன். கிறிஸ்துவோ நம்மை அவரோடுகூட உன்னதங்களிலே உட்காரும்படிக்கு அழைத்திருக்கிறார். நாமோ அதைக் குறித்து வெட்கமடைகிறோம். அநேக ஜனங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று அவர்கள் கூற வெட்கப்படுகின்றனர். பெந்தேகோஸ்தே ஜனங்களே, அது உண்மை. அவர்கள் அதைக் கூற வெட்கப்படுகின்றனர். நாம் அவரைக் குறித்து வெட்கப்படுகின்றோம். ஆகையால் அந்த இராணியோ வர மனதில்லாதிருந்தாள். அவள் வர மறுத்துவிட்டாள். அது அவனை அவமானப்படுத்திவிட்டது. அவனுடைய முகமோ சிவந்துப் போய்விட்டது. எல்லோருமே அதைக் கவனித்தனர். இயேசுவானவர் நம்மை ஒரு பணிக்காக அழைக்கும்போது, ஜக்கியத்திற்காகவும், சகோதரத்துவத்திற் காகவும் பெந்தேகோஸ்தே அசைவின் பேரில் அழைக்கும்போது, நாமோ மற்றவருக்காக வளைந்து கொடுக்காத அளவிற்கு நாம் சிறு குழுக்களில் மிக இறுக்கமாக இணைந்து ஸ்தாபனமாக்கிக்கொண்டுள்ளபோது, அவருடைய முகமானது கூட சற்று சிவந்து போயிருக்காதா என்று நான் வியப்புறுகிறேன். நாமோ மிகவும் உலகப்பிரகாரமாக மற்றும் அது போன்ற காரியங்களையே அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் பெந்தேகோஸ்தே என்னும் பெயரைக் குறித்தே வெட்கமடைந்து கொண்டிருக்கிறோம். சில ஜனங்களோ அதைக் கூறுவதற்கே பயப்படுகின்றனர். மேலும், “நல்லது, நான் அதைச் சேர்ந்தவன். நான் ஒரு கிறிஸ்தவன், ஆனால்.......” என்று கூறுகிறார்கள். நான் ஒரு பெந்தேகோஸ்தே அனுபவத்தை பெற்றுள்ளேன் என்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிவிப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவருடைய பாகமாயிருக்கிறேன் என்று கூறுவதே எனக்கு எப்போதும் உண்டாயிருந்ததிலேயே மிக மகத்தான சிலாக்கியமாயுள்ளது. 68அப்பொழுது அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்கும்படியாக சில அறிவுரைத் தகவல் கூறுவோரை வைத்திருந்தான் என்பதை நாம் இப்பொழுது கண்டறிகிறோம். அவர்களோ, “இது இவ்விதமே செல்லுமேயானால், அப்பொழுது தேசத்தினூடாக உள்ள மற்றப் பெண்மணிகளும் இந்த முதலில் இருந்த இந்தப் பெண்மணியின் மாதிரியையே தெரிந்து கொள்வார்கள்” என்று கூறினர். உண்மையாகவே அதுதான் இன்றைக்கு சம்பவித்துக்கொண்டிருக்கிறது. நான் இந்தப் பெண்களில் சிலரை நோக்கிப் பார்க்கிறேன். நான் உங்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தவில்லையென்றே நான் நம்புகிறேன். ஹு...ஹு..... சரி. இங்குள்ள இந்த முதலில் கூறப்பட்டிருந்த பெண்மணியைப் போன்றே, பெருந்தலையாக காட்சியளிக்கும்படியாக தலைமுடியை வெட்டிக்கொண்டு அதேவிதமாய் இருக்க முயற்சித்தல். நான் என்னுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை ஒருபோதும் கண்டதேயில்லை. அன்றொரு நாள் நான் கடையில் என்னுடைய மனைவிக்காக காத்துக்கொண்டிருக்கையில், அங்கு ஒரு பெண்மணி வந்தாள். அப்பொழுது அந்தப் பெண்மணியினுடைய தலையோ அவ்வளவு பெரியதாக இருந்தது. அவள் தன்னுடையக் கண்களுக்கு கீழே பச்சை வர்ணம் பூசியிருந்தாள். அப்பொழுது நானோ, “விகாரத்தோற்றத்தில் பீதியுண்டாக்கும் மனிதனே, திரும்பிப் போ. நான் நன்றாயுள்ளேன்'' என்று கூறினேன். அது அச்சந்தருகிற காட்சியாயிருந்தது. அது உங்களுக்கு பயமுண்டாக்கிவிடும். அது என்ன? அதுவே அந்த முதலில் இருந்த பெண்மணியின் நிலையாகும். அது அந்த முதலில் இருந்த பெண்மணியாயிருக்கிறது. அதுதான் இது. அவர்கள் அதன் மூலமே ஒரு மாதிரியை தெரிந்துகொள்கிறார்கள். 69இப்பொழுது நான் இதைக் கூறட்டும். நான் இதை வேடிக்கைக்காக கூறவில்லை, ஆனால் நீங்கள் புரிந்துகொள்ளும்படியான ஓர் உவமையில் கூறினேன். அதுவே வயோதிக கிறிஸ்தவர்களாகிய நீங்கள் இந்த வாலிபர்களுக்கு செய்து கொண்டிருக்கிறதாயுள்ளது. முற்றிலும் உண்மை. நீங்கள் மாதிரிகளாயிருக்கும்படி கருதப்பட வேண்டும். பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாகக் கூறுகிற பெந்தேகோஸ்தேக்களாகிய நீங்கள் மெத்தோடிஸ்டுகளுக்கு, பாப்டிஸ்டுகளுக்கு, பிரஸ்பிடேரியன் களுக்கு மாதிரிகளாயிருக்க வேண்டும். அந்த முதலில் இருந்த பெண்மணியைப் போன்றல்ல, ஆனால் நீங்களோ இயேசுவைப் போன்றிருக்க வேண்டும். இங்கே என்ன செய்ய வேண்டும் என்றும், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். நாம் அவருடைய விதிமுறைகளையும், மாதிரிகளையும் பின்பற்ற வேண்டும். ஆனால் அந்தவிதமாகவே நாம் அதைக் கண்டறிகிறோம். எஸ்தர்....... 70இந்த இராணியோ, அவள் அதற்கு செவிக்கொடுக்கவில்லை. அவள் வராமல் அவனை அவமானப்படுத்திவிட்டாள். அப்பொழுது, “இந்தத் தேசத்தின் முதல் பெண்மணி அந்தவிதமான மாதிரியாயிருந்தால் மற்றெல்லா பெண்மணிகளும் அதையேச் செய்வார்கள். ஆகையால் ஒரு மனிதன் தன்னுடைய மனைவிைைய அழைக்கும்போது, அவளோ, போய் ஆற்றிலே குதி' என்று கூறுவாளே” என்று கூறினர். பார்த்தீர்களா? பையனே, அவன் உண்மையாக அமெரிக்காவையே முன்னறிவித்தான், அவன் முன்னறிவிக்கவில்லையா? அவ்வாறு செய்கையில் அவனைக் குறித்து கொஞ்சம் ஞானமாயிருந்த ஒரு மனிதன் இருந்தான். எனவே அவன் வந்து இராஜாவோடு ஆலோசனை பண்ணினான் என்று இப்பொழுது நாம் அதைக் கண்டறிகிறோம். எனவே அவன், “செய்ய வேண்டிய காரியமோ அவளை வெளியேற்றுவதேயாகும். உமக்கு ஒரு மனைவியை தெரிந்தெடுக்க தேசத்தினூடாக செய்தியை அனுப்பி, அங்குள்ள எல்லா கன்னிகைகளையும், வாலிப கன்னிகைகளையும் அழைத்து வர வேண்டும்” என்று கூறினான். 71அதுவோ இராஜாவுக்கு பிரியமாயிருந்தது. எனவே அவன் அரண்மனையில் பணிபுரியும் வழிமனைப் பணிப் பெண்கள் முதலானோரை அனுப்பினான். அவர்கள் போய் உலகத்திலேயே மிக மகத்தாய் அவன் ஆளுகை செய்த நாடுகளி னூடாகவும், எல்லா இராஜ்ஜியங்களினூடாகவுமிருந்த எல்லா ரூபவதியான வாலிபக் கன்னிகைகளையும் முடிந்தளவு கொண்டு வரும்படி புறப்பட்டுச் சென்றனர். அப்பொழுது அவன் இதைச் செய்தபோது, அந்தச் செய்தி இந்தச் சிறு யூத பெண்ணண்டை வந்தது. சரியாகக் கூறினால் அவள் ஒரு விதமாக ஒதுக்கித் தள்ளப்பட்டிருந்தாள், ஏனென்றால் நீங்கள் பாருங்கள், அவள் புறஜாதிகளைப் போல ஒருபக்கமாக ஒதுக்கித்தள்ளப்பட்டிருந்தாள். அவளுக்கு தகப்பனும், தாயும் இல்லாதிருந்தனர். மொர்தெகாய் என்னும் தன்னுடைய சிறிய தகப்பன் அவளை வளர்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அவள் அந்த தகுதித் தேர்விற்குச் செல்ல வேண்டியதாய் இருந்தது. ஆகையால் அப்பொழுது அவர்கள் என்ன செய்தனரென்றால், அவர்கள் இந்தப் பெண்பிள்ளைகளை அநேக மாத சுத்திகரிப்பிற்காக கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. அப்பொழுது அவர்கள் இராஜாவுக்கு முன்பாகச் செல்லும்படியாக இவர்களை வாசனைத் திரவியமிடச்செய்து, எல்லாவிதமான அலங்கரிப்புக்களையும் செய்து, இவர்களை ஆயத்தப்படுத்த வேண்டியவர்களாயிருந்தனர். 72இப்பொழுது கிட்டத்தட்ட அந்தவிதமாகவே உலகமானது இன்றைக்கு சபையை ஆயத்தப்படுத்த விரும்புகிறது. உலகத்தோடு அதை அலங்கரிக்கிறது. உலகத்தின்படியான மாதிரியைப் பின்பற்றுதல்; அதிகமான அங்கத்தினர்களை சேர்த்துக்கொள்ள முயற்சித்தல், அவர்களுடைய ஐக்கியத்தில் உள்ள எந்தக் காரியத்தையாவது எடுத்துக்கொள்ளுதல் போன்றவைகளைச் செய்கிறது. என்னே! அது ஒரு பரிதாபமான காரியமாயிருக்கிறது. ஒரு ஸ்தாபனம் மற்றொன்றை மிஞ்சிட முயற்சித்து ஓர் அங்கத்தினருக்காக எந்தக் காரியத்தையும் ஏற்று சமாளிக்கிறார்கள். நீங்கள் அவர்களை இந்த ஸ்தாபனத்தில் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அவர்கள் சுத்தமாக்கப்பட்டு, தேவனுடைய ஆவியினால் மீண்டும் பிறக்கும்வரைக்கும் அவர்கள் கிறிஸ்துவின் ஐக்கியத்திற்குள் ஒருபோதும் வரவேமாட்டார்கள். அது உண்மை . அவர்கள் இங்குள்ள ஒரு புத்தகத்தின் மேல் தங்களுடையப் பெயரை பதிவுசெய்து கொள்ளலாம், ஆனால் அது கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினால் எழுதப்படுகிற வரையில் அங்கே மேலே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் இருக்காது. 73எல்லா ஸ்திரீகளுமே தாங்கள் அழகாகக் காணப்படும்படிக்கு அவர்கள் தங்களை அலங்கரித்து ஆயத்தம் செய்துகொண்டனர். ஓ, அவர்கள் உண்மையாகவே அந்த முதல் பெண்மணியைப்போலிருக்கும்படியான ஏதோஒரு சாயலை தங்கள்மேல் பெற்றிருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர்கள் இராஜாவுக்கு முன்பாகப் பிரசன்னமாகப் போவதாயிருந்தக் காரணத்தால் அவர்கள் யாவருமே தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். அதைக் குறித்த முழு காரியமுமே இன்றைக்கு நம்முடைய சபைகளோடு இருந்துகொண்டு வருகிற காரியமாகவே உள்ளது என்றே நான் கருதுகிறேன். அவர்கள் இராஜாவை சந்திக்க முடியும் என்று எண்ணி, அவர்கள் தங்களை உலகப்பிரகாரமாக, உலகப்பிரகாரமான கலைநிகழ்ச்சிகளை உடையவர்களாயும், அதில் உலகப்பிரகாரமான காரியங்களை வைத்துக்கொண்டு, உலகத்தின் காரியங்களை நடப்பித்துக்கொண்டு உலகத்தில் நட்புகொண்டு ஆயத்தப்பட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். தேவன் அதைக் குறித்து கவலைக் கொள்வதில்லை. அவர் அதை வெறுக்கிறார். ஆனால் நாமோ உலகத்தைப் போன்றே நடந்துகொள்ள விரும்புகிறோம். நான் கூறியிருக்கிற நம்முடைய சபைகளில் சில மது அருந்தும் அறைகளை அனுமதிக்க, சபையில் உள்ள உதவிக்காரர்கள் (Deacons) போன்றவர்களே அதில் அருந்துகிறார்கள். சில நேரங்களில் மேய்ப்பர்களே நான்கு அல்லது ஐந்து முறை திருமணம் செய்துள்ளனர், அவர்களில் சிலர் சிகரெட்டுகளைப் புகைக்கின்றனர். மேலும், “அவர்கள் - அவர்கள் அதை விட்டுவிடுவார்கள். அவர்கள் சரியாக்கிக்கொள்வார்கள்” என்று கூறுகிறார்கள். ஓர் இரவில் ஒரு மதுபானமருந்தும் அறையில் இருப்பவனை அழைத்துவந்து, அடுத்த இரவே அவனை பிரசங்க பீடத்தில் நிறுத்துகிறார்கள். அப்படிப்பட்ட எந்தக் காரியத்திலுமே நான் நம்பிக்கைக் கொள்வதில்லை. ஒரு மனிதன் நிரூபிக்கப்பட வேண்டும். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அதவாது ஏராளமான சமயங்களில் நாம்..... அழைக்கிறோம்..... 74பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் நான் விசுவாசங் கொண்டுள்ளேன். அந்நிய பாஷைகள் பேசுவதில் நான் விசுவாசங்கொண்டுள்ளேன், ஆனால் நாம் அதன்பேரில் மிக அதிக முக்கியத்துவத்தை வைத்துள்ளோம் என்றே நான் கருதுகிறேன். ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசலாம், ஒரு ஸ்திரீ அந்நிய பாஷையில் பேசலாம், ஆனால் அவளுடைய ஜீவியமும், அவனுடைய ஜீவியமும், அவர்கள் பேசிகொண்டிருக்கிற அந்நிய பாஷையோடு ஒத்துப்போகவில்லையென்றால், அப்பொழுது அது தவறான அந்நிய பாஷையாகும், ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் உங்களை வேதாகமத்தில் உள்ளது போன்றுதான் செய்லபடச் செய்வார். அது கிறிஸ்துவின் பரிபூரண வளர்ச்சியண்டைக்கே உங்களைக் கொண்டுவரும். அந்நிய பாஷைகள் பேசுகிற ஒரு நபரை நீங்கள் எடுத்துக்கொண்டால், அவர்கள் அதிக எரிச்சலோடு சண்டையிட்டு, அண்டை வீட்டாரைக் குறித்து பேசுகிறார்கள் மற்றும் அது போன்ற எல்லாக் காரியங்களையுமே செய்கிறார்கள். அப்படியிருக்க நீங்கள் அதைப் பரிசுத்த ஆவியென்று ஏன் அழைக்கிறீர்கள்? அது பரிசுத்த ஆவியாய் இருக்க முடியாது. இல்லை , ஐயா. பரிசுத்த ஆவியோ சாந்தம், சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், தயவு, பொறுமை, விசுவாசம் என்பதாயுள்ளது. பரிசுத்த ஆவியோ ஜீவனுள்ள தேவனுடைய சபையில் இனிமை, தாழ்மை, தன்னடக்கம், ஒருவரிலொருவர் அன்புகூருதல், நீடிய பொறுமை ஆகிய ஆவியின் கனிகளையேத் தருகிறது. 75ஒரு சகோதரன் தவறாய் போயிருந்தால், அப்பொழுது அவனை அல்லது மற்றொருவனை அடிக்காதீர்கள். நீங்கள் அவன் பின்னே சென்று, உங்களால் அவனைத் திருப்பிக்கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள். பிரசங்கியார் அதைத் செய்வதற்காக காத்திருக்காதீர்கள். நீங்கள் யாராவது அதைச் செய்யுங்கள். பிரசங்கியார் அதைச் செய்ய முடியாமலிருக்கலாம், உதவிக்காரர்களால் அதைச் செய்ய முடியாமலிருக்கலாம். ஒவ்வொருவரும் இந்தக் கிறிஸ்துவின் சரீரத்தின் ஓர் அங்கத்தினராயிருக்கிறீர்கள், எனவே ஒருவருக்காக ஒருவர் செல்ல வேண்டும். நாம்....... நாம் கிறிஸ்துவினுடைய ஆவியை நமக்குள்ளே உடையவர்களாயிருப்போமேயானால்...... அவர் அந்த மகத்தான உவமையைக் கற்பித்தார், அவர்கள் தொண்ணூற்று ஒன்பதை விட்டுவிட்டு, ஒன்றைத் தேடி பின் சென்றனர். அதைத்தான் நாம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆனால் நாமோ, “ஓ, அவர்கள் போகட்டும்” என்று கூறுகிறோம். நாம் அதை ஒருபோதும் செய்யக் கூடாது. நாம் சாந்தமுள்ளவர்களாய், மன்னிக்கிறவர்களாய், நீடிய பொறுமையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அதுவே ஆவியின் கனியாயுள்ளது. இப்பொழுது....... அவர்கள் எஸ்தரை....... அவள் தன்னை எல்லாவிதத்திலும் அலங்கரித்து ஆயத்தப்படுத்தி இராஜாவுக்கு முன்பாகத் தன்னைக் காண்பிக்கும்படியாக இந்த இடங்களில் ஒன்றில் வைத்தார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். என்னே! அவளோ அதற்கு மறுத்துவிட்டாள். அவள் அதை விரும்பவில்லை. அவள் இருந்தவிதமாகவே செல்ல விரும்பினாள். ஆமென். 76நாமோ இன்றைக்கு உலகத்தைப் போன்றே நடந்து கொள்ள விரும்புகிற சபைகளையே பெற்றுள்ளோம், ஏனென்றால் நாம் பெரிதாகிவிட்டோம். தேவனோ, “ஒரு சமயம் அது சிறிதாயிருந்தபோது, அவர்கள் அவரை சேவித்தனர். ஆனால் அது பெருகிவிட்டபோதோ, அவர்கள் அவரை மறந்துவிட்டனர்” என்று கூறினார். அது உண்மை. நாம் இங்கு எங்கோ உள்ள தெருச் சந்தில் கீழே கிடந்த தகரத் தட்டினை எடுத்து முரசாக வைத்துக்கொண்டு, நம்முடைய கரங்களில் அதை தட்டிக்கொண்டும், பழைய நரம்பிசைக் கருவி வாத்தியத்தை இசைத்துக்கொண்டும் ஒரு தெருக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது நீங்கள் தாழ்மையாய் இருந்தீர்கள். ஆனால் நாம் மூன்று அல்லது நான்கு மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கட்டிடங்களையும், அதுபோன்ற மகத்தான பெரியக் காரியங்களையும் பெற்றுக்கொண்டபோது, நாம் அதன்பின்னர் மிகுந்த கர்வமடைந்து, நாம் அதைக் குறித்தே மறந்துபோய், உலகத்தோடு மெருகேற்றிக்கொள்கிறோம், அது உண்மை . 77அன்றொரு நாள் நான் ஓர் இடத்தில் இருந்தேன். அங்கு இருந்த புனிதத்தன்மை என்ற ஸ்தாபன சகோதரனுக்காக ஒரு கூட்ட ஜனங்கள் பணிபுரிந்துகொண்டிருந்தனர். அங்கே இருந்த ஒவ்வொரு ஸ்திரீயும் காஃபி பருகும் இடைவேளை நேரத்தில் காஃபி பருக வரும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் குட்டையான தலைமுடியைக் வெட்டிக்கொண்டிருந்தவர்களாயும், உதட்டுச்சாயம் பூசிக்கொண்டிருந்தவர்களாகவுமே காணப்பட்டனர். இப்பொழுது நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாமே, அதைக் கூறுவது உங்களுடைய வேலை அல்ல” என்று கூறலாம். அதைக் கூற எனக்கு உரிமை உண்டு. வேதம் அதைக் கூறுகிறது. அது உண்மை . ஏராளமான பெந்தேகோஸ்தே ஸ்திரீகள் ஒரு புருஷனுடையதாய் காணப்படுகிற உடைகளை உடுத்திக் கொள்கிறார்கள். அதுவோ தேவனுடையப் பார்வையில் அருவருப்பாயுள்ளது என்று அவர் கூறியுள்ளார். அது உண்மை . நீங்கள் அந்தவிதமாக இருந்துகொண்டு எப்படிப் பரலோகம் செல்ல எதிர்பாக்க முடியும்? பரிசுத்த ஆவியானது அங்கு இருக்கவில்லை என்பதையே அது காண்பிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அங்கு இருந்திருப்பாரேயானால், அப்பொழுது அவர் கடிந்து கொண்டிருந்திருப்பார். உண்மை . ஓ, நீங்கள் சத்தமிடலாம், அந்நிய பாஷைகளில் பேசலாம், மேலும் கீழும் ஓடலாம், ஆவியில் நடனமாடலாம். நான் இந்துக்கள், இந்தியர்கள் இன்னும் மற்றவர்கள் அதைச் செய்வதைக் கண்டிருக்கிறேன். உங்களை ஜீவிக்கிற தேவபக்தியுள்ள ஜனங்களாக ஆக்குவதற்கு பரிசுத்த ஆவியின் வல்லமையும், நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறதை ஆதரிக்கக் கூடிய ஒரு ஜீவியமும் இருந்தாலொழிய அது ஒருகாரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. அவ்வாறிருப்பதே கிறிஸ்துவின் மணவாட்டியாயுள்ளது. 78எஸ்தர் ஒரு மணவாட்டியாய் மாறுவதற்கிருந்தாள், ஆயினும் அவள் உலகத்தின் எந்த அலங்கரிப்பையும் விரும்பவில்லை. அவள் இருந்தப்பிரகாரமாகவே இராஜாவுக்கு முன்பாகச் செல்ல விரும்பினாள். அவள் பெந்தேகோஸ்தே ஸ்திரீகள் இருக்க வேண்டிய பிரகாரமாக ஒரு சாந்தமுள்ளத் தாழ்மையான ஆவியினால் தன்னை அலங்கரித்துக்கொண்டாள். இவர்கள் எல்லோருமே மனம்போன போக்கில் மயக்கும் விதத்தில் தங்களுடைய விறுவிறுப்பான ஆடல் இசை வகையிலான புதிய அலங்காரத்தோடு முதன்மையான பெண்களாய் இராஜவிற்கு முன்வந்தபோது, அவனோ அவர்களைப் பார்த்துவிட்டு, அவர்களை மறுமனையாட்டிகளோடு ஓர் அறையிலே அடைத்து வைத்தான். ஆனால் இந்த எஸ்தர் அவனுடையப் பார்வையில் தோன்றினவுடனே, அவன் அந்த இனிமையான, தாழ்மையான சாந்தமான ஆவியின் கணநேரக் காட்சியைக் கண்டமாத்திரத்தில், அவன், “அதற்குரியவள் அவள்தான். எனவே போய் அந்தக் கிரீடத்தைக் கொண்டுவந்து, அதை அவளுடைய தலையில் சூடுங்கள்” என்றான். அந்த விதமாகத்தான் அது இருந்தது. அந்தவிதமான ஓர் ஆவியினால் அவர்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வார்களாக, ஸ்திரீகள் மட்டுமின்றி ஆண்களும் கூட தங்களை அந்தவிதமான ஓர் ஆவியினால் அலங்கரித்துக்கொள்வார்களாக. அப்பொழுதே நீங்கள் இனிமையாக, போற்றிப்பாராட்டும் வகையில் மணவாட்டியாக மாறிக்கொண்டிருக்கிறீர்கள். எஸ்தர் தன்னுடைய இருதயத்தை சுத்தப்படுத்தியிருந்தாள். 79நாமோ அதிகப்படியாக இந்த வெளிப்புற தோற்றத்திற்கே, ஓ, அதிகமான சுருக்கங்களை அகற்ற வேண்டும், இதை அதிகம் சரிப்படுத்த வேண்டும், அதை சரிப்படுத்த வேண்டும் என்று அக்கறைக்கொண்டு கவனித்துக் கொள்கிறோம். இங்கே அண்மையில் டென்னஸி என்ற இடத்தில் உள்ள ஒரு பொருட்காட்சி சாலையில் நின்றேன். அப்பொழுது நான் ஒரு சிறு இடத்தைக் கடந்து சென்றேன். அங்கே ஒரு மானிட சரீரத்தின் கூறுபாடுகள் காட்டப்பட்டிருந்தன. அதில் நூற்று ஐம்பது பவுண்டுகள் எடைகொண்ட ஒரு மனித சரீரத்தில் எண்பத்தி நான்கு செண்டுகள் மதிப்பு கொண்ட இரசாயணப் பொருட்கள் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. இப்பொழுது நீங்கள் குறிப்பிடத்தக்க யாராயிருந்தாலும், நீங்கள் எண்பத்தி நான்கு செண்டுகளாயிருக்கவில்லையா? சில ஸ்திரீகள், பெந்தேகோஸ்தே ஸ்திரீகள் ஐநூறு டாலர்கள் பெறுமானமுள்ள விலையுயர்ந்த மென்மையான முடியினால் உண்டாக்கப்பட்ட மேற்சட்டையை அணிந்து கொண்டு தங்களுடையத் தலையை உயர்த்தி மேட்டிமையாய் நடக்கிறார்கள், ஆனால் மழை பெய்தால் அதுவும் நனைந்துபோகுமே. அவர்களிடத்திலும்கூட இருக்கின்ற இரசாயணப் பொருட்கள் வெறும் எண்பத்தி நான்கு செண்டுகளாயிருக்கவில்லையா? அது உண்மையே. அதுதான் உண்மையேயன்றி ஒரு வேடிக்கைக்கூற்று அல்ல. அதுதான் மெய். எண்பத்தி நான்கு செண்டுகள் கிட்டத்தட்ட ஒரு கோழி கூண்டிற்கு சுண்ணாம்படிக்க மட்டுமே போதுமானதாயிருக்கிறது. அவ்வளவு மிகக் குறைந்த அளவு சுண்ணாம்பு முதலியனவே உள்ளன. எனவே எண்பத்தி நான்கு செண்டுகள், அந்த மிகமோசமான இறுதி முடிவினை நீங்கள் கவனித்துப் பாருங்கள். நீங்கள் ஓர் உணவகத்திற்குச் சென்று....... அங்கு நீங்கள் வாங்குகிற ஒரு பாத்திர சூப் ஆகாரத்தில் ஒரு சிலந்திப்பூச்சி கிடந்தால், அப்பொழுது நீங்கள் அந்த உணவுச்சாலையின் மீது வழக்குத் தொடருவீர்களே. 80ஆனால் நீங்களோ பிசாசு வலுக்கட்டாயமாக நுழைந்து கிரியை செய்கிற அசுத்தமான தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் சீட்டாட்ட காரியங்கள் போன்றவற்றை செய்ய துணிகரமாய் அனுமதித்து, அதனை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்கிறீர்கள்; எனவே அவன் உங்களை அசுத்தமான ஆடைகளை அணியச் செய்கிறான், இந்த ஸ்திரீகளோ தங்களுடைய சரீர தோலோடு ஒட்டிக்கொள்ளும்படியான மிக இருக்கமான சிறிய உடைகளை அணிந்துகொண்டு, அப்படியே வீதியில் நடந்துச் செல்கிறார்கள். நான் அதை வேடிக்கைக்காக கூறிக்கொண்டிருக்கவில்லை என்பதை என் சகோதரியே, நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள். கவனியுங்கள். நான் இதைக் கூறிக் கொண்டேயிருக்கிறேன். நீங்கள் அந்தவிதமாகவே நடந்து கொண்டால், அப்பொழுது நீங்கள் நியாயத்தீர்ப்பின் நாளிலே ஒரு விபச்சாரி என்றே எண்ணப்படுவீர்கள். உண்மையே. இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ்செய்தாயிற்று” என்று கூறினார். அந்தப் பாவியானவன் விபச்சாரம் செய்ததற்காக பதில் கூற வேண்டும், அதற்கு காரணம் யார்? நீங்களே. அதற்கு காரணமாயிருந்தது யார்? நீங்கள்தானே. அது உண்மை. நீங்கள், உலகப்பிரகாரமாக இருக்கும்படியாக, உலகத்தாரைப் போன்றே உடுத்திக்கொண்டு புருஷர்களுக்கு முன்னே காணப்படும்படிக்கு நீங்கள் உங்களை அங்கு வெளியே காண்பிக்கிறீர்கள். நான் அதை ஒரு சமயம் கென்டக்கியில் உள்ள லூயிவில்லில் இருக்கும் ஒரு ஸ்திரீயிடம் கூறினேன். அப்பொழுது அவளோ, “நல்லது, திரு. பிரான்ஹாம் அவர்களே, இங்கே கவனியுங்கள். நான் இப்பொழுது உங்களை சரியாகப் புரிந்துகொள்ளச் செய்வேன்” என்றாள். அதற்கு நானோ, “சரி, அப்படியா அம்மணி”? என்று கூறினேன். அப்பொழுது அவள், “அவர்களோ அந்தவிதமான உடைகளை மாத்திரமே தயாரிக்கிறார்கள்” என்றாள். அதற்கு நானோ, “அவர்கள் தையல் இயந்திரங்களையும் தயாரிக்கிறார்கள், மற்றும் துணிகளையும் விற்கிறார்களே'' என்றேன். 81அது நீங்கள் விரும்புகிறதற்கு காரணமாய் உள்ளது. அப்படியானால் உங்களில் ஏதோக் காரியம் தவறாய் உள்ளது. அது முற்றிலும் உண்மையே. அது ஒரு நாகரீகமாயிருக்கின்ற காரணத்தால் நீங்கள் அதைச் செய்கிறதில்லை. நீங்கள் இன்றியமையாத காரணத்தால் அதைச் செய்கிறதில்லை. நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் விரும்புகிற காரணத்தாலே புகைக்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லையே. மோட்டார் வாகனத்தில் செல்லும் ஒவ்வொருவரும் தங்களுடைய விரல்களுக்கிடையே சிகெரெட்டுகளை வைத்துக்கொண்டு அவ்வாறு நடந்து செல்வதைக் கண்டதே நான் கண்டதிலேயே மிகவும் அற்பமான அறிவற்ற மடத்தனமான செயல் என்று நான் கருதுகிறேன். ஏன், அது ஓர் அவமானமாயிருக்கிறது. மருத்துவர்களும், மருத்துவ விஞ்ஞானமும் அது முழுமையான புற்று நோயாயுள்ளது என்றும், இன்னும் மற்றக் காரியங்களைக் கூறுகிறபோதும், அவ்வாறு இருப்பதே நாம் இந்தத் தேசத்தில் பெற்றுள்ள மிகப்பெரிய அசுத்தமான தொடர் பத்திரிக்கையில் வெளியிடுவோரின் செயல் முறையான செய்தியாயுள்ளது. அவர்கள் எல்லா நேரத்திலும் அவைகளை உறிஞ்சிப் புகையை உள்ளிழுத்துக் கொள்கிறார்கள். ஒரு ஸ்திரீயைப் பாருங்கள், ஒரு கிறிஸ்தவளாய் எண்ணப்பட வேண்டியவள் அங்கே கடற்கரையின்மேல் கலப்புக் குளியலில், ஒரு குளியலாடையோடு நீட்டிப் படுத்துக் கிடக்கிறாள். எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள் உண்டு. அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள் என்று நான் கூறவில்லை. அவர்கள் ஒரு சூரிய வெப்பத்தில் சருமத்திற்காக தேக நீராடல் முறையைச் செய்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். நான் மட்டும் உயிரோடு இருந்துகொண்டிருந்தால், அப்பொழுது என் பிள்ளைகள் அவ்வாறு செய்தால், அவர்கள் சருமத்தை பதம்பார்க்கும் ஒரு மகனையே கண்டுணர்ந்து கொள்வார்கள். அது இந்த மகனாய்த்தான் இருக்கும். புரிகிறதா? அது கிட்டத்தட்ட அந்த அளவு நீளமுள்ள ஒரு பிரம்பினைக் கொண்ட திரு. பிரான்ஹாம் என்ற மகனாய் இருக்கும். அது தவறு என்றே நான் நம்புகிறேன். 82அதன்பின்னர் நாமோ நம்மை, “ஓ நாம் ஒரு பெந்தேகோஸ்தே சபை அங்கத்தினர்” என்று அழைத்துக் கொள்கிறோம். ஓ, உங்களுக்கு அவமானமாயிற்றே! உண்மை. பெந்தேகோஸ்தே சபைக்கு அடிநிலக்கிடங்கிலிருந்து அடித்தளம் மற்றும் மேல்தளத்தளத்தினூடான ஒரு சுத்திகரிப்பே முன் பகுதியிலிருந்து பின்பாகம் வரைக்கும் தேவையாயிருக்கிறது. அது உண்மை . அதே சமயத்தில் அவை எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததை நாம் பெற்றுள்ளோம். ஆனால் அது..... முடியும்...... ஜோன் ஆஃப் ஆர்க் காலத்தில் இருந்த புரட்சியைப் போன்றே. ஃபிரான்சிற்கு ஒரு புரட்சியாளர் தேவைப்பட்டது, அதன் பின்னர் அவர்கள் புரட்சி செய்துகொண்டிருந்த சில காரியங்களைக் குறித்த ஒழுங்கினை ஏற்பாடு செய்ய அவர்களுக்கே ஒரு எதிர்புரட்சியாளர் தேவைப்பட்டது. பெந்தேகோஸ்தே சபைக்கு ஒரு புரட்சியாளர் தேவைப்படுகிறது. உண்மையே. நிச்சயமாகவே தேவைப்படுகிறது. தவறான காரியங்களுக்கு எதிரான புரட்சி மற்றும் சரியான காரியங்களை ஏற்றுக்கொள்ள, ஒரு புதிதான பரிசுத்த ஆவியின் அபிஷேகமே தேவையாயிருக்கிறது. ஆமென். “ஒரு சபை தன்னை ஆயத்தம் செய்துகொள்ளவே!”. 83நினைவிருக்கட்டும், அது ஒருபோதும்....... இவ்வாறு இருக்காது...... அதாவது நீங்கள், “நல்லது, இப்பொழுது, நான் அதைச் சேர்ந்தவன், நான் அசெம்பளீஸ் என்ற சபையைச் சேர்ந்தவன். நான் போர்ஸ்கொயர் அல்லது சர்ச் ஆஃப் காட் அல்லது இயேசுவின் நாமச் சபையைச் சேர்ந்தவன்” என்றோ அல்லது - அல்லது மற்றெந்த ஸ்தாபன சபைகளைச் சேர்ந்தவன் என்றோ கூற முடியாது. முடியாதே! நீங்கள் அவைகள் எந்த ஒன்றிலுமே உள்ளே நுழைந்துகொள்ள முடியாது. தேவன் உங்களை தனிப்பட்ட நபராகவே அழைக்கிறார். அது நீங்கள் சுத்தம் செய்துகொள்ள வேண்டியதாய் உள்ளது, ஏனென்றால், “அவர் தம்முடைய நாமத்திற்காக தம்முடைய மணவாட்டியை, புறஜாதியாய், புறஜாதிகளிலிருந்து ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்கிறார்”. எஸ்தர் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டாள். அவள் தன்னுடைய இருதயத்தை சுத்தப்படுத்தினாள். அதைத்தான் அவள் செய்தாள். அதுதான் சபைக்குத் தேவையாயிருக்கிறது; ஓர் இருதய சுத்திகரிப்பு. “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் உங்களுடைய இருதயத்தை எப்படி சுத்தம் செய்கிறீர்கள்?” “இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினூடான, வார்த்தையின் தண்ணீ ரினால் கழுவப்படுதலின் மூலமே”. 84ஸ்திரீகள் அந்தவிதமாக நடந்துகொள்வதும், புருஷர்கள் அவர்களை அதைச் செய்ய அனுமதிப்பதும் தவறாயிருக்கிறது என்று வேதம் கூறியுள்ளது. அதாவது நீங்கள் இருவருமே தவறாயிருக்கிறீர்கள். ஒரு மனிதன் தன்னுடைய மனைவியை அந்தவிதமான ஆடைகளோடு நிர்வாணமாக வீதியில் நடந்து செல்ல அனுமதிப்பானேயால், நான் அவன் ஒரு புருஷனாயிருக்கின்றபடியால் அவனுக்கு சற்று மரியாதை வைத்துள்ளேன். ஆனால் இப்படிப்பட்டவன் ஒரு கூத்தாட்டிப் பொம்மையாயிருக்கிறான். அது உண்மை. அவள் ஒரு பாத்திரம் துடைக்கும் கந்தைத் துணியாகவே அவனை உபயோகிக்கிறாள். உங்களுக்கு அவமானம். நீங்கள் புருஷர்களாயிருக்க வேண்டும். ஒரு மேய்ப்பன் தன்னுடைய சபையை அப்படிப்பட்டக் காரியங்கள் செய்ய அனுமதித்து, அதை பிரசங்கபீடத்திலிருந்து கண்டித்து கருகிக்போய்விடச் செய்யவில்லையென்றால், அப்பொழுது அவன் ஒரு பெண்மைத்தன்மையுடையவனே. நமக்குத் தேவை புருஷர்களேயாகும், சுவிசேஷமானது இரப்பர் கையுறைகளைக் கொண்டதாயிராமல் வல்லமையோடும், வார்த்தையோடுள்ள பரிசுத்த ஆவியின் பெலத்தினாலுமான சுவிசேஷமே தேவையாயிருக்கிறது. இந்தக் காரியங்கள் தவறாயிருக்கின்றன என்று வேதம் கூறுகிறது. ஜனங்கள் அந்தவிதமாக செய்வதும், அந்தவிதமாக நடந்துகொள்வது தவறாயிருக்கிறது. அது எங்கும் பிரசங்கிக்கப்பட்டு, ஜீவிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் சபைக்கு ஒரு சுத்திகரிப்பும், ஒரு சுத்தப்படுத்துதலுமே தேவையாயிருக்கிறது. 85எஸ்தர் தேவனுக்கு முன்பாக தன்னுடைய இருதயத்தை சுத்திகரித்து, ஒரு சாந்தமான, தாழ்மையான ஆவியோடு நடந்தாள்; சபையும் கிறிஸ்துவின் மணவாட்டியாயிருக்கப் போகிறது. இப்பொழுது நினைவிருக்கட்டும், எஸ்தர் உலகப்பிரகாரமான கொண்டாட்டத்தைப் புறக்கணித்தாள். அவள் இராஜாவிற்கு முன்பாக செல்வதற்குத் தன்னுடைய இருதயத்தில் அந்தவிதமான ஆவியைத் தெரிந்து கொண்டாள். இன்றைய ஸ்திரீயானவள், சபையோ தான் அதிக அங்கத்தினர்களைக் கொண்டுள்ளக் காரணத்தால், தான் சிறந்த உடை உடுத்தியுள்ள கூட்டத்தினரைக் கொண்டிருப்பதால், தான் மிகப் பெரிய ஸ்தாபனமாக இருக்கின்றபடியால், நகரத்திலேயே பெரிய சபையாயிருக்கிறபடியால், அதுபோன்றக் காரியங்களைக் கொண்டிருக்கிறபடியால் தான் உள்ளே பிரவேசிக்க முடியும் என்ற நினைத்துக்கொள்ளுகிறது, ஆனால் நீங்கள் அதன்பேரில் சார்ந்துகொண்டிருப்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் கோடிக்கணக்கான மைல்கள் தூரத்திலேயே அதை தவறவிட்டுவிடுவீர்கள். அது ஓர் இனிமையான, தயவான, தேவனுடைய வார்த்தைக்கு பயபக்தியான ஆவியாய், “வார்த்தையின் தண்ணீரினால் கழுவப்பட்டதாய்,'' வார்த்தையே உங்களுக்குள் இருப்பதாயுள்ளது. அது ஒரு கழுவுதலாய் உள்ளது. ஆமென். சபைக்கு ஒரு கழுவுதல், ஒரு முழு சுவிசேஷ கழுவுதலே தேவைப்படுகிறது. அது உண்மையே. ஒரு பாகம் கழுவுதல் என்றில்லாமல், ஒரு முழு சுவிசேஷ கழுவுதல், சுத்திகரிக்கப்படுதல், ”கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய சிருஷ்டிகளாக்கப்படுதலே“ தேவையாயுள்ளது. 86இயேசுவினுடைய மணவாட்டி ஓர் அசுத்தமான மணவாட்டியல்ல. அவர் தமக்கு அசுத்தமான மணவாட்டியை உடையவராயிருக்கமாட்டார். திருமணம் செய்துகொள்ள வருகிற ஒரு ஸ்திரீ, அங்குள்ள ஒரு பன்றிப் பட்டியிலிருந்து வருகிறவள் போன்று அவள் காணப்பட்டால், தன்னைக் குறித்து கௌரவம் கொண்டுள்ள ஒரு மனிதன் அவளை விவாகம் செய்துகொள்ளவே மாட்டான். அவள் தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் சபையானது கலியாணம் செய்துகொள்ள வருகிறபோது, மணவாட்டியாயிருக்கப்போவதை நினைக்கும்போது, உலகப்பிரகாரமான எல்லாக் கூளங்களையும் தனக்குள்ளாகக் கொண்டவளாயிருப்பாளேயானால், கிறிஸ்துவினுடைய மணவாட்டியோ அந்தவிதமாக இருக்கமாட்டாளே. இல்லை ஐயா. நான் துரிதமாக முடிக்க வேண்டும். கிறிஸ்துவின் சபை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபை, அந்த சபை ஒருபோதும் அவ்வாறு ஒரு திருத்தமற்ற தாறுமாறக்கப்பட்ட சபையாகவோ அல்லது ஸ்தாபனங்களின் ஒழுங்கற்ற கூளங்களினால் தோய்வுற்றுப் போனதாகவோ இருப்பதில்லை. அவள் ஏதோ ஒரு பெரிய ஸ்தாபனத்தின் அங்கத்தினராய் இருக்க வேண்டியதில்லை. அவள் இரத்தத்தினால் கொள்ளப்பட்டடு, இரத்தத்தினால் கழுவப்பட வேண்டியவளா யிருக்கிறாள். நாங்கள் மிகப்பெரிய சபையை, மிகப்பெரிய ஸ்தாபனத்தை அல்லது இதை, அதை அல்லது மற்றதை சேர்ந்தவர்களாயிருக்கிறோம் என்று கூறுவதல்ல. அவள் தன்னுடைய - தன்னுடைய இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் தூய்மையாய், பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்தமாய், கரைதிறையற்றவளாயிருக்க வேண்டும். 87எஸ்தரைப் போல மானிட இருதயத்தில் தேவ ஆவியின் தயவையும், சாந்தத்தையும், மறைவான மனிதனையும், இருதயத்தில் மறைவான மனிதனையும் கொண்டவர்களாயிருக்க வேண்டுமேயன்றி உலகின் தரத்தை மேன்மை பாராட்டுகிறவர்களாயிருக்கக் கூடாது. உலகமோ பளபளக்கிறது என்றும், சுவிசேஷமோ கொழுந்துவிட்டெறிகிறது என்றும் நான் எப்பொழுதும் கூறியிருக்கிறேன். ஓ, அது கோடிக்கணக்கான மைல்கள் தூர வேற்றுமையோடு பிரிந்து காணப்படுகிறது. ஹாலிவுட் பளபளக்கிறது, கிறிஸ்துவின் சபையோ அழகோடும், மென்மையோடும், இனிமையோடும், தயவோடும் கொழுந்துவிட்டு எரிகிறது. அது உண்மை . எஸ்தர் தன்னை எல்லாவிதமான உலகப்பிரகாரமான நவீன ஆடைகளினாலும் அலங்கரித்துக்கொள்ள விரும்பவில்லை. அது ஓர் இராஜாவின் மனைவியைப் போன்று காணப்படாதே. நாமோ உலகத்தாரைப் போன்றிருக்க விரும்பும்போது, அது ஒரு பரிசுத்த மனிதனுடைய மனைவியைப் போன்று காணப்படுமா? நாம் ஜீவனுள்ள தேவனுடைய சபையாயிருந்து கொண்டே, நம்மை உலகத்தின் காரியங்களினால் அலங்கரித்தால், அப்பொழுது அது ஒரு பரிசுத்த மனிதனுடைய மனைவியைப் போன்று காணப்படுமா? அது இயற்கையானதாய்க் காணப்படுமா? ஒரு பரிசுத்தமான மனிதன் என்று கருதப்படுகின்ற ஒரு மனிதனை நீங்கள் இன்றைக்கு கண்டிருக்க, அவனுடைய மனைவியோ முதலில் கூறப்பட்ட அந்தப் பெண்மணியைப் போன்று அந்தவிதமான முறையில் மிகப்பெரியதாய் காணப்படும் சிகை அலங்காரங்களைச் செய்துகொண்டு, ஒரு பக்கக் கன்னத்தில் சிவப்பு நிறமாயும், மற்றொரு பக்கத்தில் பச்சை நிறமாயுமிருக்கும்படி முக ஒப்பனை செய்துகொண்டு, ஒரு வண்ணந்தீட்டும் தூரிகையினால் உதடுகளுக்கு உதட்டுச் சாயம் பூசப்பட்டது போன்று காணப்பட, எல்லாவிதமானவைகளையும் இந்தவிதமாய் அணிந்து மற்றும் உடலோடு ஒட்டியிருக்கும்படியான மிக இறுக்கமான சிறு ஆடையை அணிந்துகொண்டு, மிக உயராமான குதிங்காலையுடைய காலணிகளை அணிந்து நெளிந்துகொண்டு, ஒய்யாரமாய் வீதியில் நடந்து வந்தால், “அது ஒரு பரிசுத்த மனிதருடைய மனைவி” என்று கூறுவீர்களா? நான் வேடிக்கைக்காக கூறிக் கொண்டிருக்கவில்லை. நான் விவகாரங்களை மாத்திரமே தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறேன். 88நான் இங்கு அண்மையில் நம்முடைய மிகப்பெரிய பெந்தேகோஸ்தே இயக்கங்கள் ஒன்றிற்கு வந்தேன். நான் அங்கு ஒரு கூடாரம் அமைத்திருந்தேன். அப்பொழுது அந்தப் போதகர் என்னிடத்தில், “என்னுடைய மனைவியோ இசைப்பேழை இயக்குநராய் இருக்கிறார்” என்றார். அதற்கு நானோ, “சகோதரனே, அது நல்லது தானே” என்றேன். “அவள் வாசிப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?” அப்பொழுது நான், “இல்லை, இல்லை ஐயா, நான் நிச்சயமாகவே பார்த்ததில்லை” என்றேன். அவர் மேலாளரிடம் சென்றார். மேலாளர் கூறினார், சகோதரன் பாக்ஸ்டர், “சரி பார்க்கலாம்” என்றார். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, இங்கே வாருங்கள். நீங்கள் என்னுடைய மனைவியை சந்திக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்றார். எனவே நான் அப்பொழுது அங்கு சென்றேன். தயவுகூர்ந்து என்னை மன்னியுங்கள். புரிகிறதா? நான் ஒரு கருத்துரையை நமக்குக் கூறிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. நான் ஒரு காரியத்தின் விவரத்தையே எடுத்துக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். புரிகின்றதா? அந்தப் பெண்மணியோ தன்னுடையக் கைவிரல் நகங்களுக்கு வர்ணந்தீட்டியிருந்தாள். எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அந்த ஒப்பனையை அவள் செய்திருந்த அனைத்தையும் அறிந்திருப்பீர்கள். ஆனால் நானோ என்னுடைய வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதேயில்லை, மிகத் தொங்கலான ஒரு ஆடையை அணிந்திருந்தாள், ஆனால் அதற்கு பின்பாகமும் இல்லை, அதில் அடிப்பாகமும் இல்லாதிருந்தது. என்னுடைய வாழ்க்கையிலே அப்படிப்பட்ட ஒரு காட்சியை நான் கண்டதேயில்லை. மேலும் அவள் மிகப்பெரிய காதணிகளை இந்தவிதமாக தொங்கிகொண்டிருக்கும்படி அணிந்திருந்தாள், எனவே முழு காரியமும் இந்தவிதமாகவே இருந்தது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்பொழுது நான், “ஓ, என்னே!'' என்று எண்ணினேன், நானே ஒரு பாப்டிஸ்டு. ஆயினும் நான் அவர்களைவிட அது தவறு என்பதை நன்கு அறிந்திருந்தேன். எனவே நான் மீண்டும் நோக்கிப்பார்த்தேன். நான்... சொன்னேன்..... இப்பொழுது, தயவு செய்து இது ஒரு கேலிப்பரியாசமான காரியமல்ல. ஆனால் நான் அதை அந்த சகோதரனுக்கு எடுத்துக்கூற வேண்டியதாயிருந்தது, எனவே அது அவருக்கு உபயோகமானது என்றே நான் நம்புகிறேன். வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதற்காக இதைக் கூறவில்லை; நான் அவ்வாறு வித்தியாசமாயிருக்க வேண்டுமென்று கூறியிருந்தால், அப்பொழுது நான் ஒரு மாய்மாலக் காரனாயிருந்திருப்பேன், பாருங்கள், என்னையே சுத்திகரித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. எனவே நான் “திருவாளரே, உம்முடைய மனைவி ஒரு பரிசுத்தவாட்டியென்று நீர் கூறினீரா?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “ஓ, ஆமாம்” என்றார். அப்பொழுது நான், “அவள் எனக்கு அப்படிக் காணப்படவில்லையே” என்றேன். மேலும் நான், “என்னுடைய வாழ்க்கையிலேயே இப்படிப்பட்ட ஒரு காட்சியை, ஒரு ஊழியக்காரரின் மனைவியை இப்படி நான் பார்த்ததேயில்லை. அது ஒரு பரிசுத்த மனிதனின் மனைவியைப் போன்று காண்பபடவில்லை” என்று கூறினேன். 89ஜீவனுள்ள தேவனுடைய சபையும் ஒருபோதும் அவ்வாறு செய்யாமல், தன்னுடைய நவநாகரீகங்களின் பேரில் சார்ந்திராமல், தன்னுடையத் தேனீர் விருந்துகளை, நம்பிக்கை மோசடி செய்து பொருள்களை அபகரிக்கும் குழுக்கள், சீட்டு விளையாட்டுக்கள், நடனங்கள், சமூக விருந்துகள் போன்றவைகளின் பேரில் சார்ந்திராமல் அந்தவிதமாக உலகத்தோடு தன்னை அலங்கரித்துக்கொள்ளாமலிருந்தால், அப்பொழுதே அவள் ஒரு பரிசுத்த தேவனுடைய மணவாட்டியைப்போல் காணப்படுவாள். அவள் சிகெரேட்டுகளைப் புகைத்து, நடனங்கள், விருந்துகள், இரவு ஆகார விருந்துகள் போன்றவற்றிற்கு செல்லுதல், மதுபானம் அருந்துதல் அதுபோன்ற எல்லாவற்றையும் செய்யும்போது, அப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டியாயிருக்கிறார்கள் என்று கூறுவீர்களா? எனக்கு அது ஒரு பரிசுத்த மனிதருடைய மனைவியாய் காணப்படுவதில்லை. இல்லை ஐயா. அவர் அப்படிப்பட் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்ளவேமாட்டார். அவர் சரியாயிருந்த ஒரு ஸ்திரியே, அவர் சுட்டிக்காட்ட முயற்சித்துக் கொண்டிருந்த ஸ்திரியைப் போன்று காணப்படுகிறவளையே தெரிந்து கொள்வார். அது உண்மையென்றே நான் விசுவாசிக்கிறேன். அது சற்று புண்படுத்துவதாயிருக்கலாம். 90என்னுடைய வயோதிக தெற்கத்திய தாய் மரித்துப்போய்விட்டார். நான் சிறு பையனாயிருந்தபோது, எங்களுக்கு வழக்கமாகவே........ சாப்பிடுவதற்கு ஒன்றுமே இருக்காது, எனவே நாங்கள் கருப்புக் கண் பட்டாணிகளையும், சோள ரொட்டியையுமே உடையவர்களாயிருந்தோம். அவைகள் என்னவென்றாவது உங்களுக்குத் தெரியுமா அல்லது தெரியாதா என்பதை நான் அறியேன். ஆகையால் நாங்கள்....... இல்லாதிருந்தோம்........ தாயாருக்கோ வருடம் முழுவதுமே எந்த கொழுப்பும் கிடைக்காது, எனவே நாங்கள் பண்டையப் பெரிய பொறிக்கும் சட்டியில் இறைச்சித் தோல்களைப் போட்டு சூடேற்றி அதிலிருந்து உருக்கியெடுப்போம். அப்பொழுது நாங்கள் எங்கே இறைச்சியை வெட்டுகிறார்களோ அல்லது இறைச்சி வெட்டுவோர்களிடம் சென்று அவர்கள் இறைச்சியை வெட்டி எடுத்துக்கொண்ட பிறகு, அந்தத் தோலை எங்களுக்குத் தரும்படி வாங்கி வருவோம். பின்னர் அந்தக் கொழுப்பை அதிலிருந்து எடுத்து, அதை ஊற்றி வைத்துக்கொண்டு, அந்தத் தோலை திருப்பிக் கொடுத்து விடுவோம். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் எங்களுக்கு ஒருவேளை மருந்துக்கு ஆமணக்கு எண்ணெய் தேவைப்பட்டதை அம்மா கூறினார். என்னால் இன்னமும் கூட அந்த வாசனையை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் அதனை உட்கொள்ள வேண்டியதாயிருக்கும். நான் இந்தவிதமாக மூக்கைப் பிடித்துக்கொண்டே அம்மாவிடம் வருவேன். அப்பொழுது நான், “அம்மா, என்னால் - என்னால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லையே” என்பேன். மேலும் நான், “அது என்னை மிகவும் சுகவீனமாக்குகிறது” என்று கூறுவேன். அதற்கு அம்மாவோ, “அது உன்னை சுகவீனமாக்க வில்லையென்றால், அப்பொழுது அது உனக்கு எந்த நன்மையும் செய்யாது” என்று கூறினார். 91ஆகையால் அந்த விதமாகத்தான் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தலோடும் உள்ளது என்று நான் கருதுகிறேன். அது உங்களை சற்றேனும் கலக்கவில்லையென்றால், உங்களுடைய மனநிறை உணவினை தொல்லைப்படுத்தவில்லையென்றால், உங்களுடைய ஆவிக்குரிய அறுசுவை உணவினை உண்ணும் உணர்வினை சரிப்படுத்தவில்லையென்றால், வேதாகமத்தோடு உங்களை சோதித்தறியும்படிக்கு அது உங்களை சற்று சுகவீனப்படுத்தவில்லையென்றால், அதனால் எந்த நன்மையுமில்லையே; பாருங்கள், அந்தப் பழைய கோபம், சுயநலம், தேவபக்தியின்மை, உலகத்தின் அன்பு, தொலைக்காட்சி மற்றும் இரவிலே சுற்றித்திரியும் காரியங்கள் போன்றவை அப்படியேயிருக்குமாயின், அப்பொழுது அது சபையை வெறுமையாக்கி, அதன் இருக்கைகளையும் வெறுமையாக்கிவிடும். நீங்கள் அங்கே இயேசுவைப் போல் இருக்க வேண்டும், அவருடைய ஆவியை உங்களுக்குள் பெற்றிருக்கும்போதே, தேசத்தில் உள்ள ஒவ்வொருவரும் உங்களுடைய சபைக்கு வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்ய முயற்சிப்பீர்கள். அப்பொழுது நாம் நம்மை கிறிஸ்துவின் மணவாட்டி என்று அழைத்துக் கொள்ளலாமல்லவா? ஓ, நண்பனே, என்னே ஓர் இரக்கம்! வேளையானது வந்துவிட்டது. “அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” ஓ! “தன்னை ஆயத்தம்பண்ணினாள்.” அவள் இந்த எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டாள். நினைவிருக்கட்டும், எஸ்தரோ தெரிந்து கொள்ளப்பட்டாள், மற்றவர்களோ புறக்கணிக்கப்பட்டனர். மீண்டும் பிறந்து, தேவனுடைய ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே அந்நாளில் தெரிந்து கொள்ளப்பட்டு, அவர்களுடையத் தலையின்மேல் மகிமையின் கீரிடம் சூட்டப்படும். மற்றவர்களோ புறக்கணிக்கப்படுவர். 92நான் நடைபெற்றிருந்த ஒரு சிறு காரியத்தை உங்களுக்குக் கூறட்டும். நீங்கள் அறிந்துள்ளபடி நான் - நான், நான் ஒரு மிஷினெரியாய் சுவிசேஷப் பணியினை செய்து, மிஷனெரி ஊழியத்தில் கிட்டத்தட்ட கடல் கடந்து உலகத்தை ஏழுமுறை சுற்றி வந்திருக்கிறேன். இங்கே அண்மையில் ரோமாபுரி பட்டிணத்தில் நடந்த சம்பவம், ரோமாபுரி கலைத்திறன் வாய்ந்ததான ஒரு மகத்தான பட்டிணமாயிருக்கிறது. அவர்கள் அங்கு ஓர் ஓவியப் பள்ளியினை வைத்திருந்தனர். எனவே படங்களுக்கு வண்ணந்தீட்டுதலைக் கற்றுக்கொள்ள ஒவ்வொரு வருடமும் நம்முடைய அமெரிக்க இளைஞர்கள் பலர் ஒரு வருடகாலப் பயிற்சியினை ஓவியத்தில் எடுத்துக்கொள்ள அங்குச் செல்வர். அந்தச் சம்பவம் எனக்கு கூறப்படிட்டிருந்தபடிப் பார்த்தால், ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ஓர் அமெரிக்க வாலிபக் குழு அங்கு வந்திருந்ததாம். அவர்கள் அங்கு சென்றவுடனே, அவர்கள் ஒழுக்கக்கேடான கீழ்த்தரமானவற்றை செய்பவராகிவிடுகிறார்கள். அவர்கள் ரோமாபுரியில் இருக்கும்போது, ரோமாபுரியர் செய்வது போன்றே இவர்களும் செய்கிறார்கள். அதாவது வெளியே சென்று மது அருந்துதல், தங்களை அரைகுறை நிர்வாணிகளாக்கிக் கொள்ளுதல் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் பையன்கள் மற்றும் பெண்கள் இருவருமே தொடர்ந்து செய்து வருகிறார்கள். 93அங்கே ஒரு குறிப்பிட்டப் பள்ளி இருந்தது. இந்தப் பள்ளிக்குத்தான் இந்த அமெரிக்க வாலிபர் குழு வந்திருந்தது. ஏறக்குறைய அவர்கள் ஒவ்வொருவரும் அதேக் காரியத்தையே செய்திருந்தனர். ஆனால் ஒரு சிறு வாலிபப் பெண்ணோ , அவள் அதை சகித்துக்கொள்ள மனமில்லாதிருந்தாள். அவளும் அதில் தங்கியிருந்தாள். ஆனால் அவர்கள் எல்லோருமே வெளியே மது அருந்திக்கொண்டிருக்கும்போது, இவள் மட்டும் இரவு நேரத்தில் படிப்பாள். பகல் நேரத்தில் அவள் பணிபுரிந்தும், படித்தும் வந்தாள். எனவே அவள் அந்த முழு பள்ளியின் பரியாச நகைப்புக் கிடமானவளாக இருந்தாள். அவள் தன்னை ஒரு நாணயமிக்கப் பெண்மணியைப் போன்று காத்துக்கொண்டு, ஒரு நாணயமானப் பெண்மணியைப் போன்றே தன்னை நடத்திக்கொண்டாள். அங்கே அவளைச் சுற்றிலுமிருந்த வாலிப ரோமப் பையன்களோ அவளை வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்தபோதும், அவளோ அதற்கு மறுத்துவிட்டாள். போகவில்லை, ஐயா. அவள் தன்னுடைய பாடங்களோடு, சரியாகக் கூறினால் வரையவும், வண்ணந்தீட்டவுங் கற்றுக்கொண்டதோடு சரியாக தரித்திருந்தாள். அவள் அதனோடு மட்டுமே தரித்திருந்தாள். 94முடிவிலே அந்த இடத்தில் காவல்புரிந்து வந்த ஒரு வயோதிக காவலன் அவள் மிகவும் வித்தியாசமாயிருந்ததைக் கண்டு, அவளையே தொடர்ந்து கவனித்து வந்தார். அவர் ஒரு ரோமன் கத்தோலிக்கனாயிருந்தபோதிலும் அவள் தன்னை எப்படி நடத்திக்கொண்டாள் என்று பார்த்து, அவளையே தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை அந்த வாலிபப் பெண் அவர்கள் வைத்திருந்த அந்தப் பள்ளியில் அவள் தங்கியிருந்த ஓவியக்காரர்களின் அறையிலிருந்து வெளியே பள்ளிக்கூட மைதானப் பூங்காவிற்கு வந்து, பின்னர் அங்கிருந்து சற்று வெளியேறி அங்கிருந்த ஒரு குன்றின் உச்சியை நோக்கிய வாறேச் செல்ல, சூரியனோ அஸ்தமித்துக் கொண்டிருந்தது. அவளோ அங்கு அழகிய, தெளிவான முக ஒப்பனையற்ற முகத்தோடு, தன்னுடையத் தலைமுடி தொங்கிக் கொண்டிருக்க சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தத் திசையை நோக்கியவாறே பார்த்துக்கொண்டிருந்தாள். 95இந்த வயோதிக காவலரோ அங்கே முற்றத்திலிருந்து கொண்டு அவளை துருவி ஆராய்ந்து பின்தொடர்ந்து கொண்டிருந்தான். அவர் துருவி ஆராய்ந்திருந்தபடியால், அவர் அந்தப் பெண்ணையே தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். ஏதோ ஒன்று அவரிடத்தில், “போய் அவளிடத்தில் பேசு” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தது. ஆகையால் அவர் தன்னுடையப் பிரம்புத் தடியை கீழே வைத்துவிட்டு, வேடிக்கையாய்த் தோற்றமளிக்கும் தன்னுடைய தொப்பியைக் கழற்றிவிட்டு, அந்த வாலிபப் பெண்மணி இருந்த இடத்திற்கு நடந்து சென்றார். பின்னர் அவர் தன்னுடையத் தொண்டையைக் கனைத்து குரலை சரிப்படுத்தினார். அப்பொழுது அவள் திரும்பிப் பார்த்தாள். அதற்கு அவரோ “சிறு பெண்ணே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். அப்பொழுது அவளோ, “சரி ஐயா, பரவாயில்லை” என்றாள். அவள் அழுதுகொண்டிருந்திருந்ததை அவர் கவனித்திருந்தார். மற்றெல்லோருமே அந்த இரவு ஒரு பெரிய குடிவெறியாட்டத்திற்காக வெளியில் இருந்தனர். அப்பொழுது அவர், “பெருமதிப்பிற்குரிய சீமாட்டியே, நான் உங்களிடத்தில் பேசப் போவதை சரியான விதத்தில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார். மேலும் அவர் தொடர்ந்து, “நீங்கள் இங்கே ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இருந்து வருகிறீர்கள். நீங்கள் வந்த குழுவினரை நான் கவனித்து வந்திருக்கிறேன். அவர்களோ தொடர்ந்து வெளியே விருந்துகளுக்குச் சென்றுவிட்டு எப்போதுமே இரவு நேரத்தில் குடித்துவிட்டு, தங்களுடைய ஆடைகளை அரைகுறையாக களைந்துகொண்டு உள்ளே நுழைவார்கள். ஆனால் நீங்களோ அப்படிப்பட்ட விருந்துகளில் கலந்துகொள்ளுவதில்லை என்பதை நான் கவனித்து வந்தேன்” என்று கூறினார். அவர் தொடர்ந்து, “நீங்கள் எப்பொழுதுமே சமுத்திரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றுள்ளதையும் நான் கவனித்தேன். ஒவ்வொரு மாலையும் நீங்கள் இங்கு நடந்து வந்து, இங்கு நின்று சூரியன் அஸ்தமிப்பதை கவனிக்கிறீர்களே” என்றார். மேலும், “அதற்கு காரணம் என்ன?' என்று கேட்டார். அதன்பின்னர் அவர், ”நானோ வயோதிகன். ஆனாலும் உங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே உள்ள இந்த வித்தியாசத்திற்கான காரணங்கள் என்ன என்பதைக் குறித்து அறிந்துகொள்ள நான் ஆர்வமுள்ளவனாயிருக்கிறேன்“ என்று கூறினார். 96அப்பொழுது அவளோ, “சரி, ஐயா” என்றாள். அதன்பின்னர் அவள், “ஐயா, சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தபோது, நானோ என்னுடைய வீட்டை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றாள். மேலும் அவள், “அந்த சூரிய அஸ்தமனத்திற்கு அப்பால் உள்ள இடத்தில்தான் என்னுடைய தாய்நாடு உள்ளது” என்றாள். அவள் தொடர்ந்து, “அந்த தேசத்தில் ஒரு குறிப்பிட்ட மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பட்டணம் அங்கு உள்ளது. அந்தக் குறிப்பிட்டப் பட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் ஒரு குறிப்பிட்ட ஒரு பையன் இருக்கிறான்” என்று கூறினாள். மேலும், “அவனும் கூட ஓர் ஓவியனாயிருக்கிறான். நான் இங்கு வருவதற்கு புறப்பட்டபோது, நான் என்னுடைய அன்பை அவனுக்கு பிணையமாக வைத்துவிட்டேன். நாங்கள் ஒருவருக்கொருவர் நிச்சயிக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறினாள். அவள், “மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அதில் எனக்கு சம்மந்தங்கிடையாது” என்று கூறினாள். மேலும் அவள், “நான் உண்மையாயும், சரியாயும் ஜீவிப்பதாக வாக்களித்துள்ளேன்” என்றாள். தொடர்ந்து அவள், “அந்த மிகப்பெரிய செட்டைகளுடைய ஆகாய விமானம் என்னைக் கொண்டுச் சென்று சமுத்திரத்திற்கு அப்பால் உள்ள அந்த விமான நிலையத்தில் என்னை இறக்கிவிடும்போது, அங்கே அவன் என்னை சந்திக்க வரும் அந்த நாளையே நான் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அதற்காகவே ஆவல் கொண்டிருக்கிறேன். அவன் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறான். எனவே நாங்கள் அந்தத் தேசத்தில் ஒன்று சேர்ந்து வாழுவோம்.'' என்று கூறினாள். எனவே “அந்தக் காரணத்தினால் தான் நான் அந்தவிதமாக நடந்துகொள்கிறேன். நான் வாக்களித்துள்ள அந்த ஒரு பையனுக்காக உண்மையாயிருக்கிறேன். அவனும் எனக்கு அளித்துள்ள வாக்குறுதிக்கு உண்மையாயிருக்கிறான்” என்று கூறினாள். மேலும், நான் அவ்வப்போது அவனைக் கேட்டு விசாரித்து அவனுக்கு கடிதம் எழுதுகிறேன், இவ்வாறு நாங்கள் ஒருவருக்கொருவர் கடிதத்தொடர்பு கொண்டுள்ளோம். நாங்கள் இன்னமும் எங்களுடைய உறுதிமொழிகளை கூற்றுகளை உறுதியாகப் பற்றிக் கொண்டு நாங்கள் சந்திக்கப்போகும் அந்த நாளுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறோம்“ என்று கூறினாள். 97ஓ, உலகத்தின் காரியங்களிலிருந்து விலகியிருக்கும் ஓர் உண்மையான கிறிஸ்தவனுக்கு அது எப்படிப்பட்ட நல்வாழ்வைப் பெற்றுத்தரும். என்றோ ஒரு நாள் ஒரு புறாவின் சிறகுகளின் மேல் துறைமுகத்திற்கு வரப்போகிறதைக் குறித்தே நீங்கள் பேசுகிறீர்கள். உலகத்தோடு அல்லது உலகத்தின் காரியங்களோடு காலத்தை வீணாக்காமலிருக்கிற ஒரு மணவாட்டிக்காகவே அவர் வருகிறார். அவள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்டிருகிறாள். அவள் தன்னுடைய - தன்னுடைய அன்பை அவருக்கு மாத்திரமே பிணையமாக வைத்திருக்கிறாள். உலகத்தின் அன்போ அவளுக்கு மரித்துப் போய்விட்டது. “ஆட்டுக் குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்.” நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்கி யிருக்கையில், நாம் அதைக் குறித்து சிந்திப்போமாக. 98நான் சூரிய அஸ்தமனத்தை நோக்கிக் கொண்டிருக்கையில், என்றோ ஒரு நாள், நானும் கூட முப்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் நேசித்த ஒருவருக்கு, என்னுடைய எல்லா அன்பையும் அவருக்கே பிணையமாக வைத்துவிட்டேன். நான் எங்கே போனாலும் அவருக்காகவும், அவருடைய வார்த்தைக்காகவுமே உறுதியான ஆதாரவாயிருக்கும்படிக்கு எப்பொழுதும் முயன்று வந்துள்ளேன். அந்தவிதமாக இருந்துவந்துள்ள அநேகர் இங்கு அமர்ந்து கொண்டிருப்பதையும், நாம் நேசிக்கிறவரும், நம்முடைய அன்பை பிணையமாக வைத்துள்ளவரின் பிரசன்னத்திற்கு நம்முடைய ஆத்துமாக்களை, நம்மைக் கொண்டு செல்ல துறைமுகத்திற்கு வரப்போகும் அந்தப் பண்டைய சீயோனின் கப்பலானது வந்துசேரும் நாளுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். 99இன்றிரவு இங்குள்ள சிலர் ஒருபோதும் அந்த வாக்குறுதியைபண்ணாமலிருக்கலாம். சிலர் அதை ஒருகால் செய்திருந்து, அதை முறித்துப் போட்டிருக்கலாம். நண்பனே, இன்றிரவு நீ அந்த நிலைமையில் இருந்தால், உன்னுடைய வாக்குறுதியை புதுப்பித்துக்கொள்ள இன்றிரவே நீ ஏன் திரும்ப வரக்கூடாது? நீ வாக்குறுதி செய்யாமலிருந்தால், அதை செய்துகொள். இன்றிரவே நீ வந்து ஏன் அதை செய்துகொள்ளக் கூடாது? அதாவது, “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்” என்று கூறுங்கள். நினைவிருக்கட்டும், நீங்கள் ஏற்கெனவே உங்களுடைய வாக்குறுதியை செய்துவிட்டிருந்து, அதை இன்னமும் உலகத்தின் காரியங்களோடு கலந்து விட்டிருப்பவர் களாயிருப்பீர்களேயானால், இயேசுவானவர் அதைப் போன்றே ஒரு மணவாட்டியை உடையவராயிருக்கமாட்டார். அவர் அந்தவிதமான ஒரு விபச்சாரியை உடையவராயிருக்கமாட்டார். உங்களுடைய அன்பு யாவுமே அவரண்டை இருக்க வேண்டும். நீங்கள் தேவனிடத்தில் அன்பு கூருவதைக் காட்டிலும், உலகத்தின் காரியங்களிலும், இந்த உலகத்தின் நாகரீகங்களிலும் அன்பு கூருவீர்களேயானால், அப்பொழுது நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளவில்லை. 100நாம் நம்முடையத் தலைகளை வணங்கியிருக்கையில், இன்றிரவு அந்தவிதமான நபர் எவரேனும் இங்கிருந்தால், அப்பொழுது நீங்கள் உங்களுடையக் கரத்தினை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள். நான் அந்தவிதமாக இருக்க விரும்பவில்லை. நான் மணவாட்டியின் பாகமாக இருக்க விரும்புகிறேன். நான் செய்யக் கூடாத காரியங்களையே நான் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். எனவே எனக்காக ஜெபிப்பீரா?” என்று கூறுங்கள். என் இந்திய சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை, என் சகோதரனே உங்களை, சகோதரனே. வேறு யாரேனும் இருக்கிறீர்களா? அப்படியிருந்தால் உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம் எனக்காக ஜெபியுங்கள். நான் - நான் - நான் - நான் சரியாயில்லை என்பதை நான் அறிவேன்” என்று கூறுங்கள். இப்பொழுது நீங்களாகவே நேர்மையாயிருங்கள். உங்களுடைய ஜீவியத்தை திரும்பிப் பாருங்கள். நீங்கள் முன் நோக்கி செல்வதற்கு முன்பாக பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நீங்கள் இருந்து வந்துள்ள நிலையை நோக்கிப் பாருங்கள். நீங்கள் அதைச் செய்யும்படியாக என்ன ஆவியை நீங்கள் பெற்றிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள். நீங்கள்...... பெற்றிருக்கவில்லையென்றால்..... நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருப்பதாகப் பிரகடனம் செய்து, அதே சமயத்தில் இன்னமும் நீங்கள் உலகத்தின் காரியங்களோடு கலந்திருந்தால், சகோதரனே, சகோதரியே, நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்பதை நீங்களே காணவில்லையென்றால் நீங்கள் குருடராயிருப்பதைத் தவிர வேறு எப்படி இருக்க முடியும்? 101அன்றொருநாள் யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் அந்தவிதமாக ஜனங்களைக் கூறுவதை விட்டுவிடத்தான் வேண்டும்” என்று கூறினார். மேலும், ஜனங்களோ உங்களை ஒரு தீர்க்கதரிசி என்றழைக்கிறார்களே“ என்றும் கூறினார். அதற்கு நான், “நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல” என்றேன். அவரோ, “ஆனால் ஜனங்கள் உம்மை தீர்க்கதரிசி யென்றே கருதுகிறார்கள். நீர் இந்த ஸ்தரீகளுக்கு போதிக்க வேண்டும். நீர் அவர்களுக்கு நீண்ட முடியை வைத்திருக்க வேண்டும், சரியான விதமான ஆடைகளை உடுத்த வேண்டும் என்று இதுபோன்ற காரியங்களைக் கூறுவதற்குப் பதிலாக அவர்கள் எப்படி ஆவிக்குரியக் காரியங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே கூறவேண்டும்” என்று கூறினார். நான், “அவர்கள் சிறுவர்களுக்குரிய விளையாட்டு முறைக் கல்விப் பள்ளியில் மொழியின் முதல் எழுத்துக்களையே கற்றுக்கொள்ளாதிருக்கும்போது, என்னால் எப்படி அவர்களுக்கு குறிக்கணக்கியலைக் கற்றுத்தர முடியும்? தங்களை சுத்திகரித்துக் கொள்ளும்படியான பொதுவான நாகரீகப் பண்பினைக்கூடப் பெற்றுக்கொள்ளாமலிருக்கும்போது, அவர்களை, கிறிஸ்துவின் மணவாட்டி' என்று அழைக்கலாமா?” என்று கேட்டேன். நான் அதை எரிச்சலூட்டக் கூடிய முறையில் கூறிக் கொண்டிருக்கவில்லை. நான் அதை தேவ அன்பில் கூறிக் கொண்டிருக்கிறேன். 102நான் இந்தக் காலையில் கூறினதுபோல, நீங்கள் ஆற்றில் ஒரு படகில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டால், நீங்கள் அந்த நீர் வீழ்ச்சியில் மோதி விழப்போகிறீர்கள் என்பதை நான் கண்டால், அந்தப் படகு உங்களைக் கரைக்கு கொண்டு செல்லாது என்றே நான் உங்களைப் பார்த்து சத்தமிட்டு, கூச்சலிடுவேன், நான் உங்களுக்கு தீங்கிழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. நான் உங்களை நேசிக்கிறேன். காரணம், நீங்கள் செவிகொடுக்கவில்லையென்றால், உங்களுடைய ஜீவியம் இழக்கப்படும். நாம் ஜெபிப்பதற்கு முன்னர் வேறு யாராகிலும் இருந்தாலும், உங்களுடையக் கரங்களை உயர்த்துவீர்களா? அங்கே பின்னாக உள்ள உங்களை நான் காண்கிறேன். தேவன் உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய ஜீவியமே காண்பிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இன்னமும் தேவனைக் காட்டிலும் உலகத்தை அதிகமாக நேசிப்பீர்களே யானால், அப்பொழுது ஏதோக் காரியம் எங்கோ தவறாய் உள்ளது. உங்களையே உற்றுநோக்குங்கள். அங்கே அறைகளில் உள்ளவர்களே உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன்...... அது உண்மை . நற்குணத்திற்கான நேர்மையை, உத்தமத்தை நான் - நான் வியந்து பாராட்டுகிறேன். இன்றைக்கு பெந்தேகோஸ்தே சபையோடு உள்ள தொல்லை அதுவேயாகும். நாம் இதற்கு முன்பு வழக்கமாக கொண்டிருந்த உண்மையான உத்தமத்தை இப்பொழுது உடையவர்களாயிருக்கவில்லை. நாம் தவறாயிருக்கிறோம் என்று கூறி, அதை வந்து ஒப்புக்கொள்ளும் துணிவை நாம் பெற்றிருக்கவில்லை. சபையானது உலகத்தின் அழுக்கில் புரண்டு உருண்டு கொண்டிருக்கும் வரைக்கும் பிசாசுதான் அதனை பிடித்து வைத்திருக்கிறான். எனவே அதனைச் செய்யாதீர்கள். 103நீங்கள் எதைப் பெற்றுள்ளதாகக் கூறிக் கொண்டிருக்கிறீர்களோ, அதை நீங்கள் பெற்றிருக்கவில்லை யென்று உங்களுடைய சொந்த ஜீவியமே நிரூபிக்கிறது. அப்படியானால் நாம் ஏன் அதை அறிக்கை செய்யக் கூடாது? “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.'' உங்களால் அதை மறைக்க முடியாது. தேவன் அதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நீங்கள் சரியாக ஜீவித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் கண்டும், அறிந்துமிருந்தால், அப்பொழுது நீங்கள் ஏன் வந்து அதை அறிக்கையிட்டு, கறையற்றதாக்கிக் கொள்ளக் கூடாது? “சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத் தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.” என்னுடையதோ முன்பாக போய் விடட்டும். நான் இப்பொழுதே என்னுடைய எல்லாவற்றையும் கூறட்டும். தேவன் அதைச் சரிப்படுத்துவாராக. அதைத்தான் நாம் செய்ய வேண்டும். 104ஏறக்குறைய ஆறு அல்லது எட்டு கரங்கள் மேலே உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தச் சிறு சபையிலோ இன்றிரவு அதைப் பார்க்கிலும் அதிகம் நிச்சயம் இருக்க வேண்டும், ஏனென்றால் இங்கே நூறு அல்லது இருநூறு அல்லது ஒருகால் நூற்றைம்பதுபேர் இருக்கலாம். தேவன் வாலிபனே உன்னை ஆசீர்வதிப்பாராக. இபொழுது பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது உண்மை . மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. [ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி............ பெந்தேகோஸ்தே ஸ்திரீகள் முன்பெல்லாம் தங்களுடையத் தலை முடியை வெட்டமாட்டார்கள், ஆனால் இன்றைக்கோ அவர்கள் அதைக் கத்தரிக்கிறார்கள். என்ன சம்பவித்தது? அவர்கள் இதற்கு முன்னர் வழக்கமாகவே முக ஒப்பனை அலங்காரம் செய்து.... கொள்ளமாட்டார்கள். உங்களுடையத் தாயார் பெந்தேகோஸ்தே ஸ்திரீயாக இருந்திருந்தால், அவள் அதைச் செய்திருக்கமாட்டாள். ஆனால் இன்றைக்கு என்ன சம்பவித்தது? காரணம் அவர்கள் உலகத்தின் காரியங்களில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். உலகமோ நம்மை நோக்கிப் பார்க்கிறது. நாம் ஒரு பரிசுத்தமான சபையாய் இருப்பதாக உரிமை கோருகிறோம். காரியம் என்ன? நாம் கிறிஸ்துவின் மணவாட்டியைப் போன்று காணப்படுகிறதில்லை. அங்குள்ள புருஷர்களே, உங்களைக் குறித்ததும் அதேக் காரியமாகத்தான் உள்ளது. சகோதரனே, உங்களுக்கு அவமானம். 105பரலோகப் பிதாவே, நான் நோக்கிப் பார்த்து, அதைப் போன்று கடிந்துகொண்டு, இடித்துரைத்து அப்படிப்பட்ட ஒரு முறையில் பீட அழைப்பை விடும்போது, அது மட்டுமீறிய கண்டிப்பு வாய்ந்தது போன்றே தென்படுகிறது. ஆனால் நாம் முடிவை நெருங்கிகொண்டிருக்கிறோம் என்பதை நான் அறியும்போது, என்னுடைய உட்புறத்திலோ இரத்தம் கசிந்துகொண்டிருக்கிறது. இந்த நாட்களில் ஒன்றில் இந்த சிறு படகுகள் கீறலிட்டு உடையப் போகின்றன. மரணமும், போராட்டங்களும் தாக்கப் போகின்றன. எத்தனையோ முறை நான் அவர்களுக்கு அருகில் அழைக்கப்பட்டு, அவர்களோ, “ஓ, சகோதரன் பிரான்ஹாமே, என்னால் மட்டும் மறுபடியும் உயிரோடு வாழ முடிந்தால் நலமாயிருக்குமே” என்று கூறக் கேட்டிருக்கிறேன். அப்படியானால், கர்த்தாவே இந்தக் காரியங்கள் இப்பொழுதே சரிபடுத்திக் கொள்ளக் கூடியவைகளாயுள்ளனவே! நானோ என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். தேவனே, நான் ஜனங்களை திட்டாமல், அவர்களுக்கு உதவி செய்ய மாத்திரமே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு வெளிப்படுத்தித்தருவாராக. ஆனால் பண்டையப் பவுல் கூறினது போன்று உள்ளதே!. தேவனே, நான் அவர்களைப் புண்படுத்த வேண்டுமென்று விரும்புகிறதில்லை, ஆனால் அவர்கள் எங்கேத் தவறாயிருக்கிறார்கள் என்பதை காணும்படிக்கு போதியளவுக்கு அவர்களைப் புண்படுத்த விரும்புகிறேன். 106இந்த ஜனங்கள் தவறாயிருக்கிறார்கள் என்றும், அவர்கள் சரிசெய்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் தேவனுக்கு முன்பாக தங்களடையக் கரங்களை உயர்த்தி அதை அடையாளங்காட்டப் போதிய மரியாதையோடிருக்கிறபடியால், நீர் இன்றிரவே இவர்களுக்கு அதைச் சரிபடுத்தியருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.'' ஆனால் நீங்களோ ஒருபோதும் தட்டாமலேயிருந்தால், அப்பொழுது அவர் எப்படித் திறக்கப் போகிறார்? நீங்கள் ஒருபோதும் தேடாமலேயேயிருந்தால், அப்பொழுது நீங்கள் எப்படி கண்டடையப் போகிறீர்கள்? கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர்தாமே இன்றிரவே இந்த ஜனங்களை ஒரு முழு ஒப்புவித்தலுக்கு தேவனண்டைக் கொண்டு வருவாராக. எங்களுடையக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகத்தான பிதாவானவர் இவர்களுடைய ஆவி, ஆத்துமா சரீரத்தைப் பரிசுத்தப்படுத்தி, இவர்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் பொருத்துவாராக. “ஏனென்றால் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் சமீபித்திருக்கிறது, அவருடைய மணவாட்டியோ தன்னை ஆயத்தப்படுத்தினாள்.'' ஓ, கர்த்தாவே, இது ஆயத்தப்படுத்தும் இரவாயிருப்பதாக, ஏனென்றால் நாங்கள் நாளையத் தினமே ஒருக்கால் அவரை சந்திப்பதாயிருக்கலாம். எனவே நாங்கள் அவரை சந்திக்கும்படி எந்த நேரத்தில் அழைக்கப்படுவோம் என்பதை நாங்கள் அறியோம். கர்த்தாவே, இதை அருளும். 107இப்பொழுது நான் ஜெபித்துக்கொண்டிருக்கையில், நீங்கள் உங்களுடையத் தலைகளை வணங்கியவாறே இருங்கள். உங்களுடையக் கரத்தை உயர்த்தியிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும், நீங்கள் அதனோடு ஆழ்ந்த உத்தமத்தோடு இருப்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் அதை உண்மையாக பொருளுணர்ந்துக் கூறுங்கள். அதாவது நீங்கள் தவறாயிருந்து வருகிறீர்கள் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்வதனால் நீங்கள் வெட்கமடைகிறதில்லையே! எப்படியாயினும் நீங்கள் அவர்களோடு அங்கே நியாயத்தீர்ப்பிலே நிற்க வேண்டியவர்களாயிருக்கப் போகிறீர்களே. நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்ற திடநம்பிக்கையைத் தேவன் உங்கள் மீது போதுமான அளவு வைத்துள்ளாரே. இங்கே அண்மையில் நான் அந்தவிதமான ஒரு காரியத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் அங்கு பின்னால் நின்றுகொண்டிருந்த ஓர் வாலிபப் பெண்மணியினிடத்தில் பேசினேன். ஒரு ஊழியக்காரரின் மகளாயிருந்த அவளோ பயங்கரமாக உற்றுப் பார்த்து முறைத்தாள். அவள் என்னை சபைக்கு வெளியே சந்தித்தாள், அவள் என்னை கடுமையாக வீசியெறிந்து பேசாதிருந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே! ஆனால் அவளோ , நீர் அறிவற்றவராயிருக்கிறீரே“ என்றாள். சிறு பெண், திமிரான அவமதிப்புப் பண்புடையவளாய், உதட்டுச் சாயமும் பூசிக் கொண்டிருந்தாள்; மேலும் குட்டையாகத் தலைமுடியை வெட்டிக் கொண்டவளாயுமிருந்தாள். அப்பொழுது அவள், ”அதைக் குறித்து என்னிடத்தில் பேச எனக்கு யாராவது வேண்டுமென்றால், அப்பொழுது நான் கொஞ்சம் அறிவுத்திறனுள்ள யாரையாவது பயன்படுத்துவேன்“ என்றாள். அதன்பின்னர் மீண்டும், அது போன்ற ஒரு காரியத்தைப் பிரசங்கிக்க என்னுடைய தகப்பனாரின் பிரசங்கபீடத்திற்கு நீர் ஒருபோதும் வரவே வேண்டாம்” என்று கூறினாள். அவபொழுது நான், “உன்னுடையத் தந்தை, ஒரு நல்ல நேர்மையான பாப்டிஸ்டு பிரசங்கியாராக இருந்தாலும், அவர் அதற்கு எதிராக பிரசங்கிக்கமாட்டார் என்ற எண்ணங்கொண்டே நீ என்னிடத்தில் சொல்லுகிறாயா?” என்று கேட்டேன். அதற்கு அவளோ, “அவர் உன்னை இங்கு வரும்படிக்கு கூலிக்கு அமர்த்தவில்லையே....” என்று கூறினாள். அப்பொழுது நானோ, “அவர் என்னைக் கூலிக்கு அமர்த்தவேயில்லைதான். ஆனால் நானோ அழைப்பின் மூலமே வந்தேன்” என்று கூறினேன். அவளோ மறுபடியும், “நான் உம்மை ஒருபோதும் அதற்காக மன்னிக்கவே மாட்டேன்” என்றாள். அப்பொழுது நான், “அது உன்னைப் பொறுத்ததாயிருக்கிறது. நான் சுவிசேஷத்தை மாத்திரமே பின்பற்றினேன்” என்று கூறினேன். அங்கே வீசின மெல்லிய காற்றில் ரோஜா மலர்களின் புதர் செடிகளோ அசைந்தாடிக் கொண்டிருந்தன. அழகான வாலிபப் பெண். 108கொஞ்சங்கழித்து, ஏறக்குறைய ஓர் ஆண்டு கழித்து, நான் அந்தப் பட்டிணத்தினூடாகக் கடந்து சென்றேன். அப்பொழுது நான் அந்த அதே வாலிபப் பெண்மணி தன்னுடைய அரைப்பாவாடையானது கீழே தொங்கிக்கொண்டிருக்க, ஒரு சிகெரேட்டைப் புகைத்துக்கொண்டு வீதியில் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். நான், “அது சகோதரன் இன்னார் - இன்னாருடைய மனைவி இல்லை மகளாயிற்றே” என்று யோசித்துப் பார்த்தேன். அப்பொழுது என்னால் அவளை அடையாளங்கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்க நானும் அந்த வீதியில் நடந்து சென்றேன். அப்பொழுது அவள் என்னை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு, இந்த சிகெரெட்டை புகைத்து, அதன் புகையை மூக்கினூடாக ஊதினாள். பின்னர் அவள், “ஹலோ, பிரசங்கியாரே'' என்று தேவபக்தியற்ற கொச்சையான வார்த்தைகளைக்கூறி அவ்விதமாய்க் கூப்பிட்டாள். அதற்கு நானோ, “நலம், நலமே!” என்றேன். உடனே அவள், “என்னுடைய சிகெரேட்டு கட்டிலிருந்து ஒரு சிகெரட்டை எடுத்துக்கொள். ஆண்மை ஆற்றலோடு செயல்படும் ஒருவராயிரும்” என்று கூறினாள். அதற்கு நானோ, “நீ உன்னைக் குறித்தே வெட்கப்பட வில்லையா?” என்று கேட்டேன். 109அப்பொழுது அவளோ தன்னுடைய சட்டைப் பையில் வைத்திருந்த சிகெரெட்டு அட்டைப் பெட்டியை கைவிட்டு எடுத்து, “உனக்கு வேண்டுமானால் ஒரு சிகெரெட்டை எடுத்துப் புகை” என்று கூறினாள். அதற்கு நானோ, “உனக்கு அவமானம். தேவனுடைய ஊழிக்காரனுக்கு ஒரு சிகெரெட்டு கொடுப்பதென்பது உனக்கு அவமானமே” என்று கூறினேன். பின்னும் அவள், “உனக்கு வேண்டுமானால் என்னுடைய புட்டியிலிருந்து சற்று மது அருந்து” என்றாள். அதற்கு நான், “தயவு செய்து அதைக் கூறாதே” என்றேன். அவள் என்னையே உற்றுப்பார்த்தாள். என்னால் அழுவதை அடக்க முடியவில்லை, ஏனென்றால் அவளுடையத் தந்தை ஒரு நல்ல மனிதனாயிருக்கிறார். நான் அவளை நோக்கிப் பார்த்தேன். நானோ, “ஓ, என்னே! அவளுக்கு ஏராளமான நேரம் இருப்பதாக எண்ணிக்கொண்டாளே” என்று நினைத்தேன். அதன்பின்னர் நான் நடக்கத் துவங்கினேன். என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிவதை என்னால் நிறுத்த முடியவில்லை. நான் தொடர்ந்து நடந்தேன். அப்பொழுதும் அவள், “ஒரு நிமிடம் நில்லுங்கள்” என்றாள். அதற்கு நானோ, “சொல், என்ன அம்மணி?” என்று கேட்டேன். அவள் பின்னால் நடந்து வந்தாள். ஜனங்கள் கடந்து சென்றுகொண்டிருந்த அந்த வீதியில் அவளிடத்தில் பேசுவது ஏறக்குறைய ஒரு அவமானமாயிருந்தது. அவள் நடந்து அருகில் வந்தாள். பின்னர் அவள், “அன்றிரவு நீர் என்னிடத்தில் என்னக் கூறினீர் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டாள். அதற்கு நானோ, “எனக்கு எப்பொழுதுமே நினைவிருக்கும்” என்றேன். அப்பொழுது அவள், “பிரசங்கியாரே, நீர் சரியாகக் கூறியிருந்தீர் என்றே நான் உமக்குக் கூற விரும்புகிறேன்'' என்றாள். மேலும் அவள், ”நான் அப்பொழுது கடைசி முறையாக பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தினேன்“ என்றுக் கூறினாள். இப்பொழுது அந்த ஸ்திரீ என்னிடத்தில் கூறின குறிப்பிடத்தக்க குற்றம் இதுதான். நான் அதை உயிரோடிருக்கும் வரை மறக்கவே மாட்டேன். அவள், ”அவர் அன்றிரவு என்னோடு ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆனால்“ என்று கூறி, ”நான் அவரை அந்த நேரத்தில் புறக்கணித்தபோது, அதுவே என்னுடையக் கடைசி நேரமாயிருந்தது“ என்றாள். அவள் தொடர்ந்து, ”அது முதற்கொண்டே என்னுடைய இருதயம் மிகவும் கட்டினமாயிருந்து கொண்டு வருகிறது; நான் தேவனுக்காகவோ, சபைக்காகவோ அல்லது மற்றெந்த காரியத்திற்காகவோ கவலைப்படுகிறதே இல்லை. நான் என்னுடைய தந்தையினிடத்தில் ஒவ்வொரு நாளும் முரட்டாட்டம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்“ என்று கூறினாள். மேலும் அவள், ”என் தாயினுடைய ஆத்துமா ஒரு பணியாரத்தைப் போன்று நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவதையும், அது நகைக்கப் படுவதையும் என்னால் காண முடிகிறது'' என்றும் கூறினாள். அதுவே கடைசி முறையாக பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தினதாகும். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 110நாம் ஒரு புறாவின் சிறகுகளில் பரலோக வீட்டிற்குச் செல்வோமாக. நாம் மணவாட்டியாயிருப்போமாக. நீங்கள் தவறாயிருந்தால், இப்பொழுதே உங்களுடைய இருக்கையிலிருந்து எழும்புங்கள். இங்கே மேலே வாருங்கள். இங்கே பீடத்தண்டை நின்று, “நான் தவறாயிருந்து வந்துள்ளேன், சகோதரன் பிரான்ஹாம், நான் எரிச்சலான மனநிலையுடையவனாய் இருந்து வந்திருக்கிறேன். இல்லையென்றால் நான் - நான் - நான் தேவபக்தியற்றவனாய் வாழ்ந்து வந்திருக்கிறேன். நான் - நான் செய்யக் கூடாத இந்தக் காரியங்களை நான் செய்கிறேன். சகோதரன் பிரான்ஹாம், நான் இதை, அதை அல்லது மற்றதைச் செய்திருக்கிறேன். நான் பொய்யுரைத்தலில் குற்றவாளியாய் இருக்கிறேன். நான் திருடுகிறதில் குற்றவாளியாயிருக்கிறேன். நான் வேறேதோ ஒரு காரியத்தில் குற்றவாளியாயிருக்கிறேன். நான் சேவிக்க வேண்டியவிதமாக தேவனை சேவித்திருக்கவில்லை. நான் என்னைக் குறித்தே வெட்கப்படுகிறேன். நான் என் ஜீவியத்தை சரிப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனவே சகோதரன் பிரான்ஹாம், நீர் இன்றிரவு இங்கே எனக்காக ஜெபிக்கமாட்டீரா?” என்று கூறுங்கள். நான் அதைச் செய்ய சந்தோஷப்படுவேன். 111தேவன் சுகவீனம், குருடு, துயரப்படுகிறவர்களுக்கான என்னுடைய ஜெபங்களைக் கேட்டு பதிலளிப்பாரானால், அப்பொழுது அவர் பாவிக்கான ஒரு ஜெபத்தையும் நிச்சயம் கேட்பார். நீங்கள் மணவாட்டியின் பாகமாயிருக்கும்படிக்கு இன்றிரவே வரமாட்டீர்களா? நீங்கள் வரும்படியாக நான் உங்களை அழைக்கிறேன். என் சகோதரனே, உங்களுக்கு நன்றி. நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொண்டு, வெளியே நடந்துவரும் அந்தவிதமான ஒரு தைரியத்தை நான் வியந்து பாராட்டுகிறேன். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே நில்லுங்கள். நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்த முடிந்திருந்தும், அதைக் குறித்து உத்தமமாய் இருக்க முடியவில்லையே என்று நீங்கள் மனதில் உணர்ந்து என்னிடம் கூறுகிறீர்களா? ஜனங்களுக்கு என்ன சம்பவித்தது? சகோதரனே, காரியம் என்ன? இந்த நாட்களில் உள்ள நம்முடைய ஜனங்களோடுள்ள காரியம் என்ன? நீங்கள் தவறாயிருந்தீர்கள் என்பதை நீங்கள் மனதிற்கொண்டே உங்களுடையக் கரத்தை நீங்கள் உயர்த்தியப் பிறகும், நீங்கள் வரமாட்டீர்களா? எனவே, “ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்கு பாவமாயிருக்கும்” என்பதை அறிந்துள்ளோம். ஆகையால் நீங்கள் வரமாட்டீர்களா? இசைப் பேழையை இயக்குபவரே, சகோதரியே, நீங்கள் விரும்பினால், இசைப் பேழையை இசைப்பவரே சற்று மெல்லிய சத்தத்தில் இசையுங்கள். 112நான் உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். கூட்டங்களில் உள்ள எத்தனை பேர்...... ஏற்கெனவே என்னுடையக் கூட்டங்களில் இருந்திருக்கிறீர்கள்...... எனவே நான் ஒரு பிரசங்கி அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எனக்கு கல்வியறிவும் கிடையாது. சிறு பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதைச் செய்ய ஓர் உண்மையான பெண் தேவைப்படுகிறாள். இந்தச் சிறு பாடற் குழுவினர் இங்கே வருகிறார்கள், என் சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது உண்மையான தைரியமாயுள்ளது. நான் - நான் அந்தச் சிறு பெண்மணியை வியந்து பாராட்டுகிறேன். தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. எனக்கு ஏறக்குறைய உங்கள் எல்லாரைப் போன்ற வயதினையுங்கொண்ட குட்டி ரெபேக்காள் என்ற ஒரு குட்டிப் பெண் வீட்டில் இருக்கிறாள். நான் உங்களை பாராட்டுகிறேன். குட்டி இந்தியப் பெண்ணா ? தேனே, இந்த குட்டி இளவரசியை தேவன் ஆசீர்வதிப்பாராக. இனிய இருதயமே, தேவன் உங்களோடிருப்பாராக. குட்டி சகோதரியே உன்னைத்தான், தேவன் உன்னோடிருப்பாராக. சகோதரியே உன்னோடும் இருப்பாராக. இப்பொழுது இங்கே பாருங்கள். அதைப் போன்ற வாலிபப் பெண்மணிகளாயிருந்தாலும், குட்டிப் பெண் பிள்ளைகளாயிருந்தாலும், மனசாட்சியில் இளகிப்போய், அவர்களை துண்டு துண்டாக வெட்டுகிற ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கித்தப் பிறகும், அவர்கள் தவறாயிருக்கின்றனர் என்று அறிந்து, இங்கே கூட்டத்தினருக்கு முன்பாக நின்று ஒரு அறிக்கையைப் பண்ணும்படிக்கே இங்கே அவர்கள் வந்திருக்கிறார்கள். நிச்சயமாகவே, நிச்சயமாகவே வயோதிக ஸ்திரீகளாகிய உங்களைத்தான், நீங்கள் வரமாட்டீர்களா? இங்கே எழும்பி நகர்ந்து வந்து, இங்கேயே நில்லுங்கள். ........நான் உம்முடைய முகத்தையே தேடுவேன்; என்னுடைய காயம்பட்ட, நொருங்குண்ட ஆவியைக் குணப்படுத்தும் நாம் அதைப் பாடுவோமாக. உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். இரட்சகரே, இரட்சகரே, ........... செவிகொடும் ........ 113நிச்சயமாகவே நீங்கள் ஒரு தாழ்மையான ஜெபத்தை ஜெபிக்கும்படிக்கு போதிய உத்தமமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். “கர்த்தாவே, என்னிடத்தில் ஏதாகிலும் தவறு உண்டோ என்று பார்த்து, என்னை சோதித்தறியும் என்று கூப்பிடுங்கள்.'' என்னைக் கடந்து செல்லாதேயும். அருமையான சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எத்தனைபேர் இதுபோன்ற கூட்டத்தில் நின்று, கூட்டத்திலிருந்து ஸ்திரீகளும், புருஷர்களும் மற்றும் எல்லாருமே மேலே வர, அப்பொழுது நான் வியாதியஸ்தருக்காக நின்று ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடையக் காரியங்களையும், அவர்களுடைய பாவங்களையும் மற்றுமுள்ள காரியங்களையும் கூறவதைக் கண்டறிந்தவர்களாயிருக்கிறீர்கள்? அது உண்மை என்பதை உங்களில் எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? ஒருபோதும் தவறிப்போவதேயில்லை. பரிசுத்த ஆவியானவர் என்னிடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறார், அதேப் பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு இங்கே அவரைத் துக்கப்படுத்துகிற ஒரு காரியம் உண்டு என்று கூறுகிறார். இப்பொழுது அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் உள்ளது. இப்பொழுது, அதை இங்கே அல்லது அங்கே சந்தியுங்கள். நான் உணர்ச்சி வசப்படுதல்களுக்கு உட்பட்ட ஒரு நபராய் இருக்கவில்லை. இல்லை, ஐயா. நான் சரியாக எங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன். நான் - நான் தேவனை அறிந்துள்ளேன். அது உண்மை. இங்கே இந்த வாலிப பெண்பிள்ளைகள் இருக்கின்ற இடத்தில் உங்களில் அநேகர் நிற்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் வர மாட்டீர்களா? நான் உங்களை அழைத்துக்கொண்டிருக்கிறேன். நான் வற்புறுத்தி அறிவுரை கூறி இணங் கவைக்கமாட்டேன். நான் வெறுமென உங்களிடத்தில் கூறிக்கொண்டிருக்கிறேன். 114யாரோ ஒருவர், “ஓர் ஊழியக்காரன் அதுபோன்ற காரியங்களில் கூட்டத்தினரைக் கடிந்துகொண்ட இடத்திலேயே ஒரு பீட அழைப்பு விடுவதை நான் ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார். அந்தவிதமாகத்தான் அது செய்யப்பட வேண்டியதாயுள்ளது. நீங்கள் ஏதோ ஓர் இருதயம் நொருங்குண்டக் கதையின்பேரில், மரித்துக்கொண்டிருக்கிற ஒரு தாயாரின் பேரில் அல்லது வேறேதோ ஒரு காரியத்தின் பேரில் எழும்பி வருகிறதில்லை. அப்படியானால் அது, அது உணர்ச்சிவசப்படுதலாயுள்ளது. நீங்கள் வருகிறதோ தேவனுடைய வார்த்தையின் பேரிலானதாயுள்ளது. நீங்கள் எந்த உணர்ச்சிவசப்படுத்துதலுக்காகவும் வருகிறதில்லை. தேவன் தேவனாயிருக்கிறார் என்றும், நீங்கள் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் வீட்டில் இருக்கிறீர்கள் என்றும் விசுவாசித்தே நீங்கள் வருகிறீர்கள். உங்களுடைய வழக்கை வாதிடவே நீங்கள் வருகிறீர்கள். என் சகோதரனே, என் சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களுடைய நேர்மையான திடநம்பிக்கையைப் பாராட்டுகிறேன் என்று கூறி உங்களுடையக் கரத்தைக் குலுக்க விரும்புகிறேன். குட்டிப் பெண்ணே , நான் உன்னைப் பாராட்டுகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களுக்கு அந்தத் தீரமான ஆவியை அளிப்பாராக. என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களோடிருப்பாராக. இன்னும் ஒருவிசை, அதன்பின்னரே நாம் முடிக்கப் போகிறோம். இது கடைசி நேரமாகவும் கூட முடிவுறலாம். புரிகிறதா? எப்பொழுது என்று எனக்குத் தெரியாது. அது முடிவுறவில்லையென்று நான் நம்புகிறேன். ஆனால் அது முடிவுறலாம். புரிகிறதா? இரட்சகரே ...... என் சகோதரியே, இங்கே வாருங்கள். நான் உங்களுக்கு நன்றி என்று கூறி உங்களுடையக் கரத்தைக் குலுக்க விரும்புகிறேன. நான் அந்த விசுவாசத்தைப் பாராட்டுகிறேன். அது அசலான விசுவாசமாயிருக்கிறது. என் சகோதரனே, இங்கே வாருங்கள். நான் இங்கேயே உங்களோடு கரங்குலுக்க விரும்புகிறேன். நான் உங்களுடைய உத்தமத்தைப் பாராட்டுகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே வாருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் நிற்கும்படியாக...... முடிவெடுத்ததற்கான உங்களுடைய உத்தமத்தை நான் பாராட்டுகிறேன். ............. என்னை கடந்து செல்லாதேயும். ............ இரட்சகரே...... என்ன? “ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்.” தாழ்மையாய் கூப்பிடுகையில் ..... ......... மற்ற.............. என்னை கடந்து செல்லாதேயும். என்ன? நான் உம்முடையத் தகுதியில் மாத்திரமே நம்பிக்கை கொண்டிருக்கிறேன், உம்முடைய முகத்ததையே நான் தேடுவேன்; என்னுடைய காயம்பட்ட, நொருங்குண்ட ஆவியைக் குணப்படுத்தும், அங்கே வார்த்தை அதற்குள்ளாக வெட்டிற்றே, உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். இரட்சகரே, இரட்சகரே, என்னுடையத் தாழ்மையான ...... செவிகொடும் ...... மற்றவர்களை நீர் அழைத்துக்கொண்டிருக்கையில், ஓ, என்னைக் கடந்து சென்றுவிடாதேயும். 115நினைவிருக்கட்டும், உங்களுடைய இருதயத்திற்குள்ளாக வெட்டினது பரிசுத்த ஆவியாயிருந்தது. இங்கே எழும்பி வாருங்கள். அவர் வெட்டின அந்த இடங்களைக் குறித்து சற்று சிந்தித்துப்பாருங்கள், அதன்பின்னர் அந்த நபர் ஒருபோதும் அந்தக் கீழான நிலையில் ஜீவிக்கமாட்டார். அவர்கள் எப்பொழுதுமே அதை நினைவு கூருவார்கள். “நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால்.” ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தையில் ஏதோ ஒரு காரியத்தோடு வந்து, நீங்கள் அதைக் காத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டால், அப்பொழுது அது ஆபிரகாமுடைய வித்து அல்ல. ஆபிரகாமோ என்ன வந்தபோதிலும் அல்லது போனபோதிலும் அதனைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய வாக்குத்தத்தத்தைத் தன்னுடைய இருதயத்தில் காத்துக்கொண்டான். 116நான் பீடத்தைச் சுற்றிலும் நிற்கிற இவர்கள் எல்லோரையுமே பாராட்டுகிறேன். தேவன் உங்களுக்கு உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை இன்றிரவு அளித்து, உங்களை உண்மையான பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்களாக ஆக்குவாராக என்பதே உங்களுக்கான என்னுடைய ஜெபமாகும். இந்த வாலிபக் கூட்டத்தில் சிலர் இங்கே இந்தியர்களாயும், ஸ்பானியர்களாயும், மெக்ஸிக்கன்களாயும் இருக்கின்றனர். சுற்றி நின்று கொண்டிருக்கிற எல்லா ஜனங்களுமே ஒருகால் அநேக வருடங்களாக கிறிஸ்தவர்களாக இருப்பதாக உரிமை கோரியிருந்தனர், ஆனால் அது தவறாயிருக்கிறது என்பதைக் காண்கிறார்கள். எனவே அவர்கள் சரிசெய்து கொள்ள விரும்புகிறார்கள். “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.'' குற்றவாளியென தீர்க்கப்பட்டு, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பலிபீட அக்கினியினூடாக தேவனோடு அதைச் சரிப்படுத்திக்கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார்கள். நண்பர்களே, அதை எங்காவது சந்திக்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் அதை எங்காவது சந்தித்தாக வேண்டும், ஆகையால் அதை இங்கேயே சந்தியுங்கள். காலை வரைக்கும் காத்திருக்க வேண்டாம். நீங்கள் இன்றிரவே வீட்டிற்குச் செல்லுகையில் ஒருக்கால் விபத்தில் கொல்லப்படலாம். 117அண்மையில் ஒரு கூட்டத்தில் நான் பீட அழைப்பை விடுத்தேன். நான் அதை ஒஹையோவில் செய்திருந்ததுபோன்றே பீட அழைப்பினை விடுத்திருந்தேன். பின்னர் நான் அந்தக் கட்டித்தை விட்டு அன்றிரவு புறப்பட்டு சென்று ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டிருந்தது. அப்பொழுது நான் வீதியின் ஓரத்தில் யாரோ ஒருவர் கூக்குரலிட்டதைக் கேட்டேன். நான் நின்று பார்த்துவிட்டு, அங்கு விரைந்து சென்றேன். அப்பொழுது அங்கேயோ ஒரு கார் மற்றொன்றோடு வேகமாகச்சென்று மோதினதினால் விபத்து ஏற்பட்டிருந்தது. அப்பொழுது அந்தக் காரில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியோ மிகவும் பயந்துபோய் பதற்றத்தோடு இருந்தாள். அப்பொழுது அவள் தன் தாயினுடைய விரலிலிருந்து மோதிரத்தை இழுத்துக் கழற்றி எடுத்தாள். அவள் மிகவும் பயந்துபோய் பதற்றமாயிருந்தாள். தாயார் கொல்லப்பட்டிருந்தாள். அவள் வீதியிலே காரோட்டிக்கொண்டு சென்றபோது, தன் மகளிடத்தில் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தாளாம். அவர்கள் அவளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் இருவருமே பீடத்தண்டை வந்திருக்க வேண்டும். அவளுடைய மகள், “தன்னுடைய தாய் காரில் மோதுவதற்கு முன்னர் தன்னிடத்தில், நான் இன்றிரவு தவறு செய்துவிட்டேன். நான் தவறுசெய்துவிட்டேன் என்பதை நான் அறிவேன்' என்று கூறினதே கடைசி வார்த்தைகளாகும்” என்றுக் கூறினாள். அங்கேயே அவளுடைய ஜீவியம் அழைக்கப்பட்டுவிட்டது. ஓ, நீங்களோ, “அது எனக்கு சம்பவிக்காது' என்றுக் கூறலாம். அது சம்பவிக்கலாம். அது சம்பவிக்கக்கூடும். 118பரிசுத்த ஆவியானவர் மீண்டும் உங்களை ஒருபோதும் குற்றவாளியெனத் தீர்க்காமலும், நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்று உங்களிடம் கூறவில்லையென்றால் என்னவாகும்? அப்பொழுது நீங்கள் அந்தவிதமாக நித்தியத்திற்குள்ளாக நடந்து செல்வீர்கள். ஆனால் மேற்கூறின அந்த விதமான ஆவியோடு உங்களால் அதைச் செய்ய முடியாது என்பதை நீங்களே அறிவீர்கள். ஐயா, உங்களுடைய ஜீவியத்தை பின்னோக்கிப் பாருங்கள், நீங்கள் எப்படி வாழ்ந்துள்ளீர்கள் என்றுப் பாருங்கள். பின்னோக்கிப் பார்த்து, அது இனிமையானதாயும், கிறிஸ்துவின் தாழ்மையான ஜீவியமாயும், அவருடைய வார்த்தை எல்லாவற்றோடும் பொருந்துகிறதாயுமுள்ளதா என்றும் பாருங்கள். அது அவ்வாறு பொருந்தாததாயிருந்தால், அப்பொழுது வந்து சரிப்படுத்திக் கொள்ளுங்கள். அங்கே...... ஏன்? ஆகாயம் முழுவதும் உங்கள் இருதயத்தை சுத்தப்படுத்த, உங்களுடைய ஆத்துமாவை சுத்திகரிக்கும் உண்மையான பெந்தேகோஸ்தே ஆசீர்வாதங்களால் நிறைந்திருக்க, ஏன் ஒரு மாற்றுப்பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும்? அது சரிதானே? 119இன்றிரவு இங்கே எத்தனை ஊழியக்காரர்கள் இருக்கிறீர்கள்? உங்களில் சில சகோதரர்கள் எங்களோடிருக்கும்படியாக இங்கு நடந்து மேலே வரும்படிக்கு நான் விரும்புகிறேன். அவ்வளவுதானா சகோதரனே? ஆம். சகோதரர்களே, அப்படியே ஒரு நிமிடம், நீங்கள் இங்கே மேலே வருவீர்களா? அது சரி. இயேசு தம்முடைய வார்த்தையில் கூறினார். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.'' பரிசுத்த யோவான் 6-ல் ”நான் அவனைக் கடைசிநாளில், ஒரு உயிர்த்தெழுதலில் எழுப்புவேன்“ என்றார். 120ஜனங்களே, நாம்,நாம் அதற்காக நிற்க வேண்டும். நாம் அதைச் செய்ய வேண்டும். அது அப்படியே செய்யப்பட வேண்டியதாயுள்ளது. ஆகையால்...... அது உணர்ச்சிவசப்படுதல் அல்ல. உண்மையாகவே உணர்ச்சிவசப்படுதல் அதனோடு தொடர்புள்ளதுதான். அது உண்மை. ஆனால் அதைக் குறித்த காரியமோ ஓர் அர்ப்பணிக்கப்பட்ட இருதயமாய் உள்ளது. அப்படியே தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு, “தேவனே, நான் தவறு செய்துவிட்டேன். நான் அதைச் செய்ததற்காக வருந்துகிறேன். நீர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர். நான் தவறு செய்தேன். நான் இந்த இடத்திலேயே என்னுடைய தவறை அறிக்கை செய்கிறேன். இன்றிரவு முதற்கொண்டே, இது முதற்கொண்டே நான் உமக்கென்று நிச்சயிக்கப்பட்டிருக்கிறேன். நான் மணவாட்டியின் பாகமாக இருக்கிறேன். நான் அதை மீண்டும் ஒருபோதும் செய்யமாட்டேன்; என்னுடைய கோபம் ஒருபோதும் மீண்டும் திருட்டுத்தனமாக நுழைய அனுமதிக்க மாட்டேன். நான் - நான் ஒரு பெண்மணியைப் போல நடந்துகொள்வேன். நான் ஒரு நற்பண்புள்ளவரைப்போல நடந்துகொள்வேன். வேதம் செய்யும்படி கூறுகிற காரியங்களையே நான் செய்வேன். நான் உம்மை உம்முடைய வார்த்தையின்படி இப்பொழுதே ஏற்றுக்கொள்வேன்” என்று கூறுங்கள். அப்பொழுது நீங்கள் எங்கோ ஆதாயமடைந்து கொண்டிருக்கிறீர்கள். 121சுவிசேஷ பிரசங்கிமார்களே நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஊழியக்காரர்களோ, “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.) அது உண்மை தானே? [“ஆமென்.”] அது உண்மையே. இப்பொழுது, நாம் நம்முடையத் தலைகளை இப்பொழுது ஜெபத்தில் வணங்கிருப்போம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த வழியில் ஜெபியுங்கள். நினைவிருக்கட்டும், உங்களுக்கு பக்கத்தில் கிறிஸ்து இருக்கிறார். உங்களுக்கு முன்பாக இங்கே பீடம் இருக்கிறது, கிறிஸ்தவர்களோ நின்று ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு பின்னாக சுவிசேஷ ஊழியர்கள் ஜெபிக்கிறார்கள். இப்பொழுது அதுவோ உங்களை ஒரு ஜெப சூழ்நிலையில் வைக்கிறது. இப்பொழுது உங்களுடைய அறிக்கையை உங்களுடைய இருதயங்களில் உங்களுடைய சொந்த வழியில் கூறுங்கள். “கர்த்தாவே, நான் தவறாயிருக்கிறேன்.'' [பீடத்தண்டையுள்ளவர்களோ, ”கர்த்தாவே, நான் தவறாயிருக்கிறேன்“ என்று கூறுகிறார்கள். - ஆசி.] ”கர்த்தாவே, நான் வருந்துகிறேன்.“ [”கர்த்தாவே, நான் வருந்துகிறேன்,“] ”நான் இந்தக் காரியங்களைச் செய்தேன்.'' [“நான் இந்தக் காரியங்களைச் செய்தேன்.” “நான் இப்பொழுது என் பாவத்தை அறிக்கை செய்கிறேன்.” [“நான் இப்பொழுது என் பாவத்தை அறிக்கை செய்கிறேன்.” “நான் உம்மை விசுவாசிக்கிறேன்.'' [”நான் உம்மை விசுவாசிக்கிறேன்.“ ”நான் இப்பொழுதே உம்மை ஏற்றுக்கொள்கிறேன்.'' [“நான் இப்பொழுதே உம்மை ஏற்றுக்கொள்கிறேன்.”] “நான் மணவாட்டியின் பாகமாக இருக்க விரும்புகிறேன்.'' [”நான் மணவாட்டியின் பாகமாக இருக்க விரும்புகிறேன்.“ ”நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.'' [“நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.”] இப்பொழுது உங்களுடைய அறிக்கையை உங்களுடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நான் உங்களுக்காக ஜெபிக்கப்போகிறேன். 122பரலோகப் பிதாவே, என்னை நேசிக்கிற ஜனங்களை நான் நோக்கிப் பார்க்கும்போது, அது என்னை சில சமயங்களில் எப்படியாய் துக்கப்டுத்துகிறது. நீர் வார்த்தையை எடுத்து அதை அங்கு முன் வைத்திருக்கிறீர் என்பதையும் காண்கிறேன். அது எலும்பின் ஊனையும் வெட்டுகிறது, ஆனால் அதன்பின்னர் அது சத்தியமென்று ரூபகாரப்படுத்தும்படியாக நீர் வருகிறீர். அது சத்தியமாயிருக்கிறது. 123இங்கே புருஷர்களும், ஸ்திரீகளும், வாலிபப் பெண்பிள்ளைகளும், குட்டிப் பெண்பிள்ளைகளும் தங்கள் தலைகள் வணங்கியிருப்பதோடு, தங்களுடையக் கண்களில் கண்ணீர் மல்க, வாழ்க்கையின் முக்கியமான தீர்மானம் செய்ய வேண்டியக் கட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கே வளைந்து நெளிந்து, அசைந்து உருண்டு ஆடும் நடனத்தில், பிசாசினால் பீடிக்கப்பட்டு, சாத்தானால் அடக்கியாளப்படும் குழுவில் இருந்திருக்க முடியும் என்பதை நான் எண்ணிப்பார்க்கிறேன். இதோ அவர்கள் இங்கே இன்றிரவு வணங்கிய இருதயங்களோடு நின்றுகொண்டு, அவர்களால் தங்களுடையக் கரங்களை உயர்த்த முடிந்து, “தேவனாகியக் கர்த்தாவே, உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றிலிருந்தும் என்னைச் சுத்திகரியும்” என்று கூறும்படியான ஒரு காரியத்தையே விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 124இங்கே நடுத்தர வயதுடைய புருஷரும், வாலிபரும், வயோதிக ஸ்திரீகளும், வாலிபப் பெண்களும் யாவருமாக ஒன்று சேர்ந்து நிற்கின்றனர். அவர்கள் தவறாயிருக்கிறதை அறிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள். நீர் அவர்களுடைய இருதயத்தில் பேசினீர்; இல்லையென்றால் அவர்கள் ஒருபோதும் இங்கிருக்கமாட்டார்கள். அது ஏற்கெனவே ஒரு தீர்மானம் செய்யப்படாமல் அவர்களால் தங்களுடைய இருக்கைகளை விட்டு எழுந்திருந்திருக்க முடியாது என்பதையே காண்பிக்கிறது. தேவ ஆவியானவர் அவர்களை சுற்றிச் சென்று, “நீ தவறாயிருக்கிறாய்” என்று கூறினாரே. அப்பொழுது அவர்களுடைய அற்பமான ஜீவியம், “கர்த்தாவே, அப்படியானால் நீரே எனக்கு வேண்டும்” என்றான். ஆனால் பிசாசோ, “அப்படியே அமைதியாய் உட்காரு” என்றான். ஆயினும் தேவ ஆவியானவரோ, “எழுந்திரு” என்றார். எனவே அவர்கள் கீழ்ப்படிதலோடு நடந்து வந்து இங்கே பீடத்தண்டை நிற்கிறார்களே. இப்பொழுது, “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். நீங்கள் வந்து திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். என் கிருபை உனக்குப் போதும். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்ற உம்முடைய வார்த்தையையே நான் உம்மிடத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். பிதாவே, அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய வார்த்தையின் வெற்றிச் சின்னங்களாய் இருக்கிறார்கள். அவர்கள் இங்கே வார்த்தையின் தண்ணீரினால் கழுவப்படுதற்காகவே இருக்கிறார்கள், ஏனென்றால் இது முழு சுவிசேஷமாயுள்ளது. இது எந்தக் காரியத்தையும் அழிக்காமல் விட்டுவிடுகிறதில்லை. அது சிறுவருக்கான விளையாட்டு முறைக் கல்விப்பள்ளியான ஸ்தலத்திற்கு அழைத்துவரும்படி அடியோடு வெட்டப்படுகிறது. அது வேர்களை, கசப்புத்தன்மையின் வேர்களை, வேண்டாவெறுப்பின் வேர்களை, உலகத்தின் வேர்களைத் தோண்டி வெளியேயெடுத்துவிடுகிறது. கர்த்தாவே, பரிசுத்த ஆவியினால் அவர்களை தோண்டியெடும். இந்த ஜனங்களிடத்திலிருந்து அவைகளை எறிந்துபோடும். 125இயேசுவே அவர்கள் உம்முடையத் தனிப்பட்ட சொந்தப் பொக்கிஷமாக, உம்முடையக் கிரீடத்தில் இரத்தினங்களாக, உம்முடைய மணவாட்டியின் அங்கத்தினர்களாக இருக்கும்படிக்கு இன்றிரவே உமக்காக அவர்களை உரிமைக் கோருகிறேன். நான் அவர்களுடைய ஜீவியங்களை உரிமைக் கோருகிறேன். நான் இந்த ஜீவனுள்ள தேவனுடைய ஊழியக்காரர்களாகிய இந்த ஊழியர்களோடு சேர்ந்து என் முழு இருதயத்தோடு ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நீர் அவர்களிடத்திலிருந்து உலகத்தின் காரியங்களை எடுத்துப்போட்டு, சாத்தானின் முகத்திற்கு முன்பாக நிற்கும்படியாக தைரியத்தை அவர்களுக்குத் தர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அதை அருளும். நீர் அதைச் செய்வீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீரோ, “என் நாமத்திலே பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்” என்றீர். இப்பொழுது, நீரோ, “ஹு, நான் ஒருக்கால் அதைச் செய்வேன்” என்ற ஒருபோதும் கூறவேயில்லை. ஆனால் நீர், “நான் அதைச் செய்வேன்” என்றேக் கூறினீர். அது உண்மையென்றே நான் விசுவாசிக்கிறேன். 126இப்பொழுது வேதவாக்கியங்களில், “என் நாமத்திலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்” என்றும் கூட எழுதப்பட்டிருக்கிறது. ஒரு வாலிபப் பெண்மணியை அல்லது ஒரு ஸ்திரீயை சிறைப்படுத்தி அவளுடைய வாழ்க்கையை சீர்க்குலைப்பது ஒரு பிசாசாயிருக்கிறது. கர்த்தாவே, நான் என்னுடைய ஜெபத்தில் இந்தச் சிறு கதையை மேற்கோள் காட்டுவேன். இவர்கள் ஒவ்வொருவரும் இராஜ்ஜியத்தின் இரத்தினங்களாக இன்றிரவே உரிமைகோரப்படுவார்களாக என்ற என் ஜெபத்திற்கு செவிகொடுத்து பதிலளிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் வந்திருக்கிறார்கள். நான் என்னுடைய வார்த்தைகளுக்காக இன்றிரவு பதில் கூற வேண்டியவனாயிருக்கிறேன். அவர்கள் இங்கே கிறிஸ்துவின் பட்சத்தில் தங்களுடைய ஸ்தானத்தை தெரிந்து கொள்ளும்படியாகவே என்னோடு நிற்க வந்துள்ளனர். 127இப்பொழுது சாத்தானே, நீ இதில் தோற்றுப் போய்விட்டாய். நீ இவர்களில் ஒரு சிலரைப் பின்னாகவே பிடித்து வைத்துக் கொண்டாய், ஆனாலும் நீ யுத்தத்தில் ஜெயம் பெறவில்லையே. இயேசுவானவரோ, “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்றாரே. சாத்தானே, நான் உனக்குக் கூறுகிறேன், அதாவது ஒரு நாள் தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறு பையன் இருந்தான். அப்பொழுது ஒரு சிங்கம் மந்தைக்குள்ளே புகுந்து, அந்த ஆடுகளில் ஒன்றை கவ்வி, அதை வெளியேக் கொண்டு சென்று, கொடுமையாய்க் கொன்று அதை விழுங்கப் போவதாயிருந்தது. ஆனால் இந்த உண்மையான சிறு மேய்ப்பன், அவன் ஒரு கவணைத் தவிர வேறொன்றையும் மிகப்பெரிய அளவில் வைத்திருக்கவில்லை. ஆனால் அவன் ஜீவனுள்ள தேவனில் விசுவாசங்கொண்டிருந்தான். எனவே அவன் அந்தச் சிங்கத்தைப் பின்தொடர்ந்து சென்று, அதைப் பற்றிப் பிடித்து, கொன்றுப்போட்டான். அது அவனுக்கு எதிராகப் பாய்ந்தெழுந்தபோது, அவன் அதனுடைய தாடியைப் பற்றிப்பிடித்து, அதைக் கொன்றுப்போட்டான். பின்னர் அவன் அந்தச் சிங்கத்தினுடைய வாயிலிருந்த ஆட்டைக் கைப்பற்றி, அதனுடைய சுகமளித்தலுக்காக அதைத் திரும்ப மேய்ச்சலுள்ள புல் வெளியண்டைக்குக் கொண்டு வந்தான். 128நீ இந்த விலையேறப் பெற்ற தேவனுடைய ஆடுகளை, இந்தப் பெண்மணிகளை சிறைப்பிடித்து, அவர்கள் தங்களுடைய தலைமுடியைக் குட்டையாக வெட்டிக்கொள்ளவும், முக ஒப்பனை அலங்காரங்களைச் செய்துகொள்ளவும் காரணமாயிருந்து, வேதாகமம் கண்டித்துரைக்கிறக் காரியங்கள் காணப்படும்படியாகச் செய்து, நீ அவர்களைப் பிடித்துவிட்டதாக எண்ணிக்கொண்டாய். ஆனால் நானோ இந்த எளிமையான சிறு ஜெபக் கவணோடு வருகிறேன். நான் இன்றிரவே அவர்களைத் திரும்பக் கொண்டுவந்துகொண்டிருக்கிறேன். நீ அவர்களை இனி ஒருபோதும் பற்றிப் பிடித்து வைத்திருக்க முடியாது. நீ யுத்தத்தில் தோற்றோடிப் போய்விட்டாய். இந்த விலையேறப்பெற்ற மனிதர்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள், எனவே தேவ ஆட்டுக்குட்டிகளை, அவைகளை கட்டவிழ்த்துவிடு. நாங்கள் உனக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டளையிடுகிறோம். நான் இந்தக் கெட்ட பழக்க வழக்கங்கள், கோபங்கள். ஒழுக்கக்கேடானவைகள் மற்றும் அது என்னவாயிருந்தாலும் அவர்களுக்கும் அந்தக் காரியங்களுக்கும் இடையே விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை வைக்கிறேன். நீ அவர்களை இனி ஒருபோதும் பிடித்துக்கொள்ளவே முடியாது. அவர்கள் பிதாவினுடைய மேய்ச்சலில் இருக்கிறார்கள். அவர்கள் அவருடையப் பிள்ளைகளாயிருக்கிறார்கள். அவர்களிடத்திலிருந்து விலகிப்போ. நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உனக்கு கட்டளையிடுகிறேன். 129நீங்கள் அதை விசுவாசிப்பீர்களேயானால், நரகத்தில் உங்களைத் தொடக்கூடிய பிசாசு ஒன்றுகூட இல்லை. நீங்கள் இரத்தத்தினால் மூடி மறைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் சுவிசேஷ ஊழியர்களின் ஜெபத்தினால், உடன்படிக்கையின் தூதர்களின் ஜெபத்தினால் சூழப்பட்டிருக்கிறீர்கள். இங்கே நின்று கொண்டிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும், அதாவது நீங்கள் கொண்டிருந்த கெட்ட பழக்க வழக்கங்கள், தவறுகள், அந்தக் காரியங்களைக் குறித்து நீங்கள் வெட்கமடைந்திருந்ததை அறிந்துள்ள நீங்கள் இங்கே வாருங்கள். நீங்கள் இப்பொழுது அவைகளைத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வெண்கல பலிபீடத்தின் மேல் வைத்து, உங்களுடைய மன்னிப்பை, கிறிஸ்துவே அதை உங்களுக்கு அளிக்கிறார் என்று அதை இப்பொழுது ஏற்றுக்கொண்டு, உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “நான் அதை இப்பொழுதே ஏற்றுக்கொள்கிறேன். அது போய்விட்டது. இந்நாள் முதற்கொண்டு நான் அதை மீண்டும் ஒருபோதும் செய்யவே மாட்டேன்” என்று கூறி விசுவாசத்தினால் உங்களையே அந்தப் பலியாக அளிப்பீர்களா? நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆமென். ஆமென். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. இந்தக் குழுவினரோடு வந்து சேர்ந்துகொள்ள விரும்புகிற எவரேனும் இன்னும் உண்டா? 130இந்தக் கட்டிடத்தில் சுகவீனமாயிருக்கிற எவரேனும் இந்த நேரத்தில் ஜெபத்திற்காக நிற்கும்படி விரும்புகிறீர்களா? எழும்பி நில்லுங்கள். இங்குள்ள நீங்கள் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு நல்ல முழு சுவிசேஷ சபையின் ஓர் அங்கத்தினராயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அவ்வாறில்லையாயின் அந்தவிதமான ஒரு சபைக்கு செல்லுங்கள், நீங்கள் இங்கு அருகில் வசித்து வந்தால், உங்களால் முடிந்தால் இந்தச் சபைக்கு வாருங்கள். மேய்ப்பரைச் சந்தித்து, ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அதன்பின்னர் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமலிருந்தால், தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியை அளித்து, உங்களை நிரப்பி, உங்களை மணவாட்டியின் ஓர் அங்கத்தினராக்க ஜெபியுங்கள். சகோதரர்களே, சுகவீனமாயிருக்கிற ஜனங்களை அங்கே பக்கத்தில் நோக்கிப்பாருங்கள். பிசாசு அந்த ஜனங்களைப் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. இது கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக்கிற நேரமாய் உள்ளது. அல்லேலூயா! நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள். — ஆசி.] அப்படியானால் நாம் நம்முடையத் தலைகளை ஜெபத்திற்காகத் தாழ்த்துவோமாக. 131சுகவீனமடைந்து அங்கு நின்று கொண்டிருக்கிற ஜனங்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடையக் கரங்களை ஒருவர் இன்னொருவர் மீது வையுங்கள். இயேசு கிறிஸ்து, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். உங்களுடையக் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் உங்களுக்காக ஜெபிக்காதீர்கள். நீங்கள் உங்களுடையக் கரத்தை வைத்துள்ள அடுத்த நபருக்காக நீங்கள் ஜெபியுங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் இப்பொழுது ஒன்றுசேர்ந்து ஒரு கிறிஸ்தவ சபையாக ஜெபிப்போமாக. 132கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் இன்றிரவு ஜெபத்திற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆத்துமாக்கள் உம்மண்டை வருகின்றன. இப்பொழுது பிசாசு உம்முடைய ஆடுகளில் சிலவற்றை சுகவீனத்தினால் கொண்டுபோய் விட்டிருக்கிறான். நாங்கள் அவைகளை உரிமைக்கோரி திருப்பிக் கொண்டு வரும்படிக்கு வருகிறோம். ஒரு ஜீவனுள்ள தேவனுடைய சபையாயிருக்கின்றபடியால், நாங்கள் பிசாசைக் கடிந்து கொண்டு, “சாத்தானே, சுகவீனமான இந்த ஜனங்களை கட்டவிழ்த்து விடு. நாங்கள் உனக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டளையிடுகிறோம், அதாவது அவர்கள் சுகமடைவார்களாக” என்று கூறுகிறோம். வேதம், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று கூறியுள்ளது. அது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது, அது உண்மை என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் குணமடைந்திருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் அதை விசுவாசிப்பீர்களேயானால், உங்களுடையக் கரங்களை உயர்த்தி அவருக்கு துதி செலுத்துங்கள். ஆமென். சரி, மேய்ப்பரே, இவை யாவும் உங்களுடையதாயுள்ளன. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு உங்களோடிருப்பது மிகவும் அருமையாயுள்ளது. தேவன் உங்களோடிருப்பாராக. இங்குள்ள சகோதரரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.